கன்னட மக்கள் அதிகம் விரும்பி அருந்தும் கோகும் சூப்
தேவையான பொருட்கள்
உயர் கோகும் பழங்கள் 10
நெய் – 2 தேக்கரண்டி
எள் – 2 தேக்கரண்டி
கறிவேப்பிலை 10-&15 இலை
கருமிளகுப் பொடி விரலிடுக்கு அளவு
உப்பு தேவையான அளவு
சர்க்கரை 2 தேக்கரண்டி
நீர் 500 மி.லி.
செய்முறை
உலர்ந்த கோகும் பழங்களை நீரில் விட்டு குறைந்த வெப்பநிலையில் 15 நிமிடங்கள் வரை சூடுபடுத்தவும். மேற்கூறிய சூடுபடுத்திய நீர் கருஞ்சிகப்பு நிறம் வந்தபின்பு வெல்லம், உப்பு இரண்டையும் சேர்த்து கலந்து கொள்ளவும். அடுப்பை அணைத்துவிட்டு நெய் மற்றும் கறிவேப்பிலையை சேர்த்துக் கொள்ளவும். பின் மிளகுப் பொடியை சேர்த்துக் கொள்ளவும். இப்பொழுது அருந்துவதற்கு சூப் தயார். மேற்கூறிய சூப் சிறந்த பசித் தூண்டியாகவும், செரிமானச் சக்தி உடையதாகவும் கருதப்படுகிறது. மழைக் காலத்தில் சிறந்த சூப்பாக பயன்படுகிறது. சளித் தொந்தரவினை நீக்கி விடுகிறது. தொண்டையில் சளி காணப்பட்டு கரகரப்பு தோன்றுவதை குணப்படுத்துகிறது. முச்சுத் துவார அடைப்பை நீக்குகிறது. சுவை உணவைத் தூண்டுகிறது. உடலில் சேரும் கொழுப்பை கரைப்பதில் மிகச் சிறந்த உணவாகவும், மருந்தாகவும் பயன்படுகிறது. ஆனால் இதனை தினசரி உணவில் சேர்க்கக் கூடாது. கடற்கரையோர கர்நாடகப் பகுதிகள், கோவா மற்றும் மகாராஷ்டிராவில் கோகும் பழங்கள் அதிகம் கிடைக்கின்றன.