மாதம் ஒரு முறை இந்த சுவையான காயை சாப்பிடுங்கள்

Spread the love

கொடிக்காயின் மருத்துவ பயன்கள்

கொடிக்காய் என கூறினால் அதிகமனாவருக்கு தெரியாமலே இருக்கலாம். கொடுக்காபுளி இல்லை கொரிகளிக்காய் என சொன்னதும் எல்லாருக்கும்  உடனே ஞாபகம் வரும். சென்னையில் ஒரு சில பள்ளிக்கு வெளியே இதை விற்பனை செய்வார்கள். கிராமத்தில் அதிகமாகவே கிடைக்கும்.இந்த கொடிக்காயில் இருக்கும் நன்மைகளை  தெரிந்துகொள்ளலாம்.சிறு வயதில் பள்ளி ரோட்டில் ஒரு சிறிய கடை வைத்து இந்த கொடிக்காய் விற்றிருப்பார்கள்.

அதற்கு பின்னால் வெறும் வியாபாரம் மட்டும் இல்லை. மருத்துவமும் இருக்கின்றது. சிறு குழந்தைகள் இதை சாப்பிடுவது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து நீர்கடுப்பு, ஆஸ்துமா போன்ற பிரச்சனைகள் வராமலும் அதை குணப்படுத்தவும் செய்கிறது இந்த கொடிக்காய். கொடிக்காயோடு உப்பு, மிளகு, சேர்த்து தண்ணீர் விட்டு கசாயம் தயாரித்து தினமும் குடித்து வந்தால் தீராத மூட்டு வலி, பல்வலி குணமாகும். குறிப்பாக இதன் இலையை வைத்து தயாரிக்க கூடிய கசாயம், ஆண், பெண் மலட்டுத்தன்மையை குணமாக்கும்.இதில் இருக்கும் விதை அல்சரை குணமாக்க பயன்படுவதாகும் என ஆய்வுகள் சொல்லுகிறது.

இதில்வைட்டமின் C, வைட்டமின் A, பொட்டாசியம், சோடியம், இரும்பு சத்து, புரோட்டீன், நார்ச்சத்து, தைமின், நியாசின், கொழுப்பு இதோடு நியுட்ரியோஸ் மதிப்பு மிகவும் சிறப்பாக இருக்கிறது. சர்க்கரை நோயாளிக்கு ஒரு முக்கிய மருந்துபொருள் இந்த கொரிகளிக்காய். சர்க்கரை நோயாளிகள் எடுத்துக்கக்கூடிய 3௦% மருந்தின் பயன் இந்த கொடிக்காயில் அடங்கியிருக்கிறது.தினமும் 3 கொடிக்காயை சாப்பிட்டால் எழும்பு பலவீனம், ரத்த சோகை நீங்கும். இதன் இலையில் இன்சுலினுக்கு நிகரான சத்து அடங்கியிருக்கிறது.
இதன் பூக்கள் ஒரு கைப்பிடி எடுத்து அதனுடன் மிளகுபொடி, சீரகம், நாட்டு சர்க்கரை, சிறிதளவு தண்ணீர் சேர்த்து கசாயம் செய்து குடித்தால் செரிமானம் சீராகி வயிற்று உப்புசம், வயிற்று வலி, வாயு போன்ற பிரட்சனைகளுக்கு சிறந்த பலன் கிடைக்கும்.

ஆயுர்வேதம்.காம்  


To Buy Our Herb Products >>>


Spread the love