குளிரும் மூட்டுவலியும்

Spread the love

குளிர், பனிகாலம் மூட்டுவலி நோயாளிகளுக்கு ஒரு கெட்ட காலம் என்று கூறலாம். ஏனெனில் குளிர் காலத்தில் உடல் உஷ்ணம் குறைவதாலும் நரம்புகள் பிடிப்பதாலும், தசை நார்கள் இறுக்கம் அடைவதாலும் மூட்டுகள் பாதிப்படைகின்றன. அசையும் மூட்டுகள் எளிதாக இயங்கிட முடிவதில்லை. மூட்டுகளின் இயக்கம் தடைபடுவதால் மூட்டுவலியால் மன உளைச்சல் என பிரச்சனை அதிகரிக்கின்றன. இயலாமை மேலோங்குகின்றது. குளிர்காலம் வந்தாலே மூட்டுவலி நோயாளிகளுக்கு பயமும் சேர்ந்து வந்து விடுகின்றது.

மூட்டுவலிகளில் பல வகைகள் உள்ளன. அவற்றிற்கு எளிய தீர்வுகளை தருகின்றோம். இவற்றைக் கடைபிடித்தால் குளிர்காலத்தில் மட்டுமல்ல பிற நாட்களிலும் மூட்டுவலியின் பாதிப்பு அதிகமில்லாமல் தப்பலாம். பழ உணவுகளை மட்டுமே உண்டு வந்தால் 30 நாட்களில் எத்தகைய மூட்டுவலியும் மறையும். தினசரி மூட்டுகளுக்கும் கால் விரல்களுக்கும் பயிற்சி கொடுத்து வர மூட்டுவலி மறையும்.

மூட்டுகளின் உஷ்ணத்தைக் குறைக்க மூட்டுகளில் ஈரத்துணியை 30 நாட்கள் சுற்றி வர மூட்டுவலி மறையும். எண்ணெய் இல்லாத உணவுகளை உண்டு வர மூட்டுவலி மறையும். வெள்ளைப் பூண்டு மற்றும் முடக்கத்தான் கீரையை தினசரி உண்டு வர மூட்டுவலி மறையும்.

யோகாசனங்களை தொடர்ந்து செய்து வர மூட்டுவலி மறையும்.

தினசரி ஒரு வேளை இயற்கை உணவினை உண்டு வர யூரிக் அமிலம் குறையும் மூட்டுவலி மறையும். மாதுளையும், பேரீச்சையும் இரத்த சோகையால் ஏற்படும் மூட்டு வலியைப் போக்கிடும்.

முருங்கையிலையும் முடக்கத்தான் கீரையும் நரம்பு வலிகளை போக்கிடும். வாத நாரயண இலை ‘கௌட்டு’ (நிஷீut) போன்ற மூட்டுவலிகளைப் போக்கிடும். வெண்பூசணிச்சாறு, நெல்லி, கொள்ளு ரசம் போன்றவை உடல் எடை அதிகரித்ததால் வரும் மூட்டுவலியைப் போக்கிடும்.

அஜீரணத் தொல்லையால் ஏற்படும் மூட்டு வலியை மூலிகை டீ, கொத்தமல்லி துவையல், இஞ்சிச் சாறு போன்றவை போக்கிடும்.

கோசு, முந்திரி, தேங்காய் உணவுகள் எலும்பு மஜ்ஜை சத்துக் குறைவால் ஏற்படும் மூட்டு வலியைப் போக்கிடும்.

வெள்ளைப் பூண்டு சூப்பும், கொள்ளுப் பாலும் வாய்வுத் தொல்லைகளால் ஏற்படும் மூட்டுவலியைப் போக்கிடும்.

தினசரி நடைப்பயிற்சி, மூட்டுவலிக்கு ஓர் அற்புத மருந்தாகும்.

சரியான உடல் எடை மூட்டு வலியை அண்ட விடாது. 

மூட்டுவலி வந்த பின் போராடுவதை விட வருமுன் மேற்சொன்னவற்றை பின்பற்றி மூட்டுவலி வராமல் பார்த்துக் கொள்ளலாமே!


Spread the love