சமையல் கற்றுக் கொள்பவர்களுக்கு சில டிப்ஸ்

Spread the love

இக்கால பெண்கள் கல்யாணம் நிச்சயமானவுடன், எங்கே போய் சமையல் கற்றுக் கொள்வது என்று தேடி அலைந்து, கடைசியில் யூடியூப் பார்த்து சமையல் கற்க ஆரம்பிக்கின்றனர். அப்படி சமைக்கும் பொழுது கவனமாக இருக்க சில யோசனைகள்.

இன்றைய நவீன யுகத்தில் மிக்ஸி, கிரைண்டர், அவண் என ஒவ்வொரு வேலைக்கும் ஒரு மின் சாதனம் வந்து விட்டது. அதை எப்படி சரியாக பயன்படுத்துவது? பயன்படுத்தும் போது என்னென்ன செய்ய வேண்டும் என்னென்ன செய்யக்கூடாது என்ன்பது மிக முக்கியம்.

எல்லா மின்சாதனங்களும் எப்போதும் ஒரே மாதிரியாக இருக்காது

முதலில் சமையல் அறையில் இருக்கும் மின் சப்ளையைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும். சுவிட்ச்சுகள் சரியாக இருக்கினறனவா, சரியான இடங்களில், எளிதாக அணுகும் முறையில் இருக்கிறதா என்று பார்த்துக் கொள்ள வேண்டும். சிலிண்டர் தேவையான அளவு இருக்கிறதா என்று சோதிக்க வேண்டும். முடிந்தால் சமையலறையில் உள்ள அனைத்து மின் சாதனங்களுக்கும் ஸ்டெபிளைசர் வைக்க வேண்டும். இதனால், மின்சாரம் அனைத்து மின் சாதனங்களுக்கும் சீராக கிடைக்கும். 

மிக்ஸி

இன்று அனைத்து வீடுகளிலும் மிக்ஸி வந்து விட்டது. அந்த காலத்தில் அம்மியை வைத்து அரைமணி நேரம் மாங்கு மாங்கென்று அரைத்த தேங்காயை இன்று மிக்ஸியின் உதவியால் ஐந்து நிமிடத்திற்குள் அரைத்து தேங்காய் சட்னி வைத்து விடுகிறோம்.

மிக்ஸியை முதல் முதலில் பயன்படுத்தப் போகிறீர்களா?

1.            முதலில் ஜார் துரு ஏறாமல் இருக்கிறதா என்று பாருங்கள். சில மிக்ஸிகள் சந்தையில் ஸ்டைன்லெஸ்ஸில் கிடைக்கிறது. அதை வாங்கி உபயோகப்படுத்துங்கள்.

2.            மிக்சியில் அரைக்கும் பொழுதோ சுவிட்சை ஆஃப் செய்யாமல் கையை ஜாருக்குள் விடக் கூடாது. திடீரென்று, மிக்ஸியின் மோட்டாரினும் இணைப்பு சென்றால், மிக்ஸி ஓட ஆரம்பித்து விடும். இந்த நேரத்தில் கையை உள்ளே விட்டால் கண்டிப்பாக விரல்கள் துண்டாகும். இதை தவிர்க்க, ஜாரை கீழே இறக்கி வைத்து விட்டு கையை விடவேண்டும்.

3.            மிக்ஸியினுள் ஆறிய உணவுகளைத் தான் போட வேண்டும்.

4.            கூழான உணவுகளை அரைத்துக் கொண்டிடே இருக்கக் கூடாது. இவைகளுக்கென்று தனியாக மத்து வைத்து கொள்ளவும்.

5.            கொதிக்கும் குழம்புகளை அரைத்தால் மூடி தெறித்து, நம் மீது காயம் பட நேரிடும்.

6.            மிக்ஸி மிகவும் அதிர்ந்தால் மோட்டாரில் பழுது இருக்கிறது என்று அர்த்தம்.

7.            தண்ணீர் கசிந்தால் ஜாரில் பிரச்சனை இருக்கின்றது என்று அர்த்தம்.

8.            கிரைண்டர்

9.            இதை எப்போதும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். வேலை முடிந்ததும், சுத்தமான துணியைக் கொண்டு மூடி வைக்க வேண்டும். கிரைண்டர் சுத்தமில்லாமல் இருந்தால், நாம் அரைக்கும் மாவை உண்பதற்கு பூச்சிகள், கொசுக்கள் கரப்பான் பூச்சிகள் போன்றவை கல்லில் வந்து உட்காரும். மாவை அரைக்கும் பொழுது ஏதேனும் சத்தம் கேட்டால் உடனே நிறுத்திவிட வேண்டும். கீழே இருக்கும் பெல்ட்டை உடனே சரி செய்ய வேண்டும். மாவை அரைக்க வெகு நேரம் எடுத்துக் கொள்ளும் கிரைண்டரில் மோட்டார் பழுது ஏற்பட்டிருக்க வாய்ப்பு. அதிகம் சூடான பொருட்களை அரைப்பது கூடாது.

குளிர்சாதன பெட்டி

ஃப்ரீஸரில் ஐஸ் அதிகமாக் சேர்ந்தால் அதை அடிக்கொரு முறை சுத்தம் செய்ய வேண்டும். மாறாக விட்டு வைத்தால் கொசுக்கள், கரப்பான் பூச்சிகள் அடைந்து விடும்.

அதிக முறை குளிர்சாதனப் பெட்டியை திறக்க கூடாது. கதவு எப்போதும் திறந்தே இருக்கக் கூடாது. வெயில் நேரங்கள், மழை நேரங்கள் என்பதை பொறுத்து குளிர்சாதன பெட்டியின் வெப்ப நிலையை மாற்றியமைத்து கொண்டால் மின்சாரம் மிச்சப்படும். ஒவ்வொரு நாளும் குறைந்தது 2 மணி நேரத்திலிருந்து 3 மணி நேரம் வரை நிறுத்தி வைத்தால், குளிர்சாதன பெட்டியின் ஆயுள் அதிகரிக்கும்.

குளிர்சாதன பெட்டியின் ஒவ்வொரு மூலையிலும் வெட்டிய எலுமிச்சைப் பழத்தை வைத்தால் துர்நாற்றம் விலகும். கிருமிகள் அண்டாது.

அவண்

இதில் எண்ணெயை அதிகமாகப் பயன்படுத்தக் கூடாது. கையுறைகளை அணிதல் வேண்டும். இதனால், அவணுக்குள் இருந்து வெளிவரும் கதிர்வீச்சு பாதிப்பு இருக்காது. சமைத்த உணவை அரை மணி நேரம் கழித்து உண்ண உடல் நலம் பாதிக்காது. முழுவதும் சுத்தம் செய்த பின்னர் அடுத்தடுத்துப் பயன்படுத்த வேண்டும்.

வீட்டுப் பாத்திரங்கள்

செம்புக் குவளை, மண்பானைகள், மண்ணால் செய்யப்பட்ட குவளைகளை பயன்படுத்ததுதல் நல்லது. எக்காரணங்களைக் கொண்டும் நவீன பொருட்களான நான்ஸ்டிக் தவாக்களை பயன்படுத்துதல் கூடாது.

1.            பாத்திரங்களை கூரான, கடுமையான பொருட்களைக் கொண்டு சுத்தம் செய்தல் கூடாது.

2.            பாத்திரங்களை சுத்தம் செய்ய பயன்படுத்தும் பொருட்களை வாரத்திற்கொரு முறை மாற்ற வேண்டும்.

3.            பித்தளை, செம்பு, அலுமினியம் போன்ற பாத்திரங்களை எலுமிச்சை கொண்டு தான் துலக்க வேண்டும்.

ஆயுர்வேதம்.காம்


Spread the love