கலோரியும் கிலோஜீல்ஸ்ம்

Spread the love

வெளிநாட்டுப் பத்திரிக்கைகள் பலவற்றிலும் உணவு மதிப்புகள் பற்றிக் குறிப்பிடும்போது கிலோஜீல்ஸ் (Kilojoules) என்று குறிப்பிடுகிறார்கள். இது அண்மைக்காலமாகப் பயன்பாட்டிற்கு வந்துள்ள ஒரு சொல், நமக்குப் பரிச்சயமான நாம் இதுவரை பயன்படுத்தி வந்த கலோரி என்ற சொல்லுடன் இதன் ஒப்பீடு என்ன? இதனடிப்படையில் உணவு மதிப்பை எவ்வாறு கணக்கிடுவது என்பது பற்றிய விளக்கம்.

நாம் உண்ணுகின்ற உணவு, மாவு, புரதம், கொழுப்பு விட்டமின், மணிச்சத்து, தண்ணீர் என ஆறுவகைப்படும். இவ்வகை உணவுகளிலிருந்து நாம் பெறுகின்ற சக்தி வெப்ப அலகீட்டால் அளவிடப்படுகிறது. இந்த அலகுதான் கிலோ கலோரி Kilocalorie அல்லது கலோரி (calorie) எனப்படுகிறது. ஒரு கிலோ கலோரி வெப்பம் என்பது ஒரு கிலோ தண்ணீரை 14.5 சென்ட்டிகிரேட்டில் இருந்து 15.5 சி க்கு உயர்த்த தேவையான வெப்பமாகும்.

சில ஆண்டுகளுக்கு முன்னதாக உணவின் சக்தி அளவிடுவதில் மெட்ரிக்முறை அமுல்படுத்தப்பட்ட போது கலோரிக்குப் பதிலாக ஜீல்ஸ் பயன்பாட்டிற்கு வந்தது. அந்த அடிப்படையில் கிலோ கலோரி ஜீல்ஸ் ஆக மாறியது, ஏறக்குறைய ஒரு கிலோ கலோரி 4.2 கிலோ ஜீல்ஸ்க்கு இணையானது. இதுவரை Kcal என்று குறிப்பிடப்பட்டுவந்தது ரிழீ என்று தற்போது குறிப்பிடப்படுகிறது.

இப்புதிய மெட்ரிக் முறைப்படி உணவுப் பொருட்களின் சக்தி மதிப்பு எவ்வளவு என்று கீழே காணலாம்.

தோராயமான அளவுகள்

புரதம் _ 1 கிராம் _ 4 கலோரி _ 17 கிலோஜீல்
மாவு _ 1 கிராம் _ 4 கலோரி _ 16 கிலோஜீல்
கொழுப்பு _ 1 கிராம் _ 9 கலோரி _ 37 கிலோஜீல்

இவை தவிர விட்டமின்களும், மணிச்சத்தும், தண்ணீரும் கலோரி எதையும் நமக்குத் தருவதில்லை. ஆயினும் அவை உடலின் செயல்பாட்டிற்குத் தேவையான உயிர்ப்பொருள்களைத் தருகின்றன.

நாம் உண்ணும் உணவில் 50% மாவுப்பொருட்களால் ஆனது. இதில் பெரும்பகுதியை சர்க்கரை (Sugar) ஆக்கிரமித்துக் கொள்கிறது. சர்க்கரை வெறும் எரிசக்தியை மட்டுமே தருகிறது. அதில் விட்டமின்களோ வேறு சத்துப் பொருட்களோ எதுவுமில்லை. இதன் காரணமாகவே ஜீனி தரும் கலோரியை வெற்றுக் கலோரிகள் என்கிறார்கள்.

மனிதர்களின் தினசரி சராசரி உணவுத் தேவைகள்

குழந்தைகள்    கிலோஜீல்ஸ்
1_3                           5400
4_6                           7500
7_10                         10,000

ஆண்கள்

11_14         12,000
15_18         12,600
19_22          12,600
23_50          11,300
51*              10,000

பெண்கள்

11_14          10,000
15_18           8,800
19_22           8,800
23_50           8,400
51*               7,500


ஆயுர்வேதம்.காம்

To buy our herb products >>>


Spread the love