குழந்தைகளின் சருமம் மிகவும் மென்மையானது. எனவே குழந்தைகளின் அழகை பாதுகாப்பது பெற்றோரின் கடமையாகும். இன்றைய கால கட்டத்தில் குழந்தைகளுக்கென்று தனியாக சோப்பு, பவுடர் மற்றும் லோஷன்கள் என பலவகை உள்ளன. இவைகள் பாதுகாப்பானது என்று கூறப்பட்டாலும், அவற்றில் உள்ள இரசாயனங்கள் குழந்தைகளுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்துகிறது. எனவே இயற்கையான முறையில் வீடுகளில் உள்ள சில பொருட்களையே நாம் குழந்தைகளின் அழகுக்கு பயன்படுத்துவது சிறந்ததாகும். இதனால் குழந்தைகளின் அழகையும், சருமத்தையும் பாதுகாப்பாகவும், ஆரோக்கியமாகவும் வைக்கலாம். குழந்தைகளின் சருமத்தில் க்ரீம், லிப்டிக் கொண்டு மேக்கப் செய்வதை தவிர்ப்பதும் நல்லது.
குழந்தைகளின் அழகை மேம்படுத்த:
இயற்கையாக நாம் சாப்பிடும் உணவுகளை கொண்டே குழந்தைகளின் அழகையும், ஆரோக்கியத்தையும் பாதுகாக்கலாம். குழந்தைகளுக்கு நல்ல சத்துள்ள உணவுகளை தேர்ந்தெடுத்து அவற்றை கொடுப்பது அவசியமானதாகும். காய்கறிகள், பழங்கள், நட்ஸ், முழு தானியங்கள், ஆகியவற்றை அதிகளவில் கொடுத்தால், அவர்களது ஆரோக்கியம் மேம்பட்டு, அழகும் அதிகரிக்கும். junk foods முழுமையாக நிறுத்த முடியவில்லை என்றாலும், குறைந்த அளவு உண்பது நல்லது.
தூக்கம் என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் அவசியமான ஒன்றாகும். நாம் நம்முடைய குழந்தைகளை சரியான நேரத்தில் தூங்க வைப்பதில் கவனம் செலுத்துவது அவசியம். தூங்குவதால், மூளை வளர்ச்சி நன்றாக இருக்கும். இதனால் அவர்கள் அழகும் அதிகரிக்கும். இது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்ட ஒன்றாகும்.
குழந்தைகளின் முடிக்கு mild ஷாம்பூ பயன்படுத்துவது நல்லது. தினமும் தலை சீவி சுத்தமாக வைக்கவும். குழந்தைகளின் தலை மற்றும் உடலிற்கு ஆலிவ் ஆயில் தடவி மசாஜ் செய்வது நல்லது. குளிக்கும் போது சோப்பிற்கு பதிலாக கடலைமாவு பயன்படுத்துவது நல்லது.
குழந்தைகளை வெளியில் விளையாட விடலாம், சூரிய கதிர்கள் மிகவும் நல்லது. ஆனால் மதியம் 12 மணியில் இருந்து மாலை 4 மணி வரை மட்டும் வெளியில் விளையாட விடாதீர்கள், ஏனென்றால் அந்த நேரத்தில் தான் uஸ் கதிர்கள் சூரியனில் இருந்து வரும். இது குழந்தைகளின் சருமத்தை பாதிக்கும்.
பளபளக்கும் சருமம்:
குழந்தைகளின் சருமத்திற்கு தேவையான பவுடரை வீட்டிலேயே தயாரிக்கலாம். பூலாங்கிழங்கு, ரோஜா இதழ், கடலை மாவு இவை ஒவ்வொன்றிலும் 100 கிராம், ஆவாரம் பூ, கஸ்தூரி மஞ்சள் இவை ஒவ்வொன்றிலும் 50 கிராம், இவை அனைத்தையும் நன்கு சுத்தம் செய்து வெயிலில் காய வைக்கவும். பின் இவையனைத்தையும் ஒன்றாக அரைத்து பவுடராக்கவும். இந்த பவுடரை தேங்காய் பாலில் குழைத்து குழந்தைகளின் உடல் முழுதும் தேய்க்கவும். இவ்வாறு தொடர்ந்து செய்தால் சருமம் பளபளப்பாக மாறுவதை காணலாம்.
ஆறு மாதங்கள் கழித்து குழந்தைகள் வளரும் பருவத்தில் அவர்களது சருமம் மற்றும் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த தினமும் ஒவ்வொரு விதமான காய்கறி மற்றும் பழங்களை நன்றாக மசித்து சாப்பிடக் கொடுக்கவும். சமைக்கும் போது கருவேப்பிலையை அரைத்து பயன்படுத்தினால் நல்லது. இதன் சத்து எளிதில் உடம்பில் சேரும்.
தோல் மிருதுவாக:
குழந்தைகளை குளிக்க வைக்கும் போது அந்த தண்ணீரில் சிறிது ரோஜா இதழ்களை சேர்த்து, 2 மணி நேரம் கழித்து அந்த நீரில் குழந்தைகளை குளிக்க வைக்கவும். இதை தொடர்ந்து செய்து வந்தால், குழந்தைகளின் சருமம் மிருதுவாக, புத்துணர்ச்சியுடன், இயற்கை மனமாக இருப்பதை காணலாம்.
ஜோ.கிங்ஸ்லின