சிறுநீரக கற்கள்

Spread the love

உலகெங்கும் கற்கள் பரவியுள்ளன. ஆனால் உடலில் உண்டாகும் கற்கள் உபாதைகளை உண்டாக்கும். சிறுநீரகங்களில் கற்கள் காணப்படுவது சர்வ சாதாரணமான கோளாறாக ஆகிவிட்டது. உடல் கற்களை ஆங்கிலத்தில் கால்குலி (Calculi) எனப்படும். உடலின் எந்தெந்த பாகங்களில் கற்கள் காணப்படுகிறதோ, அந்த பாகத்தின் பெயரால் கற்கள் குறிப்பிடப்படும். பித்த நீர்ப்பை (Gall bladder) கற்கள், சிறுநீரக கற்கள் சிறுநீர் பாதை கற்கள். கற்கள் சேரும் இடங்கள் – உடலில் இடுப்பெலும்பு கட்டு, சிறுநீர்ப்பை, சிறுநீரகம், சிறுநீர்பாதை இவைகளாகும். கற்கள் உண்டாகும் விதம் யூரோலித்தியாசிஸ் (Urolithiasis) ரீனல் லித்தியாசிஸ் (Renal lithiasis) மற்றும் நெப்ரோ லித்தியாசிஸ் (Nephrolithiasis) எனப்படும். உடல் கற்கள் உபாதைகள் 5 – 15 சதவிகித மக்களை பாதிக்கின்றன.

கற்களை பற்றி

உடல் கற்கள் ஒரு சிறு மணல் அளவில் இருக்கும். இல்லை ஒரு சிறிய பறவையின் முட்டை அளவும் இருக்கும். அரிதாக இதை விட பெரிய கற்களும் உருவாகலாம். உடல் கற்கள் பொதுவாக 45 வயதிற்கு மேற்பட்டவர்களிலேயே உண்டாகிறது. சிறுநீரகக் கற்கள் உண்டாகுவது தற்போது அதிகரித்தே கொண்டே போகிறது. 14 ஆண்டுகளில் ஒருவருக்கும் 30 பெண்களில் ஒருவருக்கும் கற்கள் உண்டாகின்றன.

80 சதவிகித கற்கள் – யூரிக் அமிலம், சிஸ்டைன் (அமினோ அமிலத்தின் உள்ள ஒரு வகை அமிலம்) இவற்றில் ஆனவை கால்சியம் ஆக்ஸலேட் (Calcium oxalate) பெரும்பாலான கற்களின் உள்ள வேதிப்பொருள். இரண்டு சதவிகித கற்கள் கால்ஸியம் பாஸ்பேட் பால் (Calcium phosphate) ஆனவை. 9-17 சதவிகித மக்னீசியம் – அம்மோனியம் – பாஸ்பேட்டால் ஆனவை.

காரணங்கள்

சிறுநீரகப் பாதை தொற்று நோய்கள் – பேக்டீரியா, வைரஸ், பூசணம் (Fungus) இவற்றால் ஏற்படும் சிறுநீர் பாதை தொற்று நோய்கள். தொற்று நோய்களால் பாதிக்கப்பட்ட சிறுநீரில் தான், ஸ்ட்ரூ வைட் (Struvite) கற்கள் ( மக்னீசியம், அம்மோனியா, மற்றும் பாஸ்பேட்) உண்டாகும். உணவு முறை – அதிக அளவில் மாமிச புரதத்தை உணவில் சேர்த்துக் கொள்வது.

சிறுநீரில் கற்கள் வராமல் தடுக்கும் சிட்ரேட் (Citrate) உள்ளது. இதன் அளவு குறைந்தால் கால்சியம் கற்களாக மாறும். தவிர பலவித “உப்புகள்” சிறுநீரில் சேர்வதும் காரணம். யூரிக் அமிலமும் கால்சியமும் சேர்ந்து சிறுநீரகம் சிறுநீர் பாதைகளில் கற்களாக மாறும். Gout வியாதியும் காரணம். அதிக அளவு யூரிக் அமிலமும் கற்களை ஏற்படுத்தும்.

அதிகமாக வைட்டமின் “டி” சேர்த்துக் கொள்வது.உணவில் தேவைக்கு அதிகமான புரதம் உண்பது. தண்ணீர் குடிக்காமல் இருப்பது. உயர் அழுத்த ரத்தம், ஸ்ட்ரெஸ் (Stress) உடலின் நீர்மச்சத்து குறைபாடு (Dehydration) வளர்சிதை மாற்றங்கள், கருத்தடை மருந்துகள், சிறுகுடல் அறுவை சிகிச்சைக்கு பிறகு கற்கள் தோன்றலாம்.

அறிகுறிகள்

கற்கள் சிறியவையாக இருந்தால் எந்த அறிகுறியும் தோன்றாது.

கற்கள் பெரிதாகி, சுற்றுமுள்ள நரம்புகளை அழுத்தலாம். அல்லது சிறுநீர் போக்கை தடைசெய்யலாம். இதனால் பரவலான வலி – தொடர்ந்து அல்லது விட்டுவிட்டு ஏற்படும்.

சிறுநீரில் ரத்தம் போதல்

சிறுநீர் அடிக்கடி வேண்டிய நிலை.

பிரட்டல், வாந்தி,

குளிர் ஜுரம் வரலாம்.

கற்கள் நகர்ந்தால், முதுகெலும்பு வலி, சிறுநீரக பாகங்களில் வலி ஏற்படும்.

தவிர அடிவயிறு, உள் தொடைகள், பிறப்புறுப்புகளில் வலி இங்கெல்லாம் வலி ஏற்படும்.

சிறுநீர் பரிசோதனை, ரத்தப்பரிசோதனை, எக்ஸ்ரே, அல்ட்ரா – சவுண்ட் இவைகளால் கற்கள் இருப்பதை கண்டு பிடிக்கலாம். பாதிப்புகள், அறிகுறிகள் இல்லாத வரை ஒரு சிகிச்சையும் மேற்கொள்ள வேண்டும். சப்த – அலைகளால் (Sound Waves) கற்களை சிதைக்கும் சிகிச்சையில் கற்கள் பொடிக்கப்படுகின்றன. இவை பிறகு நோயாளி திரவங்களை குடித்து, சிறுநீருடன் பொடித்த கற்களை வெளியேற்றலாம்.


Spread the love
error: Content is protected !!