சிறுநீரக நோய்கள் அறிகுறிகள்

Spread the love

சிறுநீரக மண்டல தொற்று நோய்கள் பெண்களை அடிக்கடி தாக்கும் நோய் – சிறுநீரக மண்டலத்தில் கிருமி தொற்று உண்டாவது. ஆண்கள் இந்த அவதிக்கு அதிகம் உள்ளாவதில்லை. காரணம் பெண்களின் உடலமைப்பு. பெண்களின் சிறுநீரகப் பாதை (Urethra) 3 லிருந்து 5 செ.மீ. நீளமிருக்கும். ஆண்களுக்கோ இந்தப் பாதை 25 செ.மீ. நீளமிருக்கும். தொற்றுக்கிருமி எளிதாக பெண்களின் சிறுநீரகப் பாதையை கடந்து சிறுநீர்பையை (Bladder) அடைந்து விடும். கிருமிகள் ஆண்களின் சிறுநீரக பாதையை கடப்பதற்கு நேரமாகும். அதற்கு முன் அவை சிறுநீரால் வெளியே தள்ளப்படலாம். தவிர பெண்களின் அவயங்கள் போதிய சுத்தமின்மை போன்ற காரணங்களாலும் பெண்களுக்கும் தொற்று அடிக்கடி உண்டாகிறது.

சிறுநீரக தொற்றுகளை உண்டாக்கும் முக்கிய வில்லன் “எஸ்கெரிசியா கோலி” (Escherichia coli) எனும் பாக்டீரியா. இந்த கிருமி சாதாரணமாக பெருங்குடலில் குடி கொண்டிருக்கும். அங்கிருந்து மலக்குடல் (Rectum) வந்து பெண்ணுறுப்பின் வழியே சிறுநீரக குழாய்களில் புகுந்து, சிறுநீர்ப்பையை வந்தடையும்.

காரணங்கள்

முன்பு சொன்னபடி பாக்டீரியாவால் ஏற்படுகிறது.

நாள்பட்ட தீவிர மலச்சிக்கல், பாலியல் அவயங்களின் போதிய சுத்தமின்மை.மாதவிடாய் நின்ற பிறகு பெண்களுக்கு ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள் வயதான ஆண்களுக்கு சுக்கிலவலக (Prostate) வீக்கத்தாலும், இரத்த நாளங்களின் புடைப்பினாலும் சிறுநீர்ப்பையில் சிறுநீர் தேங்கி நின்று விடும். இதனால் கிருமிகள் உற்பத்தி ஆகும். சிறுநீரகத்தில் அல்லது சிறுநீர்ப்பையில் கற்கள் இருந்தால்.

அறிகுறிகள்

அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டியிருக்கும். அதோடு சிறுநீர் கழிக்கும் போது எரிச்சலிருக்கும். வலியும் இருக்கும். சிறுநீர் கெட்டியாகி நாற்ற மடிக்கும். சிறுநீரில் ரத்தம் போதல். சீழ் கூட போகும். சிறுநீர் கழித்த பின்பும் சிறுநீர்பை நிறைந்திருப்பது போன்ற உணர்வு. அடிவயிற்றில் வலி, குளிர் காய்ச்சல் 104- 106 வரை ஏறும்.

தொடர்ந்து சிறுநீர் கழிக்க வேண்டுமென்ற உந்துதலிருக்கும்.

சிகிச்சை

முதலில் உணவுக்கட்டுப்பாடு. யூரிக் அமிலத்தை உருவாக்கும் மாமிசம், மீன், சிக்கன் வயைராக்களை தவிர்க்கவும். காலையில் ஆப்பிள் (அ) கேரட் சாறு (சர்க்கரை சேர்க்காமல்) காலை உணவில் ஆப்பிள், திராட்சை, அன்னாசி போன்ற பழங்களில் ஒன்று. தேன் கலந்த மோர் ஒரு டம்ளர், பிறகு இளநீர். மதிய உணவில் காய்கறி சாலட், ஒரு ஆப்பிள், பிறகு திராட்சை ஜுஸ், இரவு காய்கறி சாலட், ஒரு பழம், படுக்கும் முன் கேரட் + பீட்ரூட் ஜுஸ். இந்த காய்கறி பழ உணவை 7 நாட்கள் கடைபிடிக்கவும். தினமும் 8 டம்ளர் தண்ணீர் குடிக்கவும். குடிக்கும் தண்ணீர் சூடாக இருந்தால் நல்லது. சுடுதண்ணீர் சிறுநீரை நீர்க்கச் செய்யும். பாக்டீரியாவை வெளியேற்றும். இளநீர், பார்லி தண்ணீர் குடிப்பது அவசியம்.

சோளக் கொண்டையில் பட்டுநூல் போன்ற முடிகளிருக்கும். இதை 20 கி அளவில் எடுத்து, அதன் மேல் வெந்நீரை ஊற்றி தயாரித்த கஷாயத்தை குடிக்கவும். தனியா மற்றும் நெரிஞ்சி முள் (கோச்சுரா – Tribulus Terrestries) – இவை இரண்டையும் சம அளவு எடுத்து செய்த கஷாயத்தை 1/2 கப் அளவில் தினமும் 3 வேளை குடிக்கவும். அடிவயிற்றில் (சிறுநீர்ப்பையின் மேல்) சூடான ஒத்தடம் 1/2 மணி நேரமும் ‘ஜில்’ ஒத்தடம் 1/2 மணி நேரமும், மாறி மாறி கொடுத்துக் கொள்ளவும். றிக்ஷீஷீ – ணீநீtவீஸ்மீ தயிரை தினமும் ஒரு கப் எடுத்துக் கொள்ளவும்.

விட்டமின் ‘சி’ யை பழங்கள் மூலமாக எடுத்துக் கொண்டால் சிறுநீர் அமிலம் அதிகமாகி பாக்டீரியாக்கள் மடியும். உடலுறவுக்கு முன்பும் பின்பும் சிறுநீர் கழிக்கவும். அவயங்களை சுத்தமாக கழுவவும்.

ஆயுர்வேதம் சொல்லும் மருந்து – சிலாஜித். இதோ ஆயுர்வேத மருந்துகள் – ஏலாதி சூரணம், தாரகேஸ்வர ரஸ் சந்திரபிரபாவதி, ப்ராவாலா பஸ்மம், சந்தனாஸ்ஸவ முதலியன.

ஆயுர்வேதம்.காம்


Spread the love