கிட்னி பீன்ஸ் இதயத்திற்கு ஏற்றது

Spread the love

நாம் பல்வேறு வகையான பயறு  வகைகளை உணவில் சேர்த்துக் கொள்கிறோம். பயறு வகைகளிலேயே மிகப்பெரியது கிட்னி பீன்ஸ் என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் பயறு இது தான். மனிதனின் சிறுநீரகத்தைப் போல இருப்பதால் இவ்வாறு அழைக்கப்படுகிறது. இப்பயறு சிவப்பு, பழுப்பு கலந்த நிறத்தில் இருக்கும். இப்பயறின் விதையை மிக நீண்ட நேரம் ஊற வைத்து பின்பு வேக வைக்கும் பொழுது பயிற்றின் தோலில் இருக்கக் கூடிய  சில நச்சுப் பொருட்கள் வெளியேறி விடும். கிட்னி பீன்ஸ் சிவப்பு ராஜ்மா என்ற பெயரில் தமிழகத்தில் அதிகமாக புழக்கத்தில் இல்லாத ஒன்றாக விற்பனை செய்யப்படுகிறது.

சிவப்பு நிற ராஜ்மா, சாலட், பிரட்டல், குழம்பு, கெட்டிக் குழம்புகளில் பயன்படுத்தப்படுகிறது. வட இந்தியாவில் இது அதிகமாக சப்பாத்தி போன்ற உணவுகளுடன் பயன்படுகிறது. இதில் பொட்டாசியம் 35 சதவீதம் மற்றும் மெக்னீசியம் சத்து அதிகம் உள்ளது. இதில் உள்ள நார்ச் சத்து கெட்ட கொழுப்பின் அளவைக் குறைக்க உதவுகிறது. இதில் உள்ள அதிக புரதம் இரத்தச் சர்க்கரை அளவை மெதுவாகத் தான் அதிகரிக்கும் என்பதால், உடலில் இரத்தச் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்துக் கொள்ள உதவுகிறது. இதிலுள்ள 45 சதவீத இரும்புச் சத்து அதிக சக்தியைத் தருவதுடன் செரிமானத்திற்கு பெரிதும் உதவிடும். இப்பயறை தொடர்ந்து பயன்படுத்தி வரும் பொழுது இதில் உள்ள போலேட் (வைட்டமின் பி9) இதய நோய்களுக்கு ஒரு காரணியான அளவை குறைத்து இதயத்தை வலுப்படுத்துகின்றது என்று மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றது. மேலும், அதிக அளவு இதனைப் பயன்படுத்த, 80 சதவீதத்திற்கும் மேல் மாரடைப்பு வரும் வாய்ப்பைத் தவிர்க்கிறது.

போலேட் (வைட்டமின் பி9) மேற்கூறிய பிரச்சனைகளை உருவாக்கும் விஷமுள்ள ஹோமோ சிஸ்டீன் என்ற பொருளை நீக்குகிறது. தினசரி போலேட் அளவு நமக்கு கிடைப்பதற்கு ஒரு கப் (177 கிராம்) அளவு கிட்னி பீன்ஸ் சாப்பிட்டால் கிடைக்கிறது. 100 கிராம் ராஜ்மாவை கொதிக்க வைத்தால் நமக்கு கிடைப்பது 140 கலோரி சக்தி மதிப்பாகும். இதில் 6 கிராம் புரதம், 9 கிராம் கொழுப்பு, 18 கிராம் கார்போஹைடிரேட் உள்ளது. வைட்டமின் பி6 சத்து 20 சதவீதமும் கால்சியம் 14 சதவீதமும் உள்ளது. இதில் உள்ள கரையக் கூடிய நார்ச்சத்து, உணவு சீரணம் ஆகும் உணவுக் குழாய் பாதையில் ஜெல் போன்ற பொருளை தோற்றுவிக்கிறது. இது ***டிடைநல் உள்ள கொலஸ்ட்ராலை வெளியேற்றுகிறது. இதில் ஆன்டிஆக்சிடன்ட் அதிக அளவு இருப்பதால் உடல் மூப்பு அடைவதை தாமதப்படுத்துகிறது. ஆன்டி ஆக்சிடன்டில் அதிக அளவு பிளாவனாய்டு மற்றும பிரோன்தோ சயனடின்ஸ் என்ற பொருளும் உள்ளது. இப்பொருள் ப்ளுபெர்ரிஸ், கின் பெர்ரிஸ், சிறிய ரெட் பீன்ஸ் போன்றவைகளில் இருப்பதை விட சிகப்பு ராஜ்மாவில் அதிகம் உள்ளது.

ஆரோக்கியம் தரும் புரதம் உள்ளது

உடலின் பல்வேறு செயல்களுக்கு, திசுக்கள் உருவாக்க, பழுது நீக்க நமக்கு புரதம் மிகவும் அவசியமான ஒன்று. உங்கள் முடியும், நகமும் கூட புரதத்தால் உருவானது. தசை மற்றும் சருமத்திற்கு புரதம் அவசியமான ஒன்று. புரதம் அமினோ அமிலத்தால் உருவாக்கப்பட்ட ஒன்று. மனித உடல் வளர்ச்சிக்குத் தேவைப்படும் அனைத்து அமினோ அமிலங்களும் சரியான விகிதத்தில் அமைந்திருக்கும் புரதத்தைத் தான் நாம் முழுமையான புரதம் என்று கூறுகிறோம். முழுமையான புரதமானது அசைவ உணவுகளான இறைச்சி, கோழி இறைச்சி, கடல் உணவு, பால் சார்ந்த உணவுகள் மூலமே கிடைக்கின்றன.

மேற்கூறிய முழுமையான புரதம் ராஜ்மா பயறை அரிசி உணவுடன் கலந்து உட்கொள்ளும் பொழுது நமக்கு கிடைத்து விடுகிறது. சிவப்பு ராஜ்மா பயிறில் குறைந்த அமினோ அமிலம் லைசின் உள்ளது. இது அரிசியில் தேவைப்படும் அமினோ அமிலம் அதிக அளவு உள்ளது மேற்கூறிய முழுமை பெற்ற புரதங்கள் உள்ள அரிசி, ராஜ்மாவை சேர்த்துக் கொள்ளும் போது முழுமையான புரதங்களாக உருவாக்க இயலுகிறது. அது மட்டுல்லாது கொலஸ்ட்ரால் அல்லாத புரதம் அதிகம் உள்ள உணவை இவை நமக்கு வழங்குகிறது.

View Our Products >>


Spread the love