அது என்ன கீட்டோ டயட்?

Spread the love

உடல் எடையை குறைப்பதற்கு அதிகளவில் உடற்பயிற்சி மற்றும் உணவு கட்டுப்பாடு முறையும் உள்ளது. இந்த காலத்தில் உடல் எடையை குறைக்க கீட்டோ டயட் என்னும் ஒரு முறை  மிகவும் பிரபலமாகி வருகிறது.

கீட்டோ டயட் என்பது என்னவென்றால், அதிகமான கொழுப்பு சத்து உள்ள உணவுகளை உட்கொள்ளும் முறையாகும். இந்த முறைக்கு பெயர் தான் கீட்டோ டயட். அதிகமான மருத்துவர்களுக்கும், இந்த உணவு முறை பற்றிய விழிப்புணர்வு இல்லை என்று சிலர் கூறுகின்றனர்.

அதிகமான கொழுப்பு சத்து உள்ள உணவை சாப்பிட்டால் எப்படி உடல் எடையை குறைக்க முடியும் என்பது பற்றி நாம் இப்போது பார்க்கலாம்.

கீட்டோ டயட்:

ketogenic diet, அதை தான் கீட்டோ டயட் என்று கூறுகின்றனர். கீட்டோ டயட் என்பது குறைந்த கார்பன் மற்றும் உயர் கொழுப்பு உணவாகும். அதாவது மாவுச்சத்து உள்ள உணவு பொருட்கள் சாப்பிடுவதை குறைத்து கொழுப்பு சத்து நிறைந்துள்ள உணவுகளை எடுப்பது தான் இந்த டயட்.

“கார்போஹைட்ரேட்” அதாவது மாவு சத்து அதிகம் உள்ள பொருட்கள் அதிகளவு சாப்பிட்டால் இன்சுலின் என்னும் குளுக்கோஸ் நமது உடலில் அதிகளவில் சுரக்கும். இதுவே “கார்போஹைட்ரேட்” உள்ள உணவுகள் குறைவாக சாப்பிடுவதன் மூலமாக ketones என்ற fuel molecules நமது உடலில் அதிகளவில் சுரக்கும். இந்த ketones உடலுக்கு அதிகமான ஆற்றலை கொடுக்கிறது. அதோடு கீட்டோ டயட் மூலமாக உடலில் உள்ள கொழுப்பு அதிக வேகத்தில் குறையும் என்று கூறுகின்றனர்.

சாப்பிட வேண்டிய உணவுகள்:

இந்த கீட்டோ டயட்– -ல் இறைச்சி, வெண்ணெய், சீஸ், ஆலிவ் எண்ணெய், கொட்டைகள், மீன், தக்காளி, வெங்காயம் ஆகியவை.

சாப்பிடக்கூடாத உணவுகள்:

ஐஸ் கிரீம், குளிர் பானங்கள், சாக்லேட், ரைஸ், உருளைக்கிழங்கு, கோதுமை மாவில் செய்த உணவுகள், வாழைப்பழம்.


Spread the love