ஆழ்ந்த நித்திரை தரும் கசகசா

Spread the love

கசகசா எனப்படும் பாப்பி பூவின் விதைகள், நாம் தமிழர்களைப் பொறுத்தவரை அன்றாடம் பயன்படுத்தப்படும் ஒரு சமையல் சாமான். அதுவும் குறிப்பாக குருமாக்களில் பயன்படுத்தப்படும் ஒரு வாசனைப்பொருள் என்றே கொள்ளலாம். ஆனால் பல நாடுகளில் இதன் இறக்குமதி மற்றும் பயன்பாடு தடை செய்யப்பட்டுள்ளது. இதற்கான முக்கிய காரணம், இந்த கசகசா விதைகள் உண்டாகும் காய்களிலிருந்து உற்பத்தியாகும் பாலிலிருந்து தான் அபின் எனும் விலையுயர்ந்த போதைப் போருள் தயாரிக்கப்படுகிறது.

கசகசா எனும் இந்த விதை இனிப்புச் சுவை மற்றும் வெப்பத் தன்மை கொண்டது. இது துவர்ப்புச் சுவையைத் தூண்டி, உள்உறுப்புகளின் புண்களை ஆற்றும் தன்மையும் கொண்டது.

கசகசா ஆண்மையைப் பெருக்கி உடலை பலப்படுத்தும் குணம் கொண்டது, குடல் புழுக்களை அளிக்கும் தன்மையும் கொண்டது. சிறிது கசகசாவை அன்றாட உணவில் சேர்த்துவர, நல்ல ஆழ்ந்த நித்திரை உண்டாகும்.
மலைப்பகுதியில் விளையும் அபின் எனப்படும் பாப்பி செடியின் காய்களிலிருந்து பெறப்படும் விதைகளே கசகசா எனப்படுகிறது. அபின் செடியின் காய், போஸ்தக்காய் என்று தமிழில் அழைக்கப்படுகின்றது.

இச்செடியின் காயின் மேல்தோலைக் கீறி வடியும் வெள்ளை நிற பால் அபின் எனப்படுகிறது. இது, மருத்துவத்திலும் போதைப் பொருளாகவும் பயன்படும் ஒரு விலையுயர்ந்த பொருளாகும்.ஆனால் விதைகளான கசகசாவில், அதிகமான மயக்கம் மற்றும் போதையைத் தரக்கூடிய பண்புகள் எதுவும் இல்லை. எனவே அபின் எடுக்கப்பட்ட போஸ்தக்காயும் கூட மருத்துவத்தில் பரவலாக பயன்படுகின்றது.
கசகசாவும் போஸ்தக்காயும் மளிகைக்கடைகள் மற்றும் நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கின்றன.

மருத்துவப் பயன்கள்

கசகசாவை 2 தேக்கரண்டி அளவு எடுத்து ரு டம்ளர் பாலில் ஊறவைத்து, நன்கு அரைத்து, குழந்தைகளுக்கு உள்ளுக்கு கொடுக்க சீதபேதி கட்டுப்படும்.
வயிற்றுப்போக்கு ஏற்படும் போது சிறிதளவு கசகசாவை எடுத்து வாயில் போட்டு நன்றாக மென்று கொஞ்சம் தண்ணீர் குடித்தால், வயிற்றுப்போக்கு குறையும்.
கொப்பரைத் தேங்காயை லு கோப்பை அளவு எடுத்து பூவாகச் சீவி, கசகசா லு தேக்கரண்டி சேர்த்து, அரைத்து, துவையல் போலாக்கி, சாப்பிட வாய்ப்புண் குணமாகும்.
கசகசா, முந்திரி பருப்பு , பாதாம் பருப்பு தலா 100 கிராம் எடுத்து அரைத்து அதில் ஒரு ஸ்பூன் பொடியை காலை, மாலை சாப்பிட்டு வந்தால் உடல் வலுப்பெறும்.
கசகசா, முந்திரி பருப்பு இரண்டையும் சம அளவு எடுத்து பால் சேர்த்து அரைத்து முகத்தில் தடவி வந்தால் முகப்பரு மறையும், முகம் அழகு பெறும்.
போஸ்தக்காய் 1, துத்தி இலை ஒரு கைப்பிடியளவு, இவற்றை நன்றாக நசுக்கிக், 1 லிட்டர் தண்ணீருடன் சேர்த்து, சுண்டக் காய்ச்சி, வடிகட்டி, சூடு பொறுக்கும் அளவில், பாதிக்கப்பட்ட இடத்தில் ஒற்றடமிட கீல்வாயு குணமாகும்.

உடல் பலம்பெற கசகசா நல்ல மருந்து. கசகசா, வால்மிளகு, பாதாம் பருப்பு, கற்கண்டு ஆகியவற்றைச் சமஅளவாக எடுத்து, நன்கு தூளாக்கி, பசும்பால், தேன், நெய், தேவையான அளவு சேர்த்து, இலேகியமாக செய்து வைத்துக் கொண்டு, லு தேக்கரண்டி அளவு, இரவில் பாலுடன் சேர்த்துச் சாப்பிட்டுவர உடல் பலம் பெறும்.
தூக்கமின்மை பிரச்சனை தீர கசகசாவை, மாதுளம் பழச்சாறில் ஊறவைத்து அரைத்து சாப்பிடலாம்.

வயிற்றுப்புண் குணமாக கசகசாவை தேங்காய்ப் பாலில் ஊறவைத்து சாப்பிட்டு வரலாம்.

கசகசா, ஜவ்வரிசி, பார்லி மூன்றையும் தலா பத்து கிராம் எடுத்து பச்சரிசியுடன் சேர்த்து கஞ்சி காய்ச்சி குடித்தால் இடுப்புவலி குணமாகும்.
சிறிது கசகசாவை முள்ளங்கி சாறில் ஊறவைத்து அரைத்து தேமல், படை உள்ள இடங்களில் தேய்த்து வந்தால் அவை விரைவில் குணமாகும்.
கசகசா 10 கிராம், ஒரு பிடி வேப்பிலை, ஒரு துண்டு கஸ்தூரி மஞ்சள் ஆகியவற்றை சேர்த்து அரைத்து தழும்புகள் உள்ள இடத்தில் தடவினால் தழும்புகள் மறையும்.
கொத்தமல்லி இலை 20 கிராம், கசகசா 3 கிராம் இரண்டையும் சேர்த்து அரைத்து சாப்பிட நன்றாக தூக்கம் வரும்.

ஆயுர்வேதம்.காம்


Spread the love