கற்பூரவல்லியின் அசாத்திய நன்மைகள்!!!

Spread the love

கற்பூரவல்லி என்றாலே இந்தக்கால இளைஞர்களுக்கு ஞாபகத்தில் வருவது கற்பூரவல்லி வாழைப்பழமாகும். ஆனால் கற்பூரவல்லி ஒரு மூலிகை செடி என்றும் அதன் மருத்துவ குணங்கள் அநேகம் என்றும் பலருக்கும் தெரிவதில்லை. வீடுகளில் பச்சைக்கிளி, லவ் பேர்ட்ஸ் வளர்ப்பவர்கள் மத்தியில் இந்த கற்பூரவல்லி செடி மிகவும் பிரபலம். ஏனெனில் கிளிகளுக்கு மிகவும் பிடித்த உணவு இந்த கற்பூரவல்லி இலைகள், ஆனால் அவர்களுக்கும் இந்த செடியின் உண்மையான மருத்துவ குணங்கள் பற்றி தெரியாமல் இருப்பது மிகவும் சோகமான நிலையாகும்.

மஞ்சளைப்போன்று இந்த கற்பூரவல்லி ஒரு கிருமி நாசினியாகும். இந்த கற்பூரவல்லி செடியை தென்னை மரத்தை சுற்றி நட்டு வைத்தால் மரத்தை சுற்றி எவ்விதமான பூச்சிகளும் வராது. இது தென்னை மரத்திற்கு இயற்கையான பூச்சுக்கொல்லி மருந்தாகப் பயன்படுகிறது. இந்த கற்பூரவல்லி செடியை சித்தர்கள் விருட்சத்தோடே ஒப்பிட்டு வைத்துள்ளனர். எனவே தான் இந்த செடிக்கு கற்பூரவல்லி என பெயர் வந்தது என்று ஒரு வரலாறு உண்டு. இப்படி நமக்கு பல வகைகளில் உதவும் இந்த கற்பூரவல்லி செடியின் மற்றொரு நற்குணங்கள் பற்றி இக் கட்டுரையில் காணலாம்.
தமிழக அரசு பொது இடங்களில் புகைப்பிடிப்பதற்கு தடை செய்தாலும், இன்னாள் வரை அதற்கு ஒரு சரியான பலன் கிடைக்கவில்லை. விலை உயர்வு செய்தாலும் சிகரெட் பிடிப்பவர்கள் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டு தான் வருகிறது.

புகைப்பிடிப்பவர்களுக்கு முதலில் நுரையீரல் பாதிக்கப்படுகிறது, பின் நுரையீரல் புற்றுநோயால் அவதிப்படுவர். இவர்கள் கற்பூரவல்லி இலைகளை அரைத்து சாறெடுத்து அதனை சுண்டக்காய்ச்சி வடிகட்டி காலையில் குடித்து வர சிகரெட் புகையால்பாதிக்கப்பட்ட குடல் மற்றும் நுரையீரல் விரைவில் குணமடையும்.

நமது தோலின் மேலடுக்கில் பலகோடித் துளைகள் உள்ளது. . இந்த துளைகள் மூலமாக வியர்வை சுரப்பிகள் நமது உடல் வியர்வையை வெளியேற்றுகிறது. இது இயல்பான வேலை. வியர்வை வெளியேறாமல் இருப்பதால் பல தோல் நோய்கள் வருகின்றன. இதற்கு கற்பூரவல்லி இலைகளை நிழலில் உலர்த்தி, பொடி செய்து தேன் கலந்து உண்ணலாம். இது நம் உடலில் இருந்து வெளியேற வேண்டிய அசுத்த நீரை வெளியேற்றுகிறது.

காசநோயால் உண்டான பாதிப்புகள் குறைய கற்பூரவல்லி ஒரு சிறப்பான மருந்து என்று ஆயுர்வேதம் கூறுகிறது. கற்பூரவல்லி இலையை சாறு எடுத்து அதனுடன் தேன் கலந்து சாப்பிட்டு வர நல்ல பலனை காணலாம்.


Spread the love