கற்பூரவல்லி டீ

Spread the love

மழைக்காலம் வந்துவிட்டாலே சிலருக்கு சதா சர்வ காலமும் சளியும் இருமலும் தொடர்ந்து கொண்டே இருக்கும். அத்தகையவர்களுக்கு கற்பூரவல்லி ஒரு சிறந்த பயன் தரும் மூலிகையாகும். இந்தக்  கற்பூரவல்லியை எந்த விதமாக பயன்படுத்தினாலும் பயன் தரும். கற்பூரவல்லி டீ தயாரிப்பதும் சுலபம் தினசரி பருகி வர சளியும் இருமலும் நெருங்காது.

கற்பூரவல்லி டீ தயாரிக்கத் தேவையான பொருட்கள் டீ தூள்  1 தேக்கரண்டி, கற்பூரவல்லி இலை 2, தேன் 2 தேக்கரண்டி, மற்றும் ருசிக்கேற்ப பனங்கற்கண்டு தேவையெனில்.

கற்பூரவல்லி இலையை சிறு சிறு  துண்டுகளாக வெட்டி அதனுடன் டி தூளையும் தேவையான அளவு தண்ணீரையும் சேர்த்து நன்கு கொதிக்க விடவும். நன்கு கொதித்தவுடன் தீயை அனைத்து மூடி வைத்துவிடவும்.

ஐந்து நிமிடங்கள் கழித்து வடிகட்டி அதனுடன் தேன், பனங்கற்கண்டு சேர்த்து கலந்து பருகலாம். இந்த டீயை தினசரி பருகி வர நல்ல பலன் தெரியும்.

ஆயுர்வேதம்.காம்


Spread the love