கற்பூரவள்ளி சிறந்த கிருமி நாசிநியாகும். இதன் காரணமாக தான் நம் முன்னோர்கள் வீட்டின் முன் நட்டு வளர்த்து வந்தார்கள். கற்பூரவள்ளி விஷக் கிருமிகளை அழிக்கும் தன்மையை கொண்டது. கற்பூரவள்ளியை தென்னை மரத்தை சுற்றி நட்டு வைத்தால், மரத்தை எந்த பூச்சியும் தாக்காது.
நமது வீட்டில் யாருக்காவது உடல் சரியில்லை என்றால், உடனே ரசம் தான் அவர்களுக்கு வைத்து கொடுப்போம். ஆனால், எப்போதும் வைக்கும் அதே ரசத்தை வைக்காமல் இந்த முறை வித்தியாசமாக கற்பூரவள்ளி ரசத்தை வைத்துக் கொடுக்கலாம். வாங்க…
தேவையான பொருட்கள்
கற்பூரவள்ளி இலை – 5
சுக்கு – சிறிய துண்டு
மிளகு – அரை டீஸ்பூன்
கடுகு, சீரகம் – தலா ஒரு டீஸ்பூன்
துவரம்பருப்பு – 2 ஸ்பூன்
தக்காளி சாறு – 2 கப்
எண்ணெய், உப்பு தேவையானது
நெய் – சிறிதளவு
செய்முறை
வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கற்பூரவள்ளி இலை, சுக்கு, துவரம்பருப்பு, மிளகு ஆகியவற்றை லேசாக வதக்கி, விழுதாக அரைத்து அதனுடன் தக்காளி சாற்றை கலந்து தேவையான தண்ணீர் விட்டு, உப்பு சேர்த்து 2 நிமிடம் கொதிக்க விடவும். கீழே இறக்கி நெய்யில் கடுகு, சீரகம் தாளித்துச் சேர்க்கவும். ஆரோக்கியமான கற்பூரவள்ளி ரசம் தயார்.
மேலும் தெரிந்து கொள்ள…