கண்டங்கத்திரி

Spread the love

கண்டங்கத்திரி தரிசு நிலங்கள், திறந்தவெளி புதர்க்காடுகள் மற்றும் சாலையோரங்களில் இயல்பாக வளர்கின்றது.

செடி முழுவதும் கூர்மையான முட்களை கொண்டது. முட்கள், மஞ்சள் நிறத்தில்  பளபளப்பாக காணப்படும். கண்டங்கத்திரி செடியில் சிறு கத்தரிக்காய் வடிவமான காய்களும், மஞ்சள் நிறமான பழங்களும் உள்ளன.

கண்டங்கத்திரி இலை, பூ, காய், விதை, பட்டை, வேர் போன்ற தாவரத்தின் அனைத்து பாகங்களும் மருத்துவப் பயன் கொண்டவை.

மருத்துவப் பயன்கள்

பழங்குடி மக்கள் கண்டங்கத்திரி பழச்சாற்றை காதுவலியைக் குணப்படுத்துவதற்குப் பயன்படுத்துகின்றனர்..

கண்டங்கத்திரி பழத்தை உலர்த்தி, நெருப்பில் சுட்டு, பொடியாக்கி, ஆடாதோடை இலைகளில் வைத்துச் சுருட்டு புகை பிடிக்க பல்வலி, பல்கூச்சம் தீரும்.

கண்டங்கத்திரி இலையை இடித்து சாறு எடுத்து அதனுடன் சம அளவு தேங்காய் எண்ணெய் சேர்த்து பக்குவமாக காய்ச்சி வடித்துக் கொள்ள வேண்டும். இதனை உடலில் வியர்வை நாற்றம் இருப்பவர்கள் பூசிவர நாற்றம் நீங்கும்.

கண்டங்கத்திரி முழுத்தாவரத்தையும் சேகரித்து, முள் நீக்கி காய வைக்க வேண்டும். நன்கு காய்ந்த பின்னர், தூள் செய்து கொள்ள வேண்டும். பின் லு தேக்கரண்டி தூளுடன் லு தேக்கரண்டி தேன் சேர்த்துக் குழைத்து சாப்பிட ஆஸ்துமா, சுவாச நோய்கள், சளி ஆகிய நோய்கள் குணமாகும்.

கண்டங்கத்திரி பழங்கள் மற்றும் தண்டுகள் நுண்ணுயிர்களை எதிர்க்கும் மருத்துவப் பண்பு கொண்டுள்ளதாக உயர்நிலை ஆய்வுகள் மூலம் தெரிய வந்துள்ளது.

கண்டங்கத்திரி இலையை இடித்து சாறு எடுத்து அதனுடன் சமஅளவு நல்லெண்ணெய் சேர்த்து பக்குவமாக காய்ச்சி வடித்து தலைவலி, கீல்வாதம் முதலிய வாத நோய்களுக்கு பூசி வர அவை நீங்கும். காலில் ஏற்படுகின்ற வெடிப்புகளுக்கு இதன் இலையை சாறு பிழிந்து அதனுடன் ஆளிவிதை எண்ணெய் சம அளவு  கலந்து பக்குவமாக காய்ச்சி பூசிவர மறையும்.

கண்டங்கத்திரி முழுத்தாவரமும் கோழையகற்றும்; சிறுநீர் பெருக்கும்; குடல்வாயு அகற்றும். கண்டங்கத்திரி வேர், சிறுநீரகக் கற்களைக் கரைக்கும். கண்டங்கத்திரி பழங்கள், தொண்டை வறட்சி, மூச்சுக்குழல் அழற்சி, தலைவலி, காய்ச்சல் ஆகியவற்றைக் குணமாக்கும்.

கண்டங்கத்திரி பூவை சேகரித்து வாதுமை நெய் சேர்த்து பக்குவமாக காய்ச்சி மூலநோய்க்கு பூசிவர நன்மை தரும். கண்டங்கத்திரி காயை சமைத்து உண்டுவர  நெஞ்சில் கட்டியிருக்கும் சளியை வெளியேற்றும், பசியை தூண்டும். கழிச்சலை உண்டாக்கும்.

 கண்டங்கத்திரி பழங்களை பறித்து சட்டியிலிட்டு நீர்விட்டு வேக வைத்து கடைந்து வடிகட்டிக் கொண்டு நான்கு பங்கெடுத்துக் கொண்டு அத்துடன் ஒரு பங்கு  நீரடி முத்து எண்ணெய் சேர்த்து காய்ச்சி பக்குவத்தில் வடித்து வெண்குட்டம் உள்ள இடங்களில் பூசி வர வெண்புள்ளிகள் மறையும்.

சிறு குழந்தைகளுக்கு ஏற்படும் நாள்பட்ட இருமலுக்கு இதன் பழத்தை உலர்த்தி பொடி செய்து குறிப்பிட்ட அளவு தேனுடன் கலந்து இரண்டு வேளை  கொடுக்கலாம்.

மேலும் தெரிந்து கொள்ள…


Spread the love
error: Content is protected !!