இந்திய மருந்தான கழிச்சிக்காய், ஆயுர்வேதத்தில் முக்கியமான மருந்தாக பயன்படுத்தப்படுகிறது. இந்தியாவின் உஷ்ணப்பிரதேசங்களில் விளையும். வங்காளத்திலும், தென் இந்தியாவிலும் , இந்த கழிச்சிக்காய் பரவலாக காணப்படும்.இந்த கழிச்சிக்காய் உருண்டை வடிவத்தில் பழுப்பு பச்சை நிறத்தில் இருக்கும்.
கழிச்சிக்காயின் மருத்துவப் பயன்கள்:
கழிச்சிக்காயின் இலைக்கொழுந்துகள் கல்லீரல் கோளாறுகளுக்கு தகுந்த மருந்தாக இருக்கின்றது.
கழிச்சிக்காய் இலைகளும், வேரின் பட்டையும் வயிற்றுப்பூச்சிகளை அழிக்கவும், ஜுரத்தை தணிக்கவும் பயன்படுகின்றன.
கழிச்சிக்காயின் இலைகள் மற்றும் வேரின் பட்டைகளுக்கு பெண்களின் கர்ப்பப்பையை சீராக்கி, மாத சுழற்சியைச் சரியாக்கும் குணம் உண்டு.
கழிச்சிக்காயின் விதையிலிருந்து எடுக்கப்படும் பொடியானது, மலேரியா நோய்க்கு தகுந்த மருந்தாக இருக்கின்றது.
கழிச்சிக்காய், விதைப்பொடியை, கடுகு அல்லது எள் எண்ணெய்யில் குழைத்து செய்த கலவையை, பல சரும நோய்களுக்கு, வெளிப்பூச்சு மருந்தாக தடவலாம்.
விதைகளிலிருந்து, எடுக்கப்படும் எண்ணெய் முகச் சுருக்கங்களைப் போக்கும். அழகு சாதனப் பொருளாக பயன்படும். இந்த எண்ணெய்யை காது வலிக்கு உபயோகிக்கலாம்.