கடுக்காயை ஒரு எளிமையான பொருள் என்று கருத வேண்டாம். சிலர் ஏமாற்றுவதை கடுக்காய் கொடுத்து விட்டான் என்று சொல்வது வழக்கம். கடுக்காய் பல மருத்துவ குணங்கள் உடையது.
ஆயுர்வேதத்தின் தேவ வைத்தியராக வணங்கப்படும் தன்வந்திரி பெருமான் எப்பொழுதும் கடுக்காயை கைவசம் வைத்திருப்பாராம். இந்திரன் அமர்த பானம் பருகிய போது ஒருதுளி கீழே சிந்தி, அதுவே கடுக்காய் விருட்சம் ஆனதாக சொல்லப்படுகிறது. எல்லா நோய்களுக்கும் நிவாரணம் கொடுக்கும் அரிய குணத்தை பெற்றிருப்பதால் கடுக்காய் வடமொழியில் அரிதகி என்றழைக்கப்படுகிறது. தாயினும் சாலப்பரிந்து, பிணிகளை போக்குவதால் கடுக்காய் தாயினும் மேலாக சொல்லப்படுகிறது.
வட இந்தியாவில் உத்திரபிரதேசம், இமயமலையின் அடி வாரங்கள், வங்காளம், மேற்குத்தொடர்ச்சி மலைகள், சத்பூரா, வடகர்நாடகா இந்த இடங்களில் காணப்படுகிறது கடுக்காய் மரம்.
இதன் பழங்கள்தான் கடுக்காய் எனப்படும். பழங்களில் செபூலினிக் அமிலத்தால் ஏற்படும் ஆஸ்டிரிஜென்ட் பொருள் 30% உள்ளது. தவிர டேனிக் அமிலம் கால்க் அமிலம், பிசின் போன்றவை உள்ளன. கடுக்காயின் பல வகைகள் இருந்தாலும் குணங்களில் அதிக வித்யாசமில்லை.
கடுக்காயின் மருத்துவ பயன்கள்
இருமல் நீங்கும். சுவாசநோய்கள் குணமாகும். மூலநோய் இரைப்பை நோய், வயிற்றுக் கோளாறுகள், குரல் கம்மல், இருதய நோய்கள், மல பந்தம், கண்வலி, தொண்டைப்புண், போன்றவற்றுக்கு கடுக்காய் உபயோகமாகும். நரைநீங்க கடுக்காய் தைலம் பயன்படுகிறது.
கடுக்காய் வாந்தியை தணிக்கும். கடுக்காய் தோலையும், நில ஆவாரையும் சேர்த்து செய்யப்படும். மருந்து மலக்கட்டை நீக்கும். பிஞ்சுக்கடுக்காய், ஏலஅரிசி, சீரகம் சேர்த்து செய்யப்படும் மருந்து வயிற்றுவலியை போக்கும்.
கடுக்காயை வாயிலடக்கிக் கொண்டால் இருமல் நிற்கும். இந்த வீட்டுவைத்தியம் அநேகமாக அனைவருக்கும் தெரிந்த வீட்டு வைத்தியம்.
உணவு நலம் அக்டோபர் 2011
கடுக்காய், மருத்துவ குணங்கள், ஆயுர்வேதம், கடுக்காயின் மருத்துவ பயன்கள்,
இருமல் நீங்கும், சுவாசநோய்கள் குணமாகும், வயிற்றுக் கோளாறுகள்,