காயம் என்றால் ‘’உடம்பு’’ என்று பொருள். காயங்கள் என்பது சிறிய புண்கள் என்றும் சொல்லலாம். மருத்துவர்களால் உடலில் ஏற்படும் காயங்களுக்கு மருந்தாக பல மருந்துகள் பரிந்துரைக்கப்படுகிறது. ஒரு சிலருக்கு அதே மருந்துகள் அலர்ஜி எனும் ஒவ்வாமையை உண்டாக்கும். காசு கொடுத்து காண்டு வாதத்தை வாங்குவது ஏன்?
கடுக்காய் இருக்க கண்ட மருந்தும் தேவையா? காயத்தை ஆற்ற கைக்கண்ட மருந்து கடுக்காய்தான்.
சுக்குக்கு புறணி நஞ்சு
கடுக்காய்க்கு அகணி நஞ்சு
அதாவது சுக்கை மேல் தோலை நீக்கிவிட்டு பயன்படுத்த வேண்டும். அதுபோல. கடுக்காய்க்கு உள்ளிருக்கும் கொட்டை பகுதியை நீக்கிவிட்டு பயன்படுத்த வேண்டும்.
ஒரு கடுக்காயை கல்லை வைத்து தட்டி உடைத்து தோல் தனியாகவும் கொட்டை தனியாகவும் எடுக்கவும். அத்¬தாலை நன்கு பவுடர் ஆக்கி அதை நல்ல எண்ணெயில் குழைத்துப் போட காயங்கள் விரைவில் ஆறிவிடும் மழைக்காலங்களில் காலில் வரும் சோற்றுப்புண்ணுக்கும் கடுக்காயை குழைத்து இரவில் படுக்கப் போகும் முன் தடவிக் கொண்டு படுத்தால் புண் ஆறியிருப்பதை காணலாம்.
பயன்கள்
அறிவுறுத்தப்பட்டு உள்ள முறைகளில் எடுத்தக்கொண்டால் ஆரோக்கியமாக அதிக நாள் வாழலாம்.
ஆயுர்வேதத்தில் செரிமான கோளாறுகளை நீக்கவும், பசியின்மையை நீக்கவும் கடுக்காய் பயன்படுத்தப்பட்டு வருகிது.
சிறுநீர் அதிகமாக வெளியேறுதல், புண்கள், இருமல், மஞ்சல் காமாலை, வயிற்றுவலி, வாய்ப்புண் முதலிய நோய்களுக்கு கடுக்காய் மிக சிறந்த மருந்தாகும்.
கடுக்காய் கசாயம கண் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு சிறந்த தீர்வாகும்.
கடுக்காய் பொடியானது பல் துலக்குலதற்கு பயன்படுத்தப்பட்டால் ஈற்களில் ஏற்படும் இரத்த கசிவு நீங்கு ஈற்கள் வலுவடையும்.
தினமும் காலை கடுக்காயை உட்கொள்ளுவதனால், வயதாவதால் ஏற்படும் நரை முடி கருமை நிறம் அடைகிறது.
கடுக்காயில் டனன், ஆன்த்ரோ குயினான்கள், செபுலிக் அமிலம் ரெசின் மற்றும் எண்ணெய் ஆகயவை காணப்படுகின்றன. டனின் தோல் பதனிடும் தொழிலிலும், துணிகளுக்கு சாயமேற்ற, சிமெண்ட் தயாரிப்பு, நிலக்கரியை சுத்தம் செய்யவும் உதவுகிறது.
தான்றிக்காய், நெல்லிக்காயுடன் சோர்த்து திரிபாலா சூரணத்தை தண்ணீர் கலந்து குடித்து வர உடல்பலம் ஏற்படும், வயிற்று கோளாறு மாறும்.
கடுக்காய் தசையிறுக்கம் தன்மை கொன்டது. இதன் வலிமையின் காரணமாக முந்தைய காலங்களில் கட்டடம் கட்டும் பணியில் கடுக்காய் அரைத்து பயன்படுத்தப்பட்டது.
கடுக்காய் ஓட்டைத் தூளாக்கி தினமும் இரவு உண்டப்பிறகு அரைத்து தேக்கரண்டி சாப்பிட்டு வர வாதம் குணமாகும்.
மூக்கிலிருந்து இரத்தம் வருவதால், சிறிதளவு கடுக்காய் து£ளை எடுத்து மூக்கால் உறிய இரத்தம் வருவது நின்றுவிடும்.
வயிற்றுப்போக்கு முதலியவற்றுக்கு கடுக்காய் தூளாக்கி தேனுடன் கலந்து நாளுக்கு இருமுறை சாப்பிடுதல் ஒரு நல்ல தீர்வாகும்.
சிலதுளி கடுக்காய் கசாயத்தை, சுத்திகரிக்கப்பட்ட நீரில் சோர்த்து கண்களை கழுவும் போது கண்வீக்கம் போன்ற சில கண் பிரச்சனைகளை நீக்குகிறது.
ஆயுர்வேதம்.காம்