மூட்டுவலிக்கு ஆயுர்வேதத்தில் அற்புத தீர்வு

Spread the love

எகிப்து நாட்டின் மம்மிகளில் கூட, பண்டைய நாட்களில் மூட்டு வலி இருந்ததற்கான அடையாளங்கள் காணப்படுகின்றன. மூட்டு வலி பல்வேறு காரணங்களால் ஏற்படுகிறது. மூட்டு வலி ஆண்களைக்காட்டிலும் பெண்களையே அதிகமாகத் தாக்குகிறது. இது பொதுவாக நாற்பது வயதிற்கு மேல் தான் ஏற்படுகிறது. மூட்டு வலி அதிகமாக உணர்ச்சி வசப்படுவதாலோ, உடலை அதிகமாக வருத்திக் கொள்வதாலோ, குளிர் பிரதேசங்கள், உடலை அதிகக் குளிருக்குட்படுத்திக் கொள்வதாலோ, அல்லது பரம்பரைக் காரணத்தினாலோ ஏற்படுகின்றது.

மூட்டு வலி பெரும்பாலும் கால் மூட்டுக்களையும் கை விரல்களையும் தான் முதலில் பாதிக்கிறது. பின்னர் தோள்பட்டை, மணிக்கட்டு, முழங்கை மூட்டு போன்றவற்றிற்குப் படிப்படியாக பரவுகிறது. மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் எல்லா மூட்டுகளுமே ஒட்டு மொத்தமாக வீக்கத்திற்குட்பட்டு அழற்சியை அதிகப்படுத்திவிடுகின்றன. வலி அதிகமாக இல்லாவிடினும், உடல் இயக்கத்திற்கு மிகவும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது. மூட்டுக்களில் வலி ஏற்பட்டால், அந்த இடத்தில் வெப்பம் உண்டாகி, சிவந்த தோற்றத்தை உண்டாக்கிவிடும். எலும்புகளின் கோளாறை எக்ஸ்ரே செய்து பார்ப்பதன் மூலம் தெளிவாக அறியலாம். நரம்பிழை மற்றும் தசை நார்களில் ஏற்படும் கடுமையான அழுத்தம் கூட மூட்டு வலி தோன்ற காரணமாகலாம்.

சிகிச்சை

•             மலச்சிக்கல் மற்றும் அஜீரணத்தை போக்க வேண்டும்.

•             மூலிகை எண்ணைகளால் மசாஜ் செய்வது.

•             நடமாட்டம்  முடங்காமல் சீர் செய்வது.

•             வாழ்க்கை முறை மாற்றம் மற்றும் உணவு பத்தியம்.

வீட்டு வைத்தியம்

•             பாகல் பழங்களை உப்பு, இஞ்சியுடன் வேகவைத்து, உணவுடன் உண்ணலாம்

•             கொள்ளு சூப் வாதத்தை கண்டிக்கும். உடல் எடை குறைய உதவும்.

•             சுக்கு மற்றும் மல்லி விதையுடன் ஆமணக்கு எண்ணை சேர்த்த கஷாயம் வாதத்தை உண்டாக்கும் அஜீரணத்தை போக்கி வலியைக் குறைக்கும்.

•             சுக்கு மற்றும் நெரிச்சி  கஷாயம், அஜீரணத்தை போக்கும். இதை காலையில் குடிக்க அஜீரணம் குணமாகி பாதிப்புகள் குறையும்.

•             வேப்பிலை சாறுடன், பால் சேர்த்து பருகினால் வலியை குறைக்கும்.

•             உணவு கட்டுப்பாடு அவலியம் வயிற்று கோளாறு தான் மூட்டுவலி மற்றும் மூட்டுப்பிடிப்புக்கு – முக்கிய காரணம். எனவே லகுவான, கொழுப்பில்லாத, உணவுகளை உண்பது அவசியம்.

பிற குறிப்புகள்

•             மூட்டுகளில் வலியை உண்டாக்கும் செயல்களை தவிர்க்கவும்.

•             சரியாக, உட்கார வேண்டும், நிற்க வேண்டும்.

•             உங்கள் உடல் எடை அதிகமாக இருந்தால் எடையை குறைக்கவும்.

•             ‘கெட்டியான’ படுக்கையில் படுக்கவும்.

•             மலச்சிக்கல், அஜீர்ணம் வராமல் பார்த்துக் கொள்ளவும்.

•             வலி அதிகமாக இருக்கும் போது முழு ஒய்வு தேவை.

•             மூட்டு வலி வராமல் தடுக்க உடற்பயிற்சியும், யோகாவும் சிறந்தவை. ஆனால் வந்தபின் இவற்றை மருத்துவரிடம் கலந்தாலோசித்து பின்னர் மேற்கொள்ளவும்.

•             செய்ய வேண்டிய ஆசனங்கள் சூரிய நமஸ்காரம், – விபரீத கரணி, சர்வங்காசனம், பத்மாசனம், சலபாசனம், தனுராசனம், சிரசாசனம், பிராணாயாமம் மற்றும் சவாசனம்.

•             மூட்டு வலிக்கு தக்க சிகிச்சை அளிக்கப்படாவிட்டால், அது எலும்புகளை பாதித்து

•             மேலும் பல சிக்கல்கள் ஏற்படுத்தும். எனவே இதன் அறிகுறிகளை அலட்சியப்படுத்தாதீர்கள்.


Spread the love