ஜாதிக்காய், ஜாதிபத்திரி (Nutmeg)
ஜாதிபத்திரியென்பது ஜாதிக்காயின் மேல் தோலாகும். இத் தோலை நன்கு காயப் போட வேண்டும். தண்ணீரில் போட்டால் மிகவும் மிருதுத்தன்மையடைந்து உப்பும், வெற்றிலையுடன் சேர்த்து சாப்பிடவும்.
ஜாதிக்காயை -& வெற்றிலை, பாக்கும் போடும்பொழுது சேர்க்கலாம். ஒரு கிராம் அல்லது அரைகிராம் ஜாதிக்காய் பவுடரை தேன் கலந்து, பாதி அவிக்கப்பட்ட முட்டை சேர்த்து சாப்பிடவும். செக்ஸ் ஆற்றல் மேம்படும்.
உடலுறவுக்கு முன் ஒரு மணி நேரத்திற்கு முன்பாக இதைச் சாப்பிட்டால் செக்ஸ் உந்தல் அதிகமாகி, விந்து வெளிப்படாமல் அதிக நேரம் உறவு கொள்ள முடியும். கணவன், மனைவி இருவரும் சாப்பிடவும். ஜாதிக்காயை மெல்லிய பொடியாக்கி (அதாவது சொர சொரப்பு மிக்கதாக யிருக்க வேண்டும்) நல்லெண்ணையில் போட்டு நல்ல பிரவுன் கலர் வரும்வரை வறுக்க வேண்டும். சூடு ஆறியபின் ஆணுறுப்பில் தடவ வேண்டும். அரைமணி நேரம் சென்று உறவு கொண்டால் நல்ல இன்பம் கிடைக்கும்.
வறுக்கும் விதம்: 500 மில்லிகிராம் பவுடரில்(1 கிராம் கூட மூன்று நல்லெண்ணை துளிகள் (drops) (1:3) அளவில்) நல்லது) விட்டு வறுக்கவும். உணர்ச்சிகள் பெருகும். போதைபெறலாம்.
விதாரி (VIDARI)
உடல்வலு, செக்ஸ் ஆற்றல் மேம்படுத்தக்கூடியது விதாரி. இதன் வேரைப் பிழிந்து சாறு எடுக்கவும். சீரகம், சர்க்கரை கலந்து சாறைகுடிக்கவும். பெண்கள் இதனுடன் தனியா, பெருஞ்சீரகம் கலந்துசாப்பிட்டால் அவர்களுக்கு தாய்ப்பால் சுரப்பது அதிகரிக்கும். இதன் பவுடரை இதன் சாறில் உறை வைத்து, நெய், தேனுடன் சாப்பிட உடலுறவு மேம்படும்.
குங்குமப்பூ (Saffron Kesa‚)
குங்குமப்பூ விலை மிக்கதாகும். செக்ஸ் உணர்வை அதிகரிக்கும். பெண்களின் மாதவிடாய் உதிரப்போக்கு கட்டுப்படும். இரவில்தூங்குமுன் ஒரு துளியை பாலில் கலந்து சாப்பிடவும்.
நெல்லிக்காய் (Amla)
நெல்லிக்காய் ஒரு சிறந்த மருந்தாகும். மூப்பை தள்ளிப் போகும். செல்கள் புத்துணர்வு பெறும். உடல் வலுப்படும் இரண்டு / மூன்று புதிய நெல்லிக்காய் களை சாறு பிழிந்து ஒரு ஸ்பூன் தேன் சேர்த்து தினசரி இரண்டு வேளை சாப்பிடவும்.
ஜலாமன்சி (JALAMANSI)
ஜலாமன்சி நல்ல தூக்கத்தை, மன அமைதியைத் தரவல்லது. செக்ஸ் சம்பந்தப்பட்ட நரம்பு வியாதிகளை தீர்க்கும்.
இதைப் பொடி செய்து கால் டீஸ்பூன் எடுத்து தேனுடன் கலந்து இரவில் தூங்குமுன் சாப்பிடவும். சாப்பிடுமுன் இதை 4&5 மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும்.
ஷடாவரி (SHATAVARI)
ஆண், பெண் இருபாலருக்கும் செக்ஸ் உணர்வைத் தூண்ட இது பயன்படுகிறது. ஷடாவரியை நன்கு உலர்த்தி பொடியாக்கவும்.
ஆண்மையின்மையை நீக்கும் 1 அல்லது 2 டீ ஸ்பூன் பொடியை தினசரி இரண்டு தடவை பாலுடன் கலந்து சாப்பிடவும்.
அல்லது சாறை எடுக்கவும். அதன் கொடிகளை அகற்றி தண்ணீரில் நன்கு கழுவி வெளித் தோலை நீக்க வேண்டும். பின்பு நன்கு கசக்கிப் பிழிய வேண்டும். இந்தச் சாறை அரைக்கப் எடுத்து அரைக் கப் பால், சர்க்கரை சேர்த்து கொதிக்க வைக்கவும்.
ஐந்து நிமிடங்கள் கொதித்தால் போதும். பின்பு குடித்து நல்ல பலனைக்காணலாம். பெண்களின் ஹார்மோன்களை வலுப்படுத்தும். அவர்களின் அளவும், சதையும் அதிகரிக்கும்.
இவைகளைத் தவிர வேறு சில மூலிகைகள் உண்டு. அவை கிடைத்தால் அவற்றையும்உட்கொள்ளலாம். அவையாவை. வெண் ஓக் இலை (White oak Leaves) செக்ஸ் உணர்வுகளை அதிகப்படுத்தும். ஜின்செங்க் (White oak Leaves) உடலுக்கு வலிமை, நோய் எதிர்ப்பு சக்தி, செக்ஸ் ஆற்றல் போன்றவைஅதிகரிக்க உதவும். இரத்த அழுத்தத்தை மட்டுப்படுத்தும்.