நாவல் கொட்டை தேநீர்

Spread the love

நாவல் பழத்தின் கொட்டையை பயன்படுத்தி சர்க்கரை வியாதிக்கு தேவையான மருந்தை தயார் செய்யலாம். பிளட் சுகர் என்று சொல்லக் கூடிய ரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தும் குணம் இந்த நாவலுக்கும் அதன் கொட்டைக்கும் உள்ளது.

நாவல் பழத்தை சாப்பிட்ட பிறகு அதில் இருக்கும் கொட்டையை எடுத்து நன்றாக தண்ணீரில் சுத்தம் செய்து நிழலில் உலர்த்தி அதை பொடி செய்து, பவுடராக்கி வைத்துக் கொள்ள வேண்டும். நாவல் கொட்டை பொடி 4 கிராம், வெந்தய பொடி அரை ஸ்பூன், மஞ்சள் பொடி கால் ஸ்பூன் ஆகியவற்றை கொண்டு இதை தயாரிக்கலாம்.

இவற்றில் தேவையான அளவு தண்ணீர் கலந்து கொதிக்க வைக்க வேண்டும். இதை பருகுவதன் மூலம் சர்க்கரை நோயை கட்டுப்படுத்த முடியும். மேலும் இதை சூரணமாகவோ, வேறு விதமாகவோ கூட தினமும் சேர்த்துக் கொள்ளலாம் இது சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும்.

ஆயுர்வேதம்.காம்


Spread the love