கரும்பில் இருந்து எடுக்கக் கூடிய வெல்லம் சுலபமாக அனைத்து இடங்களிலும் கிடைக்கும்.வெள்ளை சர்க்கரையை விட, வெல்லம் மிகவும் ஆரோக்கியமானது வெல்லத்தில், கலோரி,சுக்ரோஸ், பிரக்டோஸ் குளுக்கோஸ், புரோட்டீன், கொழுப்பு, இரும்புச்சத்து, மற்றும் மெக்னீசியம்,பொட்டாசியம், மாங்கணீஸ் போன்ற சத்துக்கள் அடங்கியுள்ளது.இரத்தத்தில் உள்ள செல்களின் உற்பத்தி திறனை அதிகரித்து இரத்தசோகை வராமல் ஒரு தடுப்பை உருவாக்ககூடிய ஆற்றல் வெல்லத்தில் இருக்கிறது. மேலும் இதில் இருக்கும் நார்சத்து நம்முடைய வயிறு, உணவு குழாய், நுரையீரல் என உடலில் இருக்கும் உள் உறுப்புகளை சுத்தம் செய்ய கூடியதாக இருக்கும்.
இதனால் தான் பழங்காலத்தில் சாப்பிட்டு முடித்ததும், ஒரு துண்டு வெல்லம் சாப்பிடுவது வழக்கம். இதனால் செரிமான திரவம் தூண்டப்பட்டு ஜீரண சக்தி அதிகரிக்கும்.இரத்த சோகைக்கு வெல்லம் எப்படி தடையாக இருக்கிறதோ அதே மாதிரி இரத்தத்தை சுத்தம் செய்து உடலை ஆரோக்கியமாகவும் வைக்கின்றது. இரத்தத்தில் இருக்க வேண்டிய ஈமோகுளோபின் அதிகரித்து, நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது. இதனால் எல்லா விதமான இரத்த சோகையிலிருந்தும் இந்த நோய் எதிர்ப்பு சக்தி உதவியாக இருக்கிறது.
பித்தம்,வாதம் மற்றும் மஞ்சள் காமாலை போன்ற நோய்க்கு, வெல்லத்தை ஒரு பானமாக செய்து பருகலாம். வெல்லத்தில் இரும்புசத்தும், கால்சியமும் அதிக அளவில் உள்ளது. ஆனால் வெள்ளை சர்க்கரையை பாலிஷ் செய்வதற்கு அதில் சேர்க்கப்படும் ரசாயனங்கள், இரும்புசத்தை முற்றிலுமாக அழித்துவிடுகிறது. எனவே சர்க்கரையை குறைத்து வெல்லத்தை அதிகமாக சேர்க்க வேண்டும்.வெல்லம் குறிப்பாக பெண்களுக்கு பரிந்துரை செய்யப்படுகிறது. அது என்னவெனில், மாதவிடாய் நேரத்தில் பெண்கள், மிகவும் சோர்வாகவும், மன அழுத்தமாகவும் இருப்பார்கள். எனவே அந்த நேரத்தில் வெல்லம் சாப்பிட்டால் இவ்வித பிரச்சனைகளிருந்து விடுபடலாம்.வெல்லம் ஒரு நல்ல ஆண்டி அலர்ஜிக். எனவே வெல்லம் அடிக்கடி சாப்பிட்டால் அலர்ஜிக்கும்,ஆஸ்துமாவுக்கும் நல்ல தீர்வு கிடைக்கும்.