பலாப் பழம் மிகவும் இனிப்பானது. இனிப்புக்கு ஆசைப்பட்டு சிலர் கன்னாபின்னாவென்று பலாப் பழச் சுளைகளைத் தின்றுவிட்டு வயிறு கெட்டுப் போய் அவதிப்படுவார்கள்.
அவர்களுக்கு ஓர் எளிய வைத்தியம். அதற்கு மருந்து அந்தப் பழத்தின் சுளைகளுக்குள்ளேயே இருக்கிறது. ஆமாம், சுளைகளில் இருக்கும் பலாக் கொட்டைதான் அந்த மருந்து.
பலாப் பழக் கொட்டையை அடுப்பில் வேக வைத்துத் தேனில் குழைத்துச் சாப்பிட்டால் பலாப் பழத்தால் வந்த அவதி, ஒவ்வாமை ஆகியவை தீரும்.