ப. ஷிவானி மற்றும் வி. பொன்னுசாமி, தோட்டக் கலைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், பெரியகுளம்.
உலகளவில் இசப்கோல் மருந்துப் பயிர் உற்பத்தியில் இந்தியா முதன்மை வகிக்கிறது. நமது நாட்டில் 30,000 ஏக்டர் பரப்பளவில் பயிரிடப்பட்டு ஆண்டுதோறும் 25,000 முதல் 30,000 டன் இசப்கோல் விதை மற்றும் அவற்றின் மேல் தோல் பகுதி ஏற்றுமதி செய்யப்பட்டு பத்துக் கோடி ரூபாய் அந்நியச் செலவாணியைப் பெற்றுத் தருகிறது. நமது நாட்டில் குஜராத் மற்றும் ராஜஸ்தான் ஆகிய இரு மாநிலங்களில் இசப்கோல் அதிகம் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
மருத்துவப் பயன்கள்
விதை மற்றும் உமி சிறந்த மலமிளக்கியாகப் பயன்படுகின்றன.
குடலில் ஏற்படும் அடைப்பு, சிறுநீரகம் சம்பந்தப்பட்ட நோய்கள், மூலநோய், குடற்புண் மற்றும் மலச்சிக்கலைக் குணப்படுத்தப் பயன்படுகிறது.
தாவரவியல்
செடிகள் அடிப்பகுதியிலிருந்து 45 செ.மீ. உயரமாக வளரும் தன்மை கொண்டது. செடிகளின் அடிப் பகுதியிலிருந்து நீண்ட காம்புடன் பூக்கும். விதைகள் மெல்லியதாகவும், இளஞ்சிவப்பு நிறத்திலும் இருக்கும். விதைகளைச் சுற்றி உமி போன்ற மேல் தோல் பகுதி இருக்கும். இதுவே மருத்துவத்திற்குப் பயன்படுகிறது.
நன்றி & தொழில் நுட்ப தோட்டக் கலை