சூடாக சாப்பிட்ட பின் குளிர்ந்த நீர் குடித்தால் என்ன ஆகும்.

Spread the love

பொதுவாக நாம் சாப்பிட்டபின் உடனே தண்ணீர் குடிக்கக்கூடாது என அனைவருக்கும் தெரியும். ஒரு 15 நிமிடத்திற்கு பின் தான் நீர் அருந்த வேண்டும். இப்படி ஒரு கட்டுப்பாடு இருக்கும்போது அதை மீறினால் கெடுதல், அதைவிட சூடான உணவை சாப்பிட்டதும், குளிர்ந்த நீர் குடிப்பதனால் ஏற்படும் பிரட்சனை மிகவும் ஆபத்தானது.குளிர்ந்த நீர், நாம் சாப்பிடும் உணவில் இருக்கும் எண்ணெய் துகள்களை கெட்டியாக்கி உணவு செரிமானம் அடைவதில் பிரட்சனையை ஏற்படுத்துகிறது.

இது உடலில் இருக்கும் கொழுப்பின் அளவை அதிகரித்து, இதய மற்றும் சிறுநீரகம் சம்மந்தமான பல பிரட்சனைக்கு காரணமாகிறது.அவ்வகையில் சாப்பிட்ட பின், குளிர்பான பெட்டியிலுள்ள குளிர்ந்த நீரை மூச்சு முட்ட குடித்தால் தான் சிலருக்கு திருப்தியாக இருக்கும். இது இதய நோய்க்கும் புற்று நோய்க்கும் வழி வகுப்பதாகவும் அறியப்படுகிறது. அதனால் சாப்பிட்டு முடித்ததும் சிறிது நேரம் கழித்து, வெதுவெதுப்பான சூடான நீரை குடிப்பது தான் மிகவும் நல்லது.

அது இதயத்திற்கு மிகவும் நல்லது என்பது மருத்துவர்களின் அறிவுரையாக இருக்கின்றது. இது புற்றுநோய் செல்கள் உருவாகுவதையும் தடுக்கிறது. உணவு செரிமானம் அடைவதோடு, உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் உருவாகுவதையும் தடுக்கிறது.சாப்பிட்டதும் சூடான நீரை குடிப்பது மட்டுமில்லாமல், சூடான சூப் குடிப்பதும் உடலிற்கு மிகவும் ஆரோக்கியத்தை தருகிறது.

ஆயுர்வேதம்.காம்

To Buy Our Herb Products >>>


Spread the love