நின்று கொண்டே சாப்பிடுவதால்…

Spread the love

நம்மில் பலர் வேலையிடங்களிலும், வெளியிடங்களிலும் நின்று கொண்டே சாப்பிடுவதை பழக்கமாக கொண்டுள்ளோம். 

இது சரியா? தவறா?

நாம் நின்று கொண்டு சாப்பிடும்போது, புவி ஈர்ப்பு விசையின் காரணமாக உடலில் இரத்த ஓட்டம் கீழ் நோக்கியே பாய்கிறது.  இதன் விளைவாக, உடலில் இரத்தத்தை மேல் நோக்கியும் பாய செய்வதற்காக, இருதயம் அதிக செயல் பட வேண்டியுள்ளது..  இது ஹைப்போதலாமிக் பிட்யூட்ரி அட்ரினலை தூண்டி மன அழுத்தத்தை ஏற்படுத்துகிறது  கார்டிசால் ஹார்மோனை சுரக்க செய்கிறது. 

இதேபோன்று தொடர்ந்தால் உடலில் ருசியை அறியக்கூடிய மற்றும் உணர்வுகளை கடத்தக்கூடிய பகுதிகள் பாதிக்கப்படும்.  நாளடைவில் உணவின் ருசியையும் அறிய முடியாமல், மன அழுத்தத்திற்கும் ஆளாவீர்கள் என்று ஆராய்சிகள் கூறுகின்றன. 

நின்று கொண்டே சாப்பிடக் கூடாது, அவ்வாறு நின்று கொண்டே சாப்பிட்டால்  மன அழுத்தம் உண்டாகும்.

நின்று கொண்டே சாப்பிட்டால் நாவின் சுவை அரும்புகள் பாதிக்கப்படும்.

சாப்பிடும்போது நம் உடலுக்கு சரியான வடிவம் தேவை.

நேராக நிமிர்ந்து உட்கார்ந்து சாப்பிடும்போது உணவின் ருசி முழுமையாக கிடைக்கும்.

அதனால், சாப்பிடும் போது எப்போதும் சப்பளங்கால் போட்டு நிமிர்ந்து உட்கார்ந்து தான் சாப்பிட வேண்டும்.

என். டி. ஃபுட்


Spread the love