இரத்த சோகைக்கு காரணமாகும் இரும்புச் சத்துப் பற்றாகுறை

Spread the love

இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் நுரையீரல், ஆக்ஸிஜன் பரிமாற்றம் சீராக நடைபெற உதவுகிறது.ஹீமோகுளோபின் அளவானது குறையும் பொழுது, பொதுவாக மனித உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்து உடல் சீர் கெடுகிறது.இரத்தச் சோகை என்று கூறப்படும் உடல் வெளிறிக் காணப்படும் நிலையும் ஏற்படுகிறது.

இரத்தத்தை வெகுவாக இழக்கும் பொழுதும், இரத்தம் சார்ந்த வளர்சிதை மாற்றம் சரியாக நடைபெறாத பொழுதும், உயிர்ச் சத்து H12 மற்றும் போலிக் அமிலம் இரும்புச் சத்துக் குறைவதால், இரத்தச் சோகை ஏற்படக் காரணமாகி விடுகிறது.

மனிதனின் உடலில் பொதுவாக 2.5 கிராம் முதல் 5 கிராம் வரை இரும்புச் சத்து உள்ளது.ஆரோக்கியமான உடலுக்கு ஒரு மில்லி கிராம் வரை இரும்புச் சத்து தினசரி தேவைப்படுகிறது.ஆண்களிடம் ஹீமோகுளோபின் அளவு பெண்களிடம் இருப்பதை விட சற்று அதிகமாக இருக்கிறது.இரும்புச் சத்து தினசரி அதிகளவு கிடைக்கும் வண்ணம் உள்ள காய்கறிகள், பழங்கள் உணவுகளை தேர்ந்தெடுத்து உண்ண வேண்டும்.

ஆங்கில மருத்துவத்தில் இரத்த சோகை குறைபாடுகளுக்கு என்ன காரணம் என அறிந்து மருந்துகள் தரும் பொழுது இரும்புச் சத்து, ரைபோஃப்ள்சவின், வைட்டமின் H12, போலிக் அமிலம் மற்றும் எரித்டோ பாய்டின் என்ற மருந்து வகைகளை மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.

இரத்தச் சோகை மத்திமமாக அல்லது தீவிரமாக உள்ளதா?என்பதைப் பொருத்து மருந்துகள் வாய் வழியாகவோ அல்லது இரத்தத்தில் நேரிடையாகவோ ஊசி மூலம் செலுத்தப்படுகிறது.

இரும்புச் சத்தானது வாய் வழி மருந்தாக உட்கொள்ள இயலாத பொழுதும், இரும்புச் சத்தை குடல் உறிஞ்சுவதன் திறன் குறையும் பொழுதும், இரத்த சோகை மிகவும் மோசமாக இருந்து, நோயாளியின் ஒத்துழைப்பும் எளிதாக அமையாத பொழுது மட்டுமே இரும்புச் சத்தானது ஊசி மூலம் உடலில் செலுத்தப்படுகிறது.

மேலும் இரத்த மாதிரிப் பரிசோதனை செய்த பின்பு, தேவைப்படும் இரும்புச் சத்தின் அளவு தெரிந்து ஊசி மூலம் செலுத்தப்படுகிறது என்பதால் அச்சம் கொள்ள அவசியமில்லை.

நேரிடையாக உடலில் உட்செலுத்தப்படும் இரும்புச் சத்து மருந்துகள் என்ன விளைவுகளை ஏற்படுத்தும்?

மேற்கூறிய மருந்துகள் உடலில் செரிமானமாகி, குடல் உறிஞ்சிகளால் உறிஞ்சப்படுகிறது. உணவு உட்கொண்ட பின்பு தான் இம்மருந்துகள் உட்கொள்ளப்படுகிறது என்பதால், புளிப்புச் சுவை தரும் அஸ்கார்பிக் அமிலம் இறைச்சி போன்றவற்றை உட்கொள்ளும் போது, எளிதாக சிதைவடைந்து, விரைவில் குடல் உறிஞ்சிகளால் உறிஞ்சப்படுகின்றன. மேற்கூறிய மருந்துகள் ஈரல், எலும்பின் உட்பகுதி போன்றவற்றில் நன்கு செய்லபடுவதுடன், ஹீமோகுளோபின் அளவை உயர்த்துகின்றன.உடலுக்குத் தேவையான இரும்புச் சத்தின் அளவு, மண்ணீரல், எலும்பின் நடுப்பகுதி, மையோகிளொபின் தசைகளில் சேமித்து வைக்கப்படுகிறது.மிகுதியான இரும்புச் சத்து மலத்துடன் வெளியேற்றப்பட்டு விடுகிறது.

தேவைக்கு மிகுதியான இரும்புச் சத்து உடலில் சேர்வதை தடுக்கும் ஒரு இயக்கம் குடலினால் நடைபெறுகிறது.நீண்ட நாள் இரும்புச் சத்து மருந்து உட்கொள்ளும் பொழுது, உடலில் ஒரு சில பிர்ச்சனைகள் ஏற்படுகிறது என்பதையும் நாம் அறிந்து கொள்வது அவசியம்.மிகுதியான இரும்புச் சத்து சில உடற்பகுதிகளில் தங்கி அப்பகுதிகளில் தொல்லைகளைத் தருகிறது.

சித்த மருத்துவத்தில் இரும்புச் சத்துக் குறைபாட்டை குணப்படுத்த இரும்புச் சத்து கலந்த அயச்ச செந்தூரம் போண்ற மருந்துகளை துணை மருந்துகளாக பரிந்துரைக்கினறனர்.


Spread the love