‘இன்பர்மேஷன் ஏஜ்’ என்று அழைக்கப்படக் கூடிய தகவல் தொழில் நுட்ப வளர்ச்சி உச்சம் தொட்டுள்ள கால கட்டத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இப்போதைய கால கட்டத்தில் பிறக்கிற குழந்தைகள் அசாத்திய அறிவாற்றலுடன் சமயோசித புத்தியுடன் இருப்பதாக பலரும் சொல்லி கேள்விப்படுகிறோம். ஆனால், இது உண்மைதான் என்று விஞ்ஞானிகளின் ஆராய்ச்சி கூறுகிறது.
சீனா, ஈக்குவடார், பிஜி ஆகிய நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகள் குழந்தைகளின் அறிவாற்றல் தொடர்பாக ஒரு ஆராய்ச்சியை நடத்தி வந்தனர். இதில் ஒரு குழந்தை தான் பிறந்து 10 மாதங்களே ஆன நிலையில் கூட, மற்றவர்களின் மனநிலையைப் படிக்கிற ஆற்றலைக் கொண்டிருக்கிறது எனத் தெரிய வந்துள்ளது.
இதற்கு முன்பு ஒரு குழந்தை 4 முதல் 7 வயதின் இடையே தான் இப்படி மற்றவர்களின் மனநிலையைப் படிக்கிற அறிவாற்றலைப் பெற்றிருந்தது. இப்போது அதில் அதீத முன்னேற்றம் ஏற்பட்டு ஒன்றரை வயதிலேயே குழந்தைகள் மற்றவர்களின் மனதைப் படிக்கிற அளவுக்கு வந்து விட்டனர். ஆக, பெற்றோர்களும், மற்றவர்களும் பிள்ளைகளிடம் இனி கவனமாக இருக்க வேண்டும்.