இன்சுலின் செடி

Spread the love

சர்க்கரை நோய்க்கு பதிலடி!

அமெரிக்க நாட்டில் புளோரிடா மாநிலத்தினை தாயகமாகக் கொண்ட இன்சுலின் செடியானது, இந்தியாவில் கடந்த பத்தாண்டுகளுக்கு முன்பு தான் அறிமுகமாகியுள்ளது. அதிக அளவு வளர்த்து விற்பனைக்கு விடும் செடிகளில் இன்சுலினும் ஒன்று. இதனுடைய அறிவியல் பெயர் காஸ்டஸ் இக்னேஸ் ஆகும். தமிழிலும் இன்சுலின் செடி என்றழைக்கப்படும் இச்செடி ஜரூல்/கேகண்ட் என்று இந்தியில் அழைக்கப்படுகிறது.

சர்க்கரை நோயைக் கட்டுக்குள் வைத்து விடும் இதன் மருத்துவக் குணம் மிகவும் ஆச்சர்யத்திற்கு உரியது. இதன் ஓரிரு இலையினை உட்கொள்ள இரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறைந்து விடுகிறது என்பதுடன், கொலஸ்ட்ரால் அளவையும் குறைத்து கட்டுக்குள் வைக்கிறது.

வெளிநாடுகளில் மெக்ஸிகோ, கோஸ்டரிகா, ஐரோப்பிய நாடுகளில் பயன்படுத்திய இச்செடி தமிழகத்திலும் கேரளாவிலும் அதிக நர்சரிகள் மூலம் விற்பனை செய்யப்படுகின்றன. இச்செடி நல்ல நீர் வளம் கொண்ட பகுதிகளில் எந்த மண்ணிலும் வளரக் கூடியது. வீட்டுத் தோட்டங்களில், தொட்டிகளில் வைத்து வளர்க்கலாம்.

கரும்பு கணுக்கள் போல இதன் முதிர்ந்த குச்சிகள் (குறைந்தது 3 கணுக்கள் இருத்தல் நலம்) மூலம் நட்டு, ஆரம்பத்தில் தண்ணீர் விட்டு பராமரித்து வர, ஒரு சில நாட்களில் வளர ஆரம்பித்து விடும்.

இதன் இலைகள் எப்படி இருக்கும்?

இன்சுலின் செடி இலைகள் மா, இலை போன்று இருக்கும். இலைகள் அடுக்காக விசிறி போல சுற்றிக் கொண்டு மேல் நோக்கி வளரக் கூடியது. வாயில் இட்டு மெல்ல இதன் சுவை சிறிது புளிப்பு கலந்து காணப்படும்.

மருத்துவத்தில் இன்சுலின் பயன்கள்

இன்சுலின் செடியின் இலைகள் சர்க்கரை நோயாளிகளுக்கு மிகுந்த பலன் தருகிறது. சர்க்கரை நோயுள்ளவர்கள் முதல் நிலை சர்க்கரை நோயாளிகளைத் தவிர்த்து 2ம் நிலை சர்க்கரை நோயாளிகள் இன்சுலின் ஊசி போட அவசியம் இல்லை. இதற்கு என்ன செய்ய வேண்டும் என்றால் இந்த இன்சுலின் செடி இலைகள் ஒன்று அல்லது இரண்டு எடுத்து தினம் தோறும் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தாலே போதுமானது.

இன்சுலின் செடியின் இலைகளில் இருந்து பெறப்படும் சாறு இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்துவது மட்டுமல்லாமல் இனிப்பு சாப்பிட வேண்டும் என்ற உணர்வையே குறைத்து விடும்.

மேற்கூறிய இன்சுலின் செடி இலையை பச்சையாக சாப்பிட கசப்பாக இருக்கும். இலையை நீர் விட்டு கொதிக்க வைத்து, பாதியளவு சுண்டிய பின்பு வடித்து ஆற வைத்து தேன் கலந்து தினசரி காலை, மாலை என இருவேளை அருந்தி வரலாம்.

உலர்ந்த இலைப் பொடியாக தயார் செய்து தேனீராக பயன்படுத்திக் கொள்ளவும் இயலும். அவ்வாறு தேனீர் தயாரிக்கும் பொழுது, அரை அல்லது ஒரு ஸ்பூன் வரை பயன்படுத்தலாம். இன்சுலின் அளவு தெரிந்து கொண்டு, தேவையான அளவு பொடி சேர்த்து பின்னர் அதையே வழக்கப்படுத்திக் கொள்ளலாம். பக்க விளைவுகள் ஏதும் ஏற்படாது. இன்சுலின் செடி இலையின் மூலம் சிறுநீர் எளிதாகப் பிரியச் செய்யும். முகம், கை, கால் வீக்கம் குறையும். சிறுநீர்ப்பைத் தொற்று குணமாகிறது. நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கிறது.


Spread the love