உடல் சுத்தமாக…

Spread the love

உடலின் பல சீர்கேடுகளுக்கும் நலக் குறைவுகளுக்கும் அடிப்படைக் காரணமாக அமைவது மலச்சிக்கல். இந்த மலச்சிக்கல் எனும் மல பந்தம் ஏற்படுவதால் தான் அனேக உடலின் நச்சுக்கள் வெளியேறாமல் உடலில் தங்கி அதிகப்படியான சிக்கல்களையும், உள்ள சிக்கல்களின் அளவையும் அதிகரிக்கின்றன. எனவே மலச்சிக்கல் ஏற்படாமல் பார்த்துக் கொள்வது மிக அவசியம்.

மூட்டுவலி, வாய்வுத்தொல்லை, ஜீரணக் கோளாறு, மாதவிடாய் கோளாறு, விந்தணு குறைபாடு போன்றவற்றிற்கு அடிப்படையான காரணம் இந்த மலச்சிக்கலே ஆகும்.

ஆயுர்வேதத்தில் வாத நோய்களுக்கு முதலில் செய்ய வேண்டிய சிகிச்சை, மல பந்தத்தை போக்குவது. மலச்சிக்கல் இருப்பவர்களுக்கு முதலில் திராக்ஷ£தி லேஹியம் போன்றவை தரப்படும்.

திராக்ஷதி லேகியம்

தேவை

சூரத் நிலாவாரையின் இலைகள்        – 100 கிராம் (ஆய்ந்தெடுத்தது)

ரோஜா மொக்கு                – 400 கிராம் (இதழ்களை ஆய்ந்து எடுத்துக் கொள்ள வேண்டும்)

விதை நீக்கிய உலர்ந்த திரா¬க்ஷ – 800 கிராம் (நீரில் கழுவி, வெய்யிலில் உலர்த்தி காம்பையும் ஆய்ந்து எடுத்துக் கொள்ளவும்).

செய்முறை   

இந்த மூன்றையும் கையால் நன்றாக பிசைந்து, ஒன்றாக்கி, டப்பாவில் பத்திரப்படுத்தி வைத்துக் கொள்ளவும். ஒரு நெல்லிக்காயளவு எடுத்து ஒரு டம்ளரில் இட்டு, அது நிறைய கொதிக்கும் நீரை விட்டு இரவில் மூடி வைக்கவும். மறுநாள் காலை மருந்தை கசக்கி பிழிந்தெடுத்து விட்டு, கஷாயத்தை சிறிது சூடுபடுத்தி வடிகட்டி குடிக்கவும்.

அத்தி பழ பானம்

தேவை

சீமை அத்திப் பழம்     – 70 கிராம் (தேனில் ஊற வைத்தது)

ரோஜா மொக்கு          – 140 கிராம்

சோம்பு                        – 70 கிராம்

செய்முறை   

இந்த பொருட்களை வெந்நீரில் (4 லிட்டர்) 24 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். அடுப்பில் வைத்து நிதானமாக காய்ச்சி, பிறகு நன்கு பிசைந்து வடிகட்டவும். சர்க்கரை (1.7 கிலோ) சேர்த்து தேன் பதமாக காய்ச்சி வைத்துக் கொள்ளவும். இதை 60 மி.லி. அளவில் எடுத்து 60 மி.லி. நீருடன் சேர்த்து படுக்கும் போது குடித்து வந்தால் மலச்சிக்கல் நீங்கும்.

குறிப்பு

திராக்ஷதி லேகியம் வேறு பல மருந்துகளை சேர்த்தும் தயாரிக்கப்படுகிறது.


Spread the love
error: Content is protected !!