ஊசி மூலம் உணவுப் பத்தியம்.

Spread the love

உடல் கட்டுக்கோப்பாக இருக்கும் நாம் சொல்வதை கேட்பதாய் இருக்கும். ஆனால், அந்த உடலே கட்டுப்பாடு இல்லாமல். . உடல் பருமனாக உருவாகி விட்டால், நம் கட்டளைகள் மதிக்கப்படாமல் போய்விடுகின்றன. உதாரணத்திற்கு மாடிக்கு படிகளில் ஏறிச் செல்ல வேண்டும் மனசு நினைத்தாலும், உடல் பருமன் காரணமாக முட்டுக்கட்டை விழுகிறது.

உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் இயற்கையின் படைப்பில் அனைவருக்கும் ஒரே மாதிரிதான் உடல்வாகு அளிக்கப்படுகிறது. ஆனால், நமது பழக்க வழக்கங்களில் நாம் நினைத்தபடியோ, அல்லது எதிர்பார்ப்புக்கு மாறாகவோ வளர்த்துக் கொண்டு விடுகிறோம். உடல் விஷயத்தில் நாம் நினைத்ததை சாதிப்பது எப்படி என்று பார்க்கலாம்.

ஹார்மோன் சுரப்பு அளவு அதிகரிப்பது, தைராய்டு, பிரசவத்துக்குப் பிந்தைய உடல் பெருக்கம் என்று குண்டான உடம்புக்கு பல்வேறு காரணங்கள் இருக்கவே செய்கின்றன. உடம்பில் நோய்க்கான பிரச்சனை இருந்தால், அதற்கேற்ற தீர்வை மட்டுமே நாட வேண்டும். காலம் கடந்த பின் சூரிய நமஸ்காரம் பண்ணினாலும், எங்கும், எதற்கும், எப்போதும் இருக்கிறது சீராக்கும் நடவடிக்கை. இயல்பாக அதிகரித்த உடல் எடையை அறுவை சிகிச்சை இன்றி உணவுக் கட்டுப்பாடு மூலம்ட எப்படி குறைப்பது என்று பார்ப்போம்.

ஹெச்.சி.ஜி. (Human Chorionic Gonadotropin ) எனப்படும் ஊசி மருந்து மற்றும் புரதச் சத்து கொண்ட உணவுப் பத்தியமுறை இதற்கு எளிய தீர்வாகும்.

இட்லி, சப்பாத்தியை சிறிது நாட்களுக்கு எடுத்துக் கொள்ள முடியாது. சர்க்கரைச் சத்துள்ள உணவுகளை சாப்பிட முடியாது. காய்கறிகள், மீன் போன்றவற்றைச் சாப்பிடலாம்.

குண்டான உடம்பைக் குறைக்கும் இந்த சிகிச்சைக்கும் கால அளவு இருக்கிறது. சிகிச்சைக்கு ஆர்வம் காட்டுவோரை, இரண்டு நாட்கள் வலுவாக, அவர் விரும்பும் வகையில் எத்தகைய உணவையும் ஒரு பிடி பிடித்து வந்த பின் சிகிச்சையை தொடங்கலாம். 26 நாட்களுக்கான உடல் இளைப்பு கோர்ஸான, இதை ஊசியும் உணவும் இணைந்த இரட்டை சிகிச்சை முறை என்று சொல்கிறார்கள்.

இந்த நாட்களில் தினம் ஒரு ஹெச்.சி.ஜி ஊசி மருந்தை எடுத்துக் கொள்ள வேண்டும். கூடவே, ஐந்து வேலைகளுக்கான உணவு பத்தியமுறை பட்டியலும் கொடுக்கப்படும். இதனை உறுதியாக கடைப்பிடிக்க வேண்டும்.

பொதுவாக நாள் ஒன்றுக்கு ஆண்கள் 2,500 கலோரியும், பெண்கள் 2000 கலோரியும் உணவு எடுத்துக் கொள்கின்றனர். ஆனால், இந்த சிகிச்சை எடுக்க வருபவர்களுக்கு டாக்டர்கள் பரிந்துரைப்பது 500 கலோரிகள் மட்டுமே. இது உடலுக்குத் தேவையான அடிப்படைத் தெம்பைத் தர மட்டுமே உதவும். அதற்கு மேல் தேவையான சத்துக்களைப் பெற ஊசி மருந்து உதவும். அது, உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பைக் கரைத்து சத்தாக மாற்றி உடலின் பல்வேறு பாகங்களுக்கும் அனுப்பி வைக்கும்.

இந்த கோர்ஸை எடுத்துக் கொள்ளும்போது, உடல் சோர்வு இல்லாமல் புத்துணர்ச்சியாக உற்சாகமாக இருக்கும். அதே நேரம் குறைந்த அளவே உணவு உட்கொண்டாலும், இந்த காலத்தில் பசியை உணர முடியாது. அதற்கேற்ற தேவையும் இருக்காது.

ஐந்து வேளை உணவு என்று அளிக்கப்படும் டயட் பட்டியலில், மிகக் குறைந்த அளவு உணவே இருக்கும். முதல் நாளுக்கான சாம்பிள் டயட்.

காலை எழுந்ததும், வெதுவெதுப்பான நீரில் சர்க்கரை கலக்காத எலுமிச்சை சாறு அருந்தலாம். அல்லது பால் கலக்காத டீ, காபி, பருகலாம்.

காலை உணவு ஒரு ஆப்பிள், பாலற்ற சிறிது தேநீர், நண்பகலில் இளநீர் 200 மி.லி. மதிய உணவு நெருப்பில் வாட்டிய 100 கிராம் சிக்கன், மற்றும் 100 கிராம் வெள்ளரி, தலா ஐம்பது கிராம் தக்காளி மற்றும் வெங்காயம் கொண்ட வெஜ் சாலட்.

மாலையில் பால் இல்லாத டீ அல்லது காபி, மாதுளை முத்துக்கள் 100 கிராம், இரவு உணவுக்கு நூறு கிராம் கீரை மற்றும் பருப்பு மசியல். இதுதான் முதல் நாள் உணவாக இருக்கும்.

இதே அளவு சத்து கொண்ட பல்வேறு உணவு வகைகள் தினமும் மெனுவில் மாறிக் கொண்டே இருக்கும் என்றாலும், கலோரி 500 ஐ தாண்டாது என்பது இந்த உணவின் சிறப்பு.

26 நாள் கோர்ஸ் முடிந்தவுடன் 5 முதல் 7 கிலோ வரை உடல் எடை குறைந்திருப்பதை உணர முடியும். உடல் எடை மேலும் குறைய வேண்டும் என்று நினைப்பவர்கள், ஒரு வாரம் இந்த கோர்ஸுக்கு ஓய்வு கொடுத்துவிட்டுஅடுத்த 26 நாள் பத்தியத்தை தொடரலாம். தேவைப்படும் கோர்ஸ்களை முடித்த பின் மேலும் 20 நாட்கள் இந்த சிகிச்சையை தொடர்வது முழு பலனை அளிக்கும்.

இந்த வகை உணவுக் கட்டுப்பாடு மூலம் உடல் எடையைக் குறைக்க வயது வரம்பு இல்லை. ஆனால், குறைந்தபட்சம் 18 வயதை கடந்தவராக இருக்க வேண்டும். அதேபோன்று குழந்தை பிறந்து பால்குடியை மறக்கும் வரை தாய்மார்கள் இந்த சிகிச்சையை எடுத்துக் கொள்ளக் கூடாது. அதாவது, பிரசவத்துக்கு பின் இரண்டாண்டுகள் கழித்தே இதனை எடுத்துக் கொள்ள வேண்டும் என்பது டாக்டர்களின் பரிந்துரை.


Spread the love