குழந்தைகளின் ஜீரண கோளாறு

Spread the love

குழந்தைகளுக்கு வயிற்று வலி வந்து விட்டால் அவை படும்பாட்டை விட, பெற்றோர்கள் படும்பாடு அதிகம்.

குழந்தை பராமரிப்பு பற்றி சரக சம்ஹிதை

ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன் எழுதப்பட்ட சரகஸம்ஹிதை குழந்தைகளின் பராமரிப்பு பற்றி சொல்வது குழந்தை இருக்க தகுந்த வீட்டின் அமைப்பு குழந்தை வசிக்கத் தகுந்த வீட்டை அமைக்கும் வகையாதெனில் அவ்வில்லம் உயர்ந்து மனதுக்கு உகந்ததாய் இருட்டில்லாமல் வெளிச்சமாயிருக்க வேண்டும். காற்று அதிகமாக இராமல் ஒரு பக்கம் காற்று வீசுவதாயிருக்க வேண்டும். தண்ணீர் இருக்குமிடம், சிறுநீர் மலம் கழிக்கும் இடம் குளியலறை சமையலறை தனித்தனியாகத் தக்க இடங்களில் பிரித்துக் அமைக்கப்பட்டிருக்க வேண்டும். வசந்தம் முதலிய பருவங்களுக்கும் சீதோஷ்ண நிலைக்கும் தக்கபடி படுக்கை இருக்கை மெத்தை விரிப்புகளைக் கொண்டிருக்க வேண்டும்.

படுக்கை விரிப்பு முதலியவைகளின் தூய்மை குழந்தைக்குப் பயன்படுத்தத்தக்க படுக்கைகள், இருக்கைகள் பக்கத்துணிகள், மூடும் துணிகள் இவையனைத்தும் மெல்லியதாக லேசானவையாய் சுத்தமானவையாய் நறுமணம் பூசியவையாய் இருத்தல் வேண்டும்.

வேர்வை, அழுக்கு, எறும்பு, முதலிய கிருமிகள் உடையவைகளையும் சிறுநீர், மலம் இவற்றுடன் கூடியவைகளையும் ஒதுக்கிவிட வேண்டும். மற்றவை தனிப்பட்டவைகளாயில்லாமல் அவைகளை நன்கு தண்ணீர் விட்டுக் கழுவி அகரு முதலிய புகைகளைக் காட்டித் தூயவையாக்கி வெயிலில் உலர்த்தி அவை களையே பயன்படுத்தலாம். குழந்தை விளையாடுவதற்கான பொருட்கள் இருக்க வேண்டிய முறை பார்ப்பதற்கு விசித்திரமாகவும் ஒலி செய்பவனவும் அழகானவையும் லேசாக இருப்பனவாகவும் கூறில்லாத நுனியுள்ளவையும் வாய்க்குள் நுழைக்க முடியாதவையும், உயிரைத் துன்புறுத்தாதவையும், அச்சமூட்டாதவையுமான விளையாட்டுப் பொருட்களை குழந்தைக்குக் கொடுக்க வேண்டும்.

குழந்தையை அச்சமூட்டுவது தகாது

குழந்தையை ஒருபோதும் அச்சுறுத்தக் கூடாது. குழந்தை அழுதாலும் புசிக்காவிடினும் மற்ற செயல்களில் சொன்ன படி கேட்காவிடினும் அச்சமயங்களில் அரக்கர்கள், பிசாசுகள், முதலியவற்றின் பெயர்களை சொல்லி அச்சுறுத்தலாகாது.

மகனுடைய உடல் நலத்தைக் காக்கும் முறை  

குழந்தை எவ்வித நோயுமில்லாமல் நலமாக இருக்க ஸ்வஸ்த்தவருத்தம் என்னும் முறையைப் பின்பற்ற வேண்டும்.

அந்த ஸ்வஸ்த்தவருத்தம் என்பதை தேசம் காலம் உடல் சுளுக்குச் சம்பந்தப்பட்ட குணங்களுக்கு ஒவ்வாத குணங்களுள்ள மருந்து உணவு தேகப்பயிற்சி இவைகளைப் பழக்கம் செய்தல் தகும். மற்றும் தேச காலங்களுக்கு ஒவ்வாதவை பழக்கத்திலிருந்தால் அவற்றைச் சிறிது சிறிதாக முறையே அகற்றி ஒன்றிக் கொள்வன வனைத்தையும் முறையே பழக்கப்படுத்திக் கொண்டுவர வேண்டும். அவ்வாறு செய்தால் உடல் வலிவு, நிறம், உடல் ஆயுள் இவையனைத்தும் நிறைவுபெறும்.

சிறுதுனைக்காக்கும் கால வரையறை

மேற்கூரிய வகையில் சிறுவனுக்கும் இளமை வந்து அறம், பொருள் இவற்றில் திறமை ஏற்படும் வரை மிக்க விழிப்புடன் காக்க வேண்டும்.

குழந்தை | சிறுவர்களை தாக்கும் சில அஜீரண கோளாறுகளை பார்ப்போம்.

பரிணாம சூலை (காலிக் – Colic): பிறந்த முதல் மூன்று அல்லது நான்கு மாதங்கள் வரை, குழந்தைகளுக்கு ஏற்படும் பிரச்சனை ‘காலிக்’ இதை “மூன்று விதிகள்” என்பார்கள். குறைந்த பட்சம் வாரத்தில் 3 நாட்கள், ஒரு நாளுக்கு 3 மணி நேரம் குழந்தை தொடர்ந்து 3 வாரங்கள் அழுவது இந்த பாதிப்பின் அறிகுறி. குழந்தை வீரிட்டு விடாமல் (3 மணி நேரம்) அழும். மற்ற சமயங்களில் “நார்மலாக” இருக்கும்.

இதன் காரணங்கள்

சரியான காரணங்கள் தெரியவில்லை. குழந்தை வயிற்றில் வாய்வு சேர்ந்தால் இப்படி ஏற்படலாம். பால் கொடுத்து முடித்தவுடன் ஏப்பம் வர, குழந்தை முதுகில் மெல்ல தட்ட வேண்டும். இதை Burping என்பார்கள். இதை சரிவர செய்யாவிட்டாலும் பால் குடுக்கும் போதும் அழும் போதும் குழந்தைகள் காற்றையும் சேர்த்து விழுங்குவதாலும் ‘காலிக்’ ஏற்படும்.

அதிகமாக அழுவது காதிலோ, சிறுநீர் பாதையிலே ‘தொற்று’ ஏற்பட்டிருக்கலாம். குழந்தைக்கு பால் ஒவ்வாமை ஏற்பட்டிருக்கலாம். கை அல்லது கால் விரல்களில் முடி சுற்றிக் கொண்டிருக்கலாம். இந்த மாதிரி குழந்தை அழ ஆரம்பித்தாலே, டாக்டரிடம் உடனே காண்பிப்பது அவசியம். வேறு மருத்துவ காரணங்கள் இல்லாவிட்டால் குழந்தைக்கு ‘காலிக்’ என்று முடிவு செய்யப்படும். இந்த காலிக் 3-4 மாதங்களில் மறையலாம். அதுவரை குழந்தையை பசியில்லாமல் பார்த்து கொள்ளவும். அதன் படுக்கும் விதத்தை மாற்றவும். குழந்தையை தாலட்டவும். வேடிக்கை காண்பிப்பது. மென்மையாக தாலாட்டு பாடலாம். இவற்றால் குழந்தையை அமைதிப்படுத்த முயற்சிக்கவும். காலிக்கை குறைக்க “மசாஜ்” மற்றும் மூலிகை டீ” இவைகளை பயன்படுத்தலாம். உங்கள் டாக்டரின் உத்தரவோடு. மூலிகை டீ சாதரணமாக இஞ்சி, பெப்பர் மிண்ட், போன்றவைகளால் தயாரிக்கப்படும். குழந்தைக்கு உணவு கொடுத்தவுடன் Burping செய்வது முக்கியம். பால் கொடுக்கும்போதே அடிக்கடி Burping செய்ய வேண்டும்.

கிரஹணி – கேஸ்ட்ரோ என்டரைடீஸ் (Gastro enterites) வயிற்றில் ஏற்படும் தொற்று. வாந்தி பேதி, வயிற்று வலி மற்றும் ஜுரமும் ஏற்படும். இதை வயிற்று ஃப்ளு (Stomach Flu) என்பார்கள். குழந்தைகளை அடிக்கடி தாக்கும் பாதிப்பு. தீவிரமானால் உடலின் நீர்மச்சத்து குறைந்து போய் விடும். சரியான சிகிச்சை அளிக்காவிட்டால் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம். வளரும் தேசங்களில் இந்த நோயால் ஏற்படும் பேதியால் லட்சக்கணக்கான குழந்தைகள் உயிரிழக்கின்றன.

காரணங்கள்

பல வைரஸ்கள், பாக்டீரியாக்கள் மற்றும் ஓட்டுண்ணி (Parasites) இந்த தொற்றை உண்டாக்கும். இந்த வயிற்றுக் கோளாறு உண்டாக்கும். வைரஸ் – ரோடாவைரஸ். பேக்டீரியா – கோலி (Escherichia coli), விப்ரீயோகாலரா (Vibrio cholerae, சால்மனெல்லா Salmonella), சிகெல்லா,  (Shighella) மற்றும் – ஒட்டுண்ணி – கிராடியா (Giradia) சிறுவர்கள் பள்ளிகளிலிருந்து இந்த நோயை பெற்று மற்ற குழந்தைகளுக்கு பரப்பலாம். இந்த வயிற்றுக் கோளாறை உண்டாக்கும் கிருமிகள் தும்மினாலும், எச்சில் துப்புவதாலும் நன்றாக வெளிவந்து மற்றவர்களை பிடிக்கும். கைகளிலிருந்து வாயினுள் செல்லும். அடிக்கடி வாயில் விரலை வைத்துக் கொண்டிருக்கும் குழந்தைகளுக்கு கை – வாய் வழியே எளிதில் தொற்று பரவும். உணவுகள் மூலம் ஏற்படலாம். முழுமையாக சமைக்கப்படாத உணவுகள், கிருமிகள் நிறைந்த தண்ணீர் இவை யெல்லாமும் காரணங்களாகும். தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகளுக்கு தாய் மூலமாக உண்டாகலாம்.

அறிகுறிகள்

பேதி (Diarrhoea), வயிற்று தசைகள் இழுத்துக் கொண்டு ‘வலி.

வாந்தி – பல சமயங்களில் வாந்தி முதலில் ஏற்பட்டு, டயாரியா பின் தொடரும். வாந்திபேதி சேர்ந்தும் ஏற்படும். சில பேக்டீரியா தொற்றில், மலத்தில் சிறிது ரத்தமும் போகும். நீர்மச்சத்து குறைவினால் (dehydration) தள்ளாமை ஏற்படும்.

தொடர்ந்து வாந்திபேதி இருந்தால் உடல் உப்புக்கள் வெளியேறிவிடும். ஜுரம் வரும். வாய் உலர்ந்து போகும். பசி எடுக்காது. திரவ உணவுகள் கூட பிடிக்காமல் போகும்.

குழந்தையின் எடை இழப்பு. சிறுநீர் அதிகம் போகாது. குழந்தை அழுகையில் கண்ணீர் வராமலிருக்கும். வயிறு உப்புசம். குழந்தை பால் குடிக்காது. தூங்காமல் அடிக்கடி அழும்.

சிகிச்சை முறைகள்

கேஸ்ட்ரோ – என்டரைடீஸ் என்று தெரிந்தவுடன் பெற்றோர்கள் குழந்தையை தண்ணீர் அடிக்கடி குடிக்க வைக்க வேண்டும். நீர்மச்சத்துகள் நிறைந்த சாறுகள், சூப்புகளை குடிக்க வைக்க வேண்டும்.

குழந்தைகள் வாந்தி எடுத்தால், எடுத்த பின் 10-15 நிமிடங்களுக்கு பின் சில ஸ்பூன்கள் திரவ ஆகாரம் கொடுக்கலாம். இந்த ஆகாரத்தை குழந்தை வாந்தி எடுக்காவிட்டால், இதையே 10-15 நிமிடங்களுக்கு ஒரு முறை கொடுத்து கொண்டே போகவும். ஒரு மணிக்கு ஒரு தடவை திரவ ஆகாரத்தின் அளவை அதிகரிக்கலாம். வாந்தி இல்லாமல், பேதி மட்டும் இருக்கும் குழந்தைகளுக்கு சாதாரணமாக கொடுக்கும் உணவையே கொடுக்கலாம்.

De – hydration அறிகுறிகளை வாய் உலர்தல், 6-7 மணி நேரம் சிறுநீர் கழிக்காமல் இருத்தல், போன்றவை தோன்றினால் உடனடியாக டாக்டரிடம் செல்லவும். வைரஸ் தாக்குதலால் ஏற்படும் வயிற்றுப் போக்குக்கு ஆன்டி – பையாடிக்குகள் கொடுப்ப தில்லை. பாக்டீரியா, ஒட்டுண்ணி தொற்றுக்களுக்கு தரப்படுகிறது.

ஆயுர்வேத அணுகு முறை

முஸ்தா – தக்ரம் பரிந்துரைக்கபடுகிறது, முஸ்தா என்பது கோரைக்கிழங்கு (Cyperus rotundus) தக்ரம் என்றால் ‘மோர்’. சில கிழங்குகளை கஷாயம் செய்து வடிகட்டி, மோருடன் கலந்து கொடுப்பது அந்த கால ஆயுர்வேத வழக்கம். தற்போது முஸ்தாவை களிம்பாக அரைத்து 75 மி.கி. அளவில் எடுத்து ஒரு ஸ்பூன் தேனுடன் கலந்து கொடுக்கலாம். இது குழந்தை 1 வயதிற்கு மேற்பட்டிருந்தால் தான் கொடுக்க வேண்டும்.

கோரோசனாதி வடிகா, பாலசதுர்பத்ர சூரணம் போன்ற ஆயுர்வேத மருந்துகள், ஆயுர்வேத மருத்துவரின் கண்காணிப்பில் தரலாம்.

குழந்தையின் தாய்க்கு வாரத்தில் இருமுறை “பூண்டுப்பால்” கொடுக்கப்படும். ஒரு பல் பூண்டை பாலிலிட்டு காய்ச்சி, இளஞ்சூட்டுடன் தாயாருக்கு கொடுத்து வந்தால், தாய் மற்றும் குழந்தையின் வயிற்று நோய் குறையும்.

வளர்ந்த குழந்தைகளுக்கு தயிர், மோர், வாழைப்பழம், புதினா, ஆப்பிள் கேரட் போன்ற உணவுகள் கொடுக்கலாம். தோல் சீவிய வசம்பை சட்டியிலிட்டு சுட்டு சாம்பலாக்க வேண்டும். இந்த சாம்பல் – பொடியில் ஒரு அரிசி அளவு எடுத்து, தாய்ப்பால் சேர்த்து தினம் அல்லது ஒரு நாள் விட்டு ஒரு நாள் கொடுக்கலாம். 1 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு, தேனில் குழைத்து கொடுக்கலாம்.

பால் ஒவ்வாமை

பால் மற்றும் பால் சார்ந்த உணவுகளில் மட்டுமே லாக்டோஸ் (Lactose) எனும் சர்க்கரை பொருள் இருக்கிறது. இந்த பாலுணவு சிறுகுடலை அடைந்ததும், அங்கு சுரக்கும் லாக்டேஸ் (Lactose) எனும் என்ஸைம், லாக்டேஸ்ஸை குளுக்கோ ஸாகவும், காலக்டோஸாகவும் மாற்றி ஜீரணிக்க உதவுகிறது. (கவனிக்கவும் – லாக்டோஸ் வேறு லாக்டேஸ் வேறு 1) இந்த லாக்டேஸ் என்ஸைம் குறைந்து விட்டால், லாக்டோஸ் ஜீரணமாகாமல் தேங்கிவிடும். தேங்கி சிறுகுடலில் பேதியை உண்டாக்கும். பிறகு பெருங்குடலுக்கு சென்று அங்குள்ள பேக்டீரியாக்கலால் புளிக்கப்பட்டு நுரைத்து விடும். இதனால் வாய்வு உண்டாகும். மலம் அமிலமாகும்.

அறிகுறிகள்

பால் ஒவ்வாமை உள்ள குழந்தைகளுக்கு பாலைக் கொடுத்தால் பேதி ஏற்படும். உடல் எடை குறையும். பால் குடித்த 12 மணி அல்லது ஒரு மணி நேரமானவுடன் பிரட்டல் ஏற்படும். வயிறு உப்புசம் தோன்றும்.

சிகிச்சை முறை

லாக்டேஸ் என்சைம்கள் டாக்டரால் பரிந்துரைக்கப்படும். பாலையும் பால் சார்ந்த உணவுகளை ஒரேடியாக நிறுத்தினால், குழந்தைக்கு தேவையான கால்சியம் கிடைக்காது. எனவே அந்த பால் சார்ந்த பொருள் அதிக ஒவ்வாமை உண்டாக்குகிறது என்று கண்டறிய வேண்டும். பாலை விட தயிர் ஒத்துக் கொள்ளும்.

கால்சியம் மாத்திரைகள் கொடுக்கப்படும். கால்சியம் மட்டும் கொடுத்தால் போதாது. அது ஜீரணிக்க கூடவே வைட்டமின் ‘டி’ தேவை. உங்கள் மருத்துவர் கால்சியமும், வைட்டமின் ‘டி’ கலந்த மாத்திரைகளை கொடுப்பார்.


Spread the love
error: Content is protected !!