இதய நோய் பிரச்சனைகளுக்கு ஆயுர்வேத மருத்துவம்

Spread the love

பலயுகங்களாக பயன்பாட்டிலுள்ள ஆயர்வேத மூலிகைகளால் குணப்படுத்த முடியாத நோய்கள் ஏதும் இல்லை. தினமும் ஒரு சிலவற்றை நாம் கடைபிடித்து வந்தாலே எவ்வித நோய், நொடிகளும் இன்றி ஆரோக்கியமான, வாழ்க்கையை வாழ முடியும். அந்த வகையில் இதய நோய் வராமல் தடுக்கவும், இதய நோய் உள்ளவர்கள் கடைபிடிக்க வேண்டியவை என்னென்ன என்பது பற்றி இப்பகுதியில் பார்க்கலாம்.

செம்பருத்திப்பூவின் இதழ்களை காலையில் வெறும் வயிற்றில் தொடர்ந்து சில நாட்கள் சாப்பிட்டு வர எந்த விதமான இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளும் வராமல் தடுக்கலாம். இதய நோய் உள்ளவர்களும் இவ்வாறு செய்வதால் நல்ல பலனை காணலாம்..

இதய நோய் தீவிரமாக இருப்பவர்கள் செம்பருத்தி பூவின் இதழ்களில் எலுமிச்சைச்சாறு கலந்து நன்கு கசக்கி சாறு எடுத்து அதனுடன் சர்க்கரை சேர்த்து, பாகு பக்குவத்தில் காய்ச்சி ஒரு பாட்டிலில் மூடி வைக்கவும். தினமும் காலையில் இதிலிருந்து ஒரு மூடி அருந்தி வர இதய நோய்கள் பஞ்சாகப் பறந்து போகும்.

செம்பருத்திப் பூவின் இதழ்களை தண்ணீர் சேர்த்து நன்கு காய்ச்சி பருகி வர இரத்த குழாய்களில் ஏற்படும் அடைப்புகள் நீங்கும்.

இஞ்சிச்சாறு : இஞ்சிச் சாறு தினமும் குடித்து வர இதய நோய் பிரச்சனைகளுக்கு நல்ல மருந்தாகும். மேலும் பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்கப்படுகிறது. இஞ்சி சாறு, இஞ்சிக்குழம்பு, இஞ்சி சட்னி, இஞ்சி ஊறுகாய், சுக்கு பொடி என எவ்வகையிலும் இஞ்சியை நம் உணவுடன் சேர்த்துக்கொள்ளலாம். இவ்வாறு செய்வதால் இதயநோய் வராமல் தடுக்கலாம்.

தாமரைப்பூவை தண்ணீரில் சேர்த்து கொதிக்க வைத்து அந்தத் தண்ணீரைப் பருகினாலும் இதய நோய் வராமல் தடுக்கலாம்.

இதயநோய் வருவதற்கான முக்கிய காரணம் கொழுப்பு அதிகமாக உடலில் சேர்வதாகும். தினமும் ஒரு முழு பூண்டை வேக வைத்து சாப்பிட்டு வர கொழுப்பு குறையும்.

தாமரை இலைகளை கஷாயம் செய்து குடித்து வர இதய படபடப்பு குறையும். மேலும் தினமும் ஒரு சின்ன வெங்காயம் சாப்பிட்டு வர இதயம் வலுப்பெற்று பலமாக இருக்கும்.

ரோஜாப்பூ குல்கந்து சாப்பிட்டால் இதயம் பலப்படும்.


    Spread the love