இச்சையை தூண்டும் ஆண்மை அதிகரிக்கும் உணவுகள்

Spread the love

மனிதனாகப் பிறந்து விட்டால் ஆணும், பெண்ணும் காதல் வயப்படுவதும் காமம் ஏற்படுவதும் இயல்பான ஒன்று தான். குடும்ப வாழ்க்கையில் கணவன் மனைவிக்கு இடையே பரஸ்பர அன்பு, காதல் இருந்தால் மட்டும் போதாது. அவரவர்களின் வயது, உடல் அமைப்புப் பொறுத்து உடலுறவு அவசியம். சரியான உடலுறவு அமையவில்லையெனில் வாழ்க்கையே தடம் மாறும் அளவுக்கு ஒரு சிலர் வாழ்க்கையும், மனதிற்குள் புழுங்கிக் கொண்டு வேறு வழியில்லை என்ற வாழ்க்கையுமாக வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். உடலுறவில் மனைவியை சந்தோஷப்படுத்துவதுதான் ஒரு ஆண் மகனின் முக்கியப் பொறுப்பு அமைந்துள்ளது. இதில் சிறிதளவு குறைபாடு இருந்தால் கூட ஆண்கள் மனம் உடைந்து விடுகின்றனர். அதனால் தான் ஆதி காலத்திலிருந்து பாலுணர்வைத் து£ண்டும் மருந்து, லேகியம், எண்ணெய் போன்றவைகளை ஆண்கள் அதிக அளவு நாடுகின்றனர். ஒரு மனிதன் தங்க பஸ்பம், சிட்டுக்குருவி லேகியம், அஸ்வகந்தா லேகியம் போன்றவைகளை உட்கொள்வதற்கு காரணம் உடலுறவில் முழு வெற்றி பெறுவதற்குத் தான்.

இந்தியாவில் சுமார் 30 கோடி மக்கள் பாலியல் குறைபாடுகளுடன் உள்ளனர். கஜுராஹோ,காம சூத்திரத்தை உலகுக்கு அளித்த நாம் செக்ஸில் பலவீனம் உள்ளவர்களாக, அதற்குரிய நடவடிக்கை எடுக்க விழிப்புணர்வு இல்லாதவர்களாக இருக்கிறோம். நமது அன்றாட உணவில் எடுத்துக் கொள்ளும் ஒரு சில பொருட்கள் நமது காதல் உணர்வையும், உடலுறவு வேட்கையையும் அதிக அளவில் து£ண்டுகின்றன. அவை என்னென்ன என்று அறிந்து கொள்வதுடன் உணவில் பயன்படுத்திப் பாருங்கள். பின்பு உங்கள் இல்லத்தில் என்றும் மகிழ்ச்சிதான். இரவு எப்பொழுது வரும் என்று இல்லாளும் காத்துக் கொண்டிருப்பாள்.

ஆயுர்வேதத்தில் கோதுமை, அரிசி, உளுத்தம் பருப்பு ஆண்மையை அதிகரிக்கும், விந்து கெட்டிப்படும். சோம்புவின் விதைகளை உறிஞ்சி உண்ண, ஆசை அதிகமாகும்.

வாழைப்பழம் தினம் ஒன்று அல்லது இரண்டு சாப்பிட்டு வாருங்கள். அதில் உள்ள பொட்டாசியம், வைட்டமின் பி சத்துக்களும் செக்ஸ் ஹார்மோனை தயாரிக்க உதவுகின்றன. வாழைப்பழம் ஆண்மையைப் பெருக்க உதவும் முக்கியமான ஒன்றாகும். கொய்யா பழம் பெண்களின் பாலுறுப்புகளின் தசைகளை வலுப்படுத்துகிறது. பப்பாளி, மாம்பழம் போன்றவற்றையும் உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

வாசனை திரவியங்களான ஜாதிக்காய், ஏலக்காய், குங்குமப் பூ, இலவங்கப்பட்டை இவை அனைத்தும் செக்ஸ் உணர்வை அதிகரிக்கச் செய்யும். ஜாதிக்காய் விந்து முந்துதலை தடை செய்யும். இலவங்கம் பொறுத்தவரை அதன் பட்டை தான் ஆசையைத் து£ண்டும். இலைகள் அதற்கு நேர் மாறாக செக்ஸ் உணர்வைக் குறைத்து விடும்.

பொதுவாக வாசனை திரவியங்களை பாலுடன் கலந்து அருந்த வேண்டும். சிகப்பு மாமிசம், மீன் இவைகளை எடுத்துக் கொள்ள வேண்டும். நீர் வாழ் பிராணிகளின் மாமிசம் உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. கடல் மீன்களை விட ஆறு, நதி மீன்கள் செக்ஸ் உணர்வை அதிகம் து£ண்டக் கூடியது. கடல் முத்துச் சிப்பி சிறந்த ஆண்மை பெருக்கி உணவாக கருதப்படுகிறது. ஒட்டகத்தின் திமில் அரேபியர்களுக்கும், பறவைக் கூடு சூப் சீனர்களுக்கும் ஆண்மைக் குறைவைப் போக்க மருத்துவ உணவாக கருதப்படுகின்றன.

காய்கறிகளினை எடுத்துக் கொண்டால், ஏழைகளின் ஆப்பிள் எனப்படும் தக்காளி சிறந்த பாலுணர்வு ஊக்கியாகும். பூமிக்கு அடியில் விளையும் காரட், முள்ளங்கி ஆண்மையைப் பெருக்க வல்லது. இந்தியா, எகிப்து, அரேபியா நாடுகளில் பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக வெங்காயம் உணவில் சேர்க்கப்பட்டு வருகிறது. வெங்காயம் மிகச்சிறந்த ஆண்மை ஊக்கியாகும். அதிலும் வெள்ளை வெங்காயம் மிகச் சிறந்தது. வெள்ளை வெங்காயத்தை நெய்யில் வதக்கி உண்ணலாம். வெங்காய சூப்பாக புத்துணர்ச்சி பெற அருந்தி வரலாம். கருமிளகு, தேன், மிளகாய், இஞ்சி, செலரி, வெள்ளரி, கொத்தமல்லி பெருங்காயம் போன்றவைகளும் ஆண்மைக் குறைபாடுகளை நீக்கும். தேன் எகிப்தியர்கள் காலத்திலிருந்தே பயன்படுத்தப்பட்டு வருகிறது. காதல் உணர்வை அதிகப்படுத்தும் மருந்தாக தேன் கருதப்படுகிறது.

உடல் ஆரோக்கியத்தை பாதுகாப்பது மட்டுமல்ல, ஆண்களின் உடலுறவு ஆசையை துளசி துண்டுகிறது. தோட்டக்கீரை, குங்குமப் பூ, பாதாம் பருப்பு ஆண்மையை அதிகரிக்க, மக்களைப் பெற சக்தி அளிக்கும் மருந்தாக உள்ளது. சாக்லேட்டில் உள்ள தியோப்ரோமைன் என்னும் வேதிப் பொருள் செக்ஸ் உணர்வை அதிகரிக்கிறது. ஆன்டி ஆக்சிடன்ட் அதிகம் சாக்லேட்டில் இருப்பதால் முதுமைத் தோற்றத்தை தள்ளி வைக்கிறது.தோல் சுருக்கத்தைக் குறைக்கிறது.

பால் சார்ந்த உணவுகளில் எருமைப்பால், பகல் வேளையில் தயிர், மோர் மற்றும் வெண்ணெய், நெய் அனைத்தும் நீடித்த உடலுறவுக்கு வலுவூட்டும் உணவுகள் ஆகும். உணவு உட்கொண்ட பின் வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு கலந்த தாம்பூலம் தரிப்பது உடலுறவு ஆசையைத் து£ண்டும். ஆனால், வெறும் பாக்கு, மது, புகையிலை எதிர்மாறான விளைவுகளை உண்டாக்கும்.

பாலுணர்வை அதிகரிக்கும் உணவுகள்:

முழுத் தானியங்கள், சர்க்கரை வள்ளிக் கிழங்கு, பாதாம் பருப்பு, கீரைகள், எல்லா காய்கறிகளும், பழங்களும் குறிப்பாக சிட்ரஸ் உள்ள பழங்கள் தக்காளி, நெல்லி முதலியன. கேரட், முள்ளங்கி, முட்டை, மீன் எண்ணெய், முளை கெட்டிய உணவுகள், முழுக் கோதுமை, வேர்க்கடலை, பருப்புகள், உலர் திராட்சை, கிட்னி, லிவர் மாமிச வகைகள், மீன், பால் மற்றும் பால் சார்ந்த உணவுகள் வாழைப்பழம் போன்றவைகளை உணவில் சேர்த்துக் கொள்ள ஆண்மை சக்தி அதிகரிக்கும்.

பாலுணர்வைக் குறைக்கும் உணவுகள் எது?

பாலியல் உணர்வைக் குறைப்பதில் சோயாவிலிருந்து தயாரிக்கப்படும் டோஃபூ , மற்றும் சோயா பால் முக்கியமானதாக உள்ளது. முட்டைக் கோஸ், வெள்ளரிக்காய், டர்னிப் போன்றவைகளைத் தவிர்க்கவும். மேற்கூறிய உணவுகள் தைராய்டின் செயல்பாடுகளைக் குறைக்கும். பாலியல் உணர்வுகளை தைராய்டு தான் கட்டுப்படுத்துகிறது. பொதுவாக ஒரு மனிதனுக்குத் தேவையான புரதம், கார்போஹைட்ரேட், கொழுப்பு, வைட்டமின் சத்துக்கள், தாதுப் பொருட்கள் அடங்கிய உணவுகளை தேவையான கலோரி அளவுகளில் உட்கொள்ள வேண்டியது அவசியம்.ஆனால், அவ்வாறு உட்கொள்ளத் தவறும் பட்சத்தில் உடல் ஆரோக்கியமும், செக்ஸில் முழு உற்சாகமும் இல்லாமல் கெடும். சர்க்கரை, மது பானங்கள், தேனீர், காபியில் உள்ள காபின் பொருட்கள் நாம் உட்கொள்ளும் உணவுகளில் அடங்கியுள்ள ஊட்டச்சத்துக்களை உட்கிரகிக்க விடாமல் அழித்து விடவும் செய்யும். ஆரோக்கியமின்றி நாம் பாதிப்படையும் போது செக்ஸ் உணர்வு குறையும். பாலியல் குறைபாடுகள் தோன்றும்.

துத்தநாகம் உள்ள பொருட்கள்:

சிகப்பு மாமிசம், முத்துச் சிப்பிகள், பரங்கி விதைகள், மாமிசம், முட்டை, முழுத் தான்யங்களில் துத்தநாகம் இருந்தாலும் அவற்றில் உள்ள பொருட்கள் துத்தநாகம் நமது உடலில் உட்கிரகிப்பதை தடைசெய்கிறது. சர்க்கரை மைதா மாவு, பாலிஷ் செய்யப்பட்ட பச்சரிசிகளில் துத்தநாகம் குறைவான அளவு தான் காணப்படுகிறது. துத்த நாகச் சத்து போதுமான அளவு இல்லையெனில், பெண்களின் மாதவிடாய்ச் சுழற்சியைப் பாதிக்கும்.

பொட்டாசியம், செலினியம், பாஸ்பரஸ் போன்ற பொருட்கள் எந்தெந்த உணவுகளில் உள்ளன?

செலினியம்: செலினியம் உள்ள வெண்ணெய், மீன்கள், முழுக் கோதுமை மற்றும் எள்ளில் உள்ளன.

மாங்கனீசு: மாங்கனீசு கலந்துள்ள கொட்டைகள், விதைகள், முழுத் தானியங்களும் பாலுணர்வு வேட்கையைத் து£ண்ட உதவி செய்கிறது.

பாஸ்பரஸ்: முழுத்தானியங்கள், சூரியகாந்தி விதைகள், பரங்கிக் காய், தாது விருத்திக்கும், ஆண்மை அதிகரிக்க உதவும்.

நமக்குத் தேவையான வைட்டமின்களையும் தெரிந்து கொள்வது அவசியம். கீழே கூறியுள்ள வைட்டமின்கள் அதிகம் உள்ள உணவுகளை அடிக்கடி உட்கொண்டு வர வேண்டும். வைட்டமின் ஏ, சி, இ, பி காம்ப்ளக்ஸ்,ஈ பி6,பி12 மற்றும் போலிக் அமிலம்.


Spread the love
error: Content is protected !!