காச நோய்க்கு மருந்தாகும் இம்பூரல்

Spread the love

இம்பூரல் என்கிற பெயரே உங்களுக்கு வித்தியாசமாக இருக்கலாம். இந்த மூலிகை பெயரில் மட்டுமல்ல, தன்மையிலும் வித்தியாசமானது. இந்த இம்பூரல் மிகவும் அரிதான ஒன்றாக இருந்தாலும், உடலுக்கு பல நன்மைகளைத் தரும். இதற்கு, சிறுவேர், சாய வேர் என்று ஆயுர்வேதத்தில் வேறு பெயர்களும் உள்ளன. இம்பூரலைக் காணாதவன் இரத்தங்கக்கிச் செத்தானேஎன்று சட்டைமுனி தனது குறிப்பால் தெரிவித்துள்ளார்.

இம்பூரல் மூலிகையின் மருத்துவக் குணங்கள்:

இம்பூரல் மூலிகையானது, இரத்தத்தை வெளிப்படுத்தும் நோய்களான இரத்த வாந்தி, இளைப்பு இருமல், குருதியழல் நோய் போன்றவற்றைக் குணப்படுத்தும் தன்மையுடையது.

இம்பூரல் இலையை, இரண்டு மடங்கு, அரிசி மாவுடன் கலந்து அடையாகச் செய்து சாப்பிட்டு வரலாம். இப்படி சாப்பிட்டு வந்தால், இரைப்பு ஈலை நோய் தீரும்.

இம்பூரல் இலை மற்றும் வேரைக் குடிநீரில் கலந்து, ஜூரத்தால் உண்டான கை, கால் எரிச்சலுக்குப் பூசலாம். இப்படி பூசி வந்தால், கை, கால் ஏரிச்சல் குணமாகும். 

இம்பூரல் இலை, முசுமுசுக்கை இலை, கல்யாண முருங்கை இலை இவற்றை நன்கு, ஊற வைத்த புழங்கல் அரிசியுடன், அரைத்து அடை அல்லது தோசையாகச்சாப்பிட்டு வரலாம். இப்படி செய்யும் போது, ஆரம்பக் கட்ட காச நோய் தீரும்.


Spread the love