மாதம் ஒரு வைட்டமின்

Spread the love

வைட்டமின்கள் – ஒர் அறிமுகம்

உடல் ஆரோக்கியமாக இருக்க சமச்சீர் உணவு தேவை. புரதம், கார்போஹைடிரேட், கொழுப்பு, இவை மூன்றுடன் உயிர் சத்துக்களான வைட்டமின்களும், தாது உப்புக்களும் உடலுக்கு தேவையான சம அளவில் சேர்ந்து இருக்கும் உணவு தான் சமச்சீர் உணவு.

இந்த உணவில், 10 லிருந்து 20% புரதமும், 60 லிருந்து 70% கார்போஹைடிரேட்டும் 20 லிருந்து 25% கொழுப்பும் அடங்கியிருக்க வேண்டும். இந்த மூன்று உணவுகள் எரிசக்தியை (கலோரிகளை) தருபவை. வைட்டமின்களும் தாதுப் பொருட்களும் கலோரிகளை (சக்தியை) தருவதில்லை. ஆனால் உடலின் பல முக்கிய செயல்பாடுகளுக்கு இவை தேவை. அதனால் இவைகளும் சமச்சீர் உணவில் அடங்கியிருக்க வேண்டும்.

வைட்டமின்களின் அவசியம்

முக்கிய மூன்று உணவுச்சத்துக்களான புரதம், கார்போஹைடிரேட் மற்றும் கொழுப்பு – இவற்றிலிருந்து உடல் சக்தியை பெற வைட்டமின்கள் உதவுகின்றன.

உடலின் நோய் தடுப்பு சக்தியை உருவாக்குவதற்கும் வைட்டமின்கள் உதவுகின்றன.

பெரி பெரி, ரிக்கெட்ஸ், ஸ்கர்வி, மாலைக்கண் நோய் முதலியன வராமல் தடுப்பது வைட்டமின்கள் தான்.

உடலின் நரம்பு மண்டலம், ஜீரண மண்டலம், சிறுநீரகம் முதலியவற்றின் செயல்பாட்டுகளுக்கும் வைட்டமின்கள் உதவுகின்றன.

நமது உடல் வைட்டமின்களை உற்பத்தி செய்வதில்லை. நாம் உண்ணும்  உணவுகளிலிருந்து தான் பெற்றுக் கொள்ள வேண்டும். மேலும் ஒரு சில வைட்டமின்களைத் தவிர, இதர வைட்டமின்களை உடல் சேமித்து வைக்காது. சேமித்து வைக்கப்படும் வைட்டமின் – ஏ, டி, இ மற்றும் கே. இவை கல்லீரலிலும் கொழுப்பு திசுக்களையும் சேமித்து வைக்கப்படுகின்றன.

நம் உடலுக்கு வைட்டமின்கள் மிகச்சிறிய அளவில் தான் தேவைப்படுகின்றன. இதனால் அவை Micro – nutritents எனப்படுகின்றன. தேவைப்படும் அளவுக்கு குறைந்தால் நோய்கள் வரும். அதே சமயம் தேவைக்கதிமாக உட்கொண்டாலும் பல பாதிப்புகள் ஏற்படும்.


Spread the love