யோகாவின் சிறப்பு

Spread the love

அது ஒரே பயிற்சியாக உடல், உள்ளம், ஆத்மா மற்றும் சுவாசம் ஆகியவற்றை இணைத்து பயிற்சி தருகிறது. யோகா இயற்கையோடு இணைந்தது. தாவரங்கள், விலங்குகளைப் போல பல யோகாசனங்கள் அமைக்கப்பட்டுள்ளன. உதராணம் – விருக்ஸாஸனம், புஜங்காசனம், மயூராசனம் முதலியன.

மத்திய நரம்பு மண்டலத்தை நேரடியாக யோகா ஊக்குவிக்கிறது. உதராணமாக ஆஸ்த்துமாவிற்காக செய்யப்படும் ஆசனங்கள் ‘சிம்பதெடிக்’ மற்றும் ‘பாராசிம்பதெடிக்’ எனும் நரம்புகளை ‘நார்மல்’ நிலைக்கு கொண்டு வருகின்றன. இதனால் நுரையீரல் சுவாச நாளங்கள் (Bronchial tubes) நன்கு திறக்கின்றன. மூச்சு வருவது சுலபமாகிறது.

யோகாப்யாசங்கள் (தியானம், பிராணாயாமா) நேரடியாக மனதின் டென்சனை (Tension) போக்குகின்றன. மனதை, உடலை, ‘ரிலாக்ஸ்’ செய்வதற்கென்றே, பிரத்யேக யோகாசனங்கள் – சவாசனம், சுகாசனம், யோக நித்ரா போன்றவை உருவாக்கப்பட்டுள்ளன. மனச்சுமையை இறக்கி வைக்க யோகாசனங்கள் உதவுகின்றன.

முன்போ சொன்னபடி, இரத்த ஒட்டத்தின் வேகத்தை யோகா அதிகரிக்கிறது. மூளை, இதயம் போன்ற உடலுப்புகள் நல்ல ரத்தத்தால் நிரப்பப்படுகின்றன. இதனால் மனம் மகிழ்ச்சியுடனும் உடல் ஆரோக்கியத்துடனும் இருக்கும். தன்னம்பிக்கை பெருகும்.

ஆயுர்வேதத்தின் படி உடலை விட்டு வெளியேறாத கழிவுப்பொருட்களால் நோய்கள் உருவாகின்றன. சத்கிரியை, பிராணாயம் கூடிய யோக தியானம், ஆசனங்கள் இவற்றால் கழிவுப்பொருட்கள் சரியாக, சீராக வெளியேறும்.

யோகா மனஅழுத்தத்தை குறைக்கிறது. இளமையை காக்கிறது. உடல் இயக்கங்களை நல்ல நிலையில் வைக்கிறது. திடகாத்திரமான உடலை தருகிறது. அது மட்டுமல்ல உங்களை நல்லவராக, வல்லவராக மற்றும் தொடர்ச்சியான மனஅழுத்தம் பல மனநோய்களை ஏற்படுத்தும். 


Spread the love