சரியா தூங்கலன்னா புற்றுநோய் வரும் அபாயம் இருப்பதாக ஆய்வு முடிவு அலாரம் அடித்துள்ளது. அதிலும் பெண்களுக்கு தூக்கம் குறைந்தால் மார்பக புற்றுநோய் வருமாம்.
பெண்களின் தூக்கம் குறைவதால் ஏற்படும் பாதிப்புகள் தொடர்பாக அமெரிக்காவின் ஒஹியோ மாநிலத்தில் உள்ள கேஸ் வெஸ்டர்ன் ரிசர்வ் மருத்துவ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் செரில் தாம்சன் தலைமையில் ஆய்வு நடத்தப்பட்டது.
ஆய்வு முடிவு பற்றி செரில் தாம்சன் தெரிவித்துள்ளதாவது :
ஆண், பெண் அனைவருக்கும் தினமும் 6 மணி நேர தூக்கம் அவசியம். பெண்கள் கட்டாயம் 6 மணி நேரமாவது தூங்க வேண்டும். வேலைப் பளு, மன உளைச்சல் போன்ற காரணங்களால் பல பெண்கள் போதிய அளவு தூங்குவதில்லை. இரவு தூக்கம் 6 மணி நேரத்தைவிட குறைந்தால், எதிர்காலத்தில் பல பாதிப்புகள் ஏற்படும்.