உடலில் நோய் எதிர்ப்பு சக்தி இல்லாதவர்கள், தினசரி ஒரு ஸ்பூன் தேன் சாப்பிட்டு வந்தால் உடம்பு பலம் பெறும்.
மேலும் பீன்ஸ், சிப்பி வகை மீன், பருப்புகள், தயிர் மற்றும் பழங்கள் ஆகியவற்றை அதிகளவு உட்கொள்ளவும். இஞ்சியை நறுக்கி தேனில் ஊற வைத்து 48 நாட்கள் சாப்பிட்டு வர உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும்.
பிரண்டையை சாப்பிடும் போது அதிலுள்ள காரச்சத்து நமது ரத்தத்தில் கலந்து நம் உடலில் இருக்கும் நோயெதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துகிறது.
தயிரில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும், வைட்டமின் டி உள்ளது. அதிலும் இந்த தயிரில் உள்ள ஆரோக்கியமான பாக்டீரியாக்கள், குடல் பாதையை எந்த ஒரு நோயும் தாக்காமல் பாதுகாப்பதோடு, உடலில் உள்ள கிருமிகளை எதிர்த்துப் போராடும் வெள்ளை இரத்த அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கிறது.
காளானை சாப்பிடுவதால், உடலில் பல புற்றுநோய்கள் வராமல் இருக்கும். சொல்லப்போனால், காளான் எய்ட்ஸால் பாதிக்கப்பட்டவர்களின் உடலில் கூட நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்று பல ஆய்வுகள் சொல்கின்றன.