இப்பொழுதெல்லாம் சளி, இருமல், தலை வலி என்று சின்னதாக வந்தால் கூட உடனே மருத்துவரிடம் ஓடுகிறோம். ஆனால் அந்தக் காலத்தில் நம் முன்னோர்கள் இயற்கையுடன் ஒன்றி, இயற்கை மருத்துவ முறைகளைப் பின்பற்றி மிகவும் உறுதியாகவும், நோயெதிர்ப்பு சக்தியுடனும் இருந்து வந்துள்ளார்கள். அதற்க்குக் காரணம் இயற்கையாகக் கிடைக்கக்கூடிய மூலிகைகள் பற்றியும் அதன் உபயோகத்தைப் பற்றியும் அவர்கள் கற்று வைத்திருந்தது தான். ஆயுர்வேத மற்றும் சித்த வைத்திய முறையில் சில பச்சிலைகளை சேர்த்து அதைத் தண்ணீரில் கொதிக்கவைத்து அதை சிறந்த முறையில் சக்திவாய்ந்த மருந்தாக உபயோகித்தார்கள் தண்ணீரில் ஒரு சில மூலிகைகளை சாற்றை அருந்தும்போது நம் உடம்புக்கு சிறப்பான நோய் எதிர்ப்பு சக்தி இயற்கையாகவே கிடைக்கும். அந்த வகையில் இயற்கையாக தயாரிக்கப்படும் நோயெதிர்ப்பு சக்தி மிக்க மூலிகைத் தண்ணீர்கள் என்னென்ன என்பதைப் பற்றித்தான் இங்கு நாம் காணப்போகிறோம்.
1.வெந்தய தண்ணீர், நம் வீடுகளில் மிகவும் எளிமையாகக் கிடைக்கும் பொருள் வெந்தயம். இந்த வெந்தயம் நம் உடலுக்கு மிகவும் நல்லது.. வெந்தயத்தைத் தண்ணீரில் ஊற வைக்கும் பொழுது தண்ணீர் வெளிர் மஞ்சள் நிறமாகும் இதை பருகும்போது நம் உடலிலுள்ள இரத்த சர்க்கரையின் அளவு கட்டுப்படுத்தப்படுகிறது அத்துடன் வயிறு சம்பந்தப்பட்ட மற்ற நோய்களும் சரிசெய்யப்படுகிறது.
2.துளசித் தண்ணீர், துளசியில் நோயெதிர்ப்பு சக்தியும், பூஞ்சை எதிர்ப்பு சக்தியும், நோயை வளரவிடாமல் செய்யும் மருத்துவ குணம் மிகவும் அதிகமாக உள்ளது. துளசி நம் உடலுக்கு மிகவும் நல்லது. துளசி சேர்க்கப்பட்ட தண்ணீர் அருந்துவது நம்முடைய தோலுக்கு மிகவும் நல்லது. அத்துடன் காய்ச்சல் வராமல் தடுக்கிறாது. மேலும் இந்தத் துளசி தண்ணீர். சிறுநீரகப் பிரச்சனைகளையும் தீர்க்கிறது
3.இந்திய செம்மரத் தண்ணீர், பதிமுகம் என்றும் இது அழைக்கப்படுகிறது, இது கேரளாவில் அதிகமாகக் கிடைக்கிறது. இம் மரத்துண்டை தண்ணீரில் ஊறவைக்கும் பொழுது தண்ணீர் ஒருவித பிங்க் கலரில் மாறும் அந்த தண்ணீரில் அதிகமான மருத்துவ குணங்கள் உள்ளது, இது. சிறுநீரகம், தோல், கொழுப்பு, இரத்த சுத்தகரிப்பு சம்பந்தப்பட்ட எல்லா பிரச்சனைகளுக்கு தீர்க்க மிகவும் உன்னதமானது.
4.ஏலக்காய் ஊறவைத்த தண்ணீர் பட்டை நம்ம வீட்டுல இருக்குற ஒரு பொருள் தான் இது ப்ரீ ரேடிக்கல்லால் நம் உடம்பில் ஏற்படும் பாதிப்புகளைத் தடுக்க இது உதவுகிறது. மேலும் இரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தவும், பற்களில் ஏற்படும் நோய்களை நீக்கவும், சுவாசப் புத்துணர்ச்சியும் ஏற்ப்படுத்துகிறது.
5.கொத்தமல்லி (தனியா) விதைகள், தண்ணீரில் ஊறவைத்து அல்லது கொதிக்கவைத்து பருகும் போது நம் உடலுக்கும், மனதிற்கும் இதமான ஒரு சுகத்தையும், உடலைக் குளிர்ச்சியாகவும், உடலிலுள்ள அமிலத்தன்மையை சரியாக்கவும், வயிற்றுப்புண்களை நீக்கவும் இத் தண்ணீர் மிகவும் பயன்படுகிறது.