இளநரை சம்பந்தமான பிரச்சனை எதனால் எற்படுகிறது? அதற்கு என்ன தான் தீர்வு? என்பதைப் பற்றி இங்கு நாம் காணலாம்.
இந்தக் காலத்தில் சிறு வயதிலேயே ஆண் – பெண், சிறுவர்கள் என்று பாகுபாடு இல்லாமல் தலை முடி நரைக்கின்றது. முடிகள் கொட்டுவதற்கு நம்முடைய உடற்சூடு தான் முக்கியமான காரணமாகிறது. அதுவும் அதிகப்படியான வெயிலில் அலைந்து திரிபவர்களுக்கு மிகவும் விரைவிலேயே முடிகள் கொட்டி விடுகிறது.
ஆனால் அக்காலத்தில் நம் முன்னோர்களுக்கு அறுபது வயது வரைக்கும் கூட தலை முடி நரைக்காமல் இருந்துள்ளது. அதற்கு காரணம் தரமான உணவும், நல்ல உணவு பழக்க வழக்கமும் தான். இந்த காலத்தில் அனைவரும் அதிகமாக junk foods தான் உண்கின்றனர். மேலும் அனைத்திலும் இரசாயனக் கலவையின் தாக்கம் அதிகமாக உள்ளது. இந்த உணவுகள் நமக்கு எளிமையாக செரிப்பதில்லை. அதனுடன் அதிகளவு வாயுப் பொருள்களை உண்பதால், நம் உடலில் வாயுக்கள் சேர்கின்றது. இந்த வாயுக்கள் பித்த நீராக மாறி நம் தலையில் சேர்கிறது, இந்த பித்தநீர் தான் நம் முடியின் வேர்க்கால்களை பாதித்து நரையை உண்டாக்குகிறது.
இந்த இளநரையைத் தீர்க்க நம் உணவு பழக்க வழக்கத்தில் சில பல மாற்றங்களைக் கொண்டு வருவது மிகவும் அவசியம். அதிகளவு இரும்புச்சத்துக்கள் நிறைந்த கீரைகள், பழங்கள், மீன் போன்ற உணவுகள் உண்பது அவசியமாகும்.
முக்கியமாக ஊற வைத்த உணவுகள், பூட்ஸ், வறுக்கப்பட்ட பூட்ஸ் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். வாரத்திற்கு ஒரு முறை எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும். தினமும் தலையில் தேங்காய் எண்ணெய் தேய்க்க வேண்டும். ஈர தலையில் எண்ணெய் தேய்ப்பதை தவிர்க்கவும். சாப்பிடும் உணவில் அதிக அளவு கரிவேப்பிலை சேர்த்துக்கொள்ளவும்.
வீட்டிலேயே இளநரையைப் போக்கக்கூடிய மூலிகைத் தைலம் தயாரித்து பயன்படுத்தலாம். தேவையான பொருட்கள் : தேங்காய் எண்ணெய் 1 கப், சீரகம் 1 ஸ்பூன், சோம்பு ½ ஸ்பூன், சின்ன வெங்காயம் 3, கரிவேப்பிலை சிறிதளவு, கொத்தமல்லி சிறிதளவு, நெல்லி வத்தல் 1௦ கிராம், வெட்டி வேர் 5 கிராம் இவை அனைத்தையும் ஒன்றாக சேர்த்து நன்கு காய்ச்சி வடிகட்டி தினமும் தலையில் தேய்த்து வர இளநரை மறைந்து கூடுதல் இளமை கிடைக்கும்.