சர்க்கரையை சமாளிக்க சில யோசனைகள்

Spread the love

ஒரு மனிதனுக்கு நோய் நொடியில்லாமல் வாழ்க்கையைத் தொடருவது என்பது இறைவன் கொடுத்த வரம் என்று தான் கூற வேண்டும். ஒரு சிறிய காயம் கூட வேதனை தரும் பொழுது நீரிழிவு இரத்த அழுத்தம், மூட்டுவலி என்ற நோய்களைப் பற்றி, அதனால் ஏற்படும் உடல் மற்றும் மன வேதனைப் பற்றிச் சொல்லவே தேவையில்லை நாற்பது வயதை தாண்டினாலே வீட்டிற்கு ஒருவராவது ஏதோ ஒரு குறிப்பிட்ட அல்லது பெரும்பாலான வியாதிகளைக் கொண்டுள்ளார்கள். எனக்கு சர்க்கரை வியாதி, இதனால் இரத்த அழுத்தமும், மூட்டு வலியும் அடுத்தடுத்து வந்து சிரமத்தைத் தருகிறது என்று கூறுபவர்கள் பலர்… மேற்கூறிய நோய்களுக்கு என்ன காரணம்? இதற்குரிய மருந்துகளை உட்கொண்டு வந்தாலும், மற்ற வாழ்க்கைச் சூழல் மாற்றம், உடல் ஆரோக்கியத்திற்குரிய சமச்சீர் உணவுகள், வெளியுலகச் செயல்பாடுகளையும் நாம் அறிந்து சரி செய்து கொண்டால் மேற்கூறிய வியாதிகள் மட்டுமல்ல, நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரித்து எளிதாக எவ்வித வியாதிகளும் நம்மைப் பாதிக்காது.

உணவு வகைகள் கண்டறியுங்கள்…

சர்க்கரை வியாதியுள்ளவர்கள், இதயம் சார்ந்த, இரத்த அழுத்தம் சார்ந்த பிரச்சனைகளுக்கும் சம்பந்தம் உண்டு என்பதால், முதலில் அவர்களது உடல் எடை அதிகரிக்காமல் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். உடல் எடை வழக்கத்தை விட (வயது, உயரம் அளவுகளுக்கு) கூடுதலாக இருந்தால் உடனே உடல் எடையைக் குறைக்க முயற்சி செய்ய வேண்டும். அத்துடன் அன்றாட உணவுகளிலும் கட்டுபாடு விதித்து, சத்துள்ள சமச்சீரான உணவுகளை தேர்தெடுக்க வேண்டும் அரிசி, கோதுமை முழுத்தானியங்களை வீட்டில் அரைத்த மாவு வகைகள், முழுத்தான்ய கோதுமை ரொட்டி, பழுப்பு அரிசி, நு£டுல்ஸ் அல்லது பாஸ்தா சுத்திகரிக்கப்பட்ட ஆலைகளால் தயார் செய்யப்பட்ட வௌ¢ளை மாவுகளினால் தயாரிக்கப்படும் பிஸ்கெட்டுகள், சான்ட்விச், பர்கர் பாஸ்தா போன்றவைகளை தவிர்க்க வேண்டும். உமிநீக்கப்படாமல் அரைத்த முழுத்தான்ய உணவுகளில் தான் சத்துக்கள் அதிகம் உள்ளன. மேல் தோல் நீக்கப்படாத கடலைப்பருப்பு, உளுந்தம்பருப்பு போன்ற பருப்பு வகைகளைச் சேர்த்துக் கொள்ளவும்.

பிராக்கோலி, முட்டைக்கோஸ், காலிஃப்ளவர், கேரட் தக்காளி, வௌ¢ளரி, ஸ்பினாச், லெட்டுஸ் கீரை வகைகளை சாப்பாட்டில் சேர்த்து கொள்ளவும். மாவுப் பொருள் அடங்¢கிய உருளைக்கிழங்கு, சீனிக்கிழங்கு, வாழைக்காய் போன்றவற்றை தவிர்க்கவும். பட்டாணியில் அதிக அளவு கலோரி இருப்பதால் தவிர்த்து விடவும். ஆப்பிள், ஆரஞ்சு தர்ப்பூசணிப் பழங்கள் சாப்பிடலாம் ஆனால் அதிக இனிப்புள்ள பழங்களை தவிர்க்க வேண்டும். பழரசம், ஜாம், ஜெல்லி, கோகோகோலா மென்பானங்கள் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். இறைச்சி வகையில் சிவப்பு மாமிசம் தவிர்க்க வேண்டும். ஆனால் மீன், கோழி இறைச்சி சாப்பிடலாம் வாரம் இரண்டு அல்லது மூன்று முட்டை வரை சாப்பிடலாம். தினசரி 8 அல்லது 10 பாதாம் பருப்புகள் நிலக்கடலைப் பருப்பு சாப்பிடலாம்.

இனிப்புகளை தவிருங்கள்:

சர்க்கரை, தேன் போன்றவைகளை தவிர்க்க வேண்டும். மாதமிருமுறை சர்க்கரை தேன் கொண்டு தயாரிக்கப்பட்ட உணவுகள்./ஸ்னாக்ஸ் சாப்பிட வேண்டும் என்ற ஆசையிருந்தாலும் குறைந்த அளவும் மேற்கூறிய உணவு/ஸ்னாக்ஸ்களில் உள்ள கார்போஹைட்ரேட் சீரான அளவாக இருக்கும் படி பார்த்துக் கொள்ள வேண்டும்.  இனிப்பால் செய்யப்பட்ட மிட்டாய், சாக்லேட் முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

செயற்கை இனிப்புகளை தவிருங்கள்:

நீரிழிவு நோயாளிகள், உணவுக் கட்டுப்பாட்டில் இருப்பவர்களுக்கும் மிகவும் பரிந்துரைக்கப்படும் செயற்கை இனிப்பூட்டிகளும் உடலைக் கெடுக்கும் அவ்வாறு இனிப்பூட்டிகள் அல்லது இனிப்புகள் சேர்க்க வேண்டுமென்றால் ஸ்டீவியா என்ற தாவரத்தில் இருந்து தயாரிக்கப்படும் இயற்கை இனிப்பூட்டிகளை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

பால் மற்றும் பால் பொருட்கள்:

குறைந்த அளவு கொழுப்பு காணப்படும் பால் மற்றும் அதிலிருந்து தயாரிக்கப்படும் தயிர், பனீர் வகைகள் உணவில் சேர்த்துக் கொள்ளலாம். லாக்டோஸ் (பாலில் உள்ள சர்க்கரை அளவு) குறைவாகவும், சாச்சுரேடட் கொழுப்புகள் மனிதர்களுக்கு நன்மை செய்வதாக இருப்பதால் சர்க்கரை நோயாளிகளுக்கு சோயா பால் அருந்த பரிந்துரை செய்யப்படுகிறது. அதே நேரத்தில் அதிக அளவு கொலஸ்ட்ரால் அதில் அடங்கியிருத்தல் கூடாது. அதிக அளவு புரதச்சத்து அதில் இருப்பது அவசியம்.

சரியான சமையல் எண்ணெயை தேர்ந்தெடுங்கள்:

கடுகு எண்ணெய், கடலை எண்ணெய், சாப்ஃப்ளவர்/சூரியகாந்தி எண்ணெய், சோயா எண்ணெய் மற்றும் ஆலிவ் எண்ணெய் நீரிழிவு நோயாளிகளுக்கு நல்லது. சோய பாலும் பரிந்துரைக்கப்படுகிறது. இக்கொழுப்பு வெண்ணெய், வெண்ணெய் சார்ந்த பொருட்கள் நெய், வனஸ்பதி, மார்க்கரெய்ன், கீரிம், மயோன்னஸ், போன்றவைகளில் காணப்படுவதால் தவிர்த்து விடவும் எண்ணெய் விட்டு வறுக்கப்படும், பொரிக்கப்படும் பக்கோடா, சமோசா, பர்கர், மீன் சிப்ஸ் வகைகள், உப்பு சேர்த்து வறுக்கப்பட்ட தின்பண்டங்கள் கொழுப்பையும் உப்பையும் அதிகரிக்கும் என்பதால் மேற்கூறிய வகையில் உள்ள உணவுகளை தவிர்க்க வேண்டும்.

நீரிழிவு நோயாளிகள், தாங்கள் உண்ணும் உணவானது, இரத்ததில் சர்க்கரை அளவானது, திடீரென உயர்வான அளவிலிருந்து மிகக் குறைவான அளவிற்கு வரும் வண்ணம் உள்ளதாக இல்லாதவாறு பார்த்துக் கொள்வது மிகவும் அவசியம். இதனால் சமச்சீரான உணவைத் தேர்ந்தெடுத்து, சீரான கார்போஹைட்ரேட் அளவை பராமரித்துக் கொள்ள வேண்டும். தினசரி வழக்கமான நேரத்தில் காலை உணவைச் சாப்பிட வேண்டும். நேரம் தவறி சாப்பிடுவது, அல்லது சாப்பிடாமல் இருத்தல் கூடாது. காலை உணவை எக்காரணம் கொண்டும் தவிர்க்கக்கூடாது.

மூன்று அல்லது நான்கு மணி நேரத்திற்கு மேல் சாப்பிடாமல் இருக்ககூடாது,  எந்தக் காரியத்தையும் செய்வது அல்லது வெளியில் செல்வது கூடாது. சாப்பிடும் வழக்கமான நேரத்தை, தினசரி மாறுதல் இல்லாமல், ஒரே நேரமாக தவறாமல் கடைபிடித்து வர வேண்டும். ஒவ்வொரு உணவையும் சிறு, சிறு கவளமாக உட்கொள்ள வேண்டும். சத்துக்கள் அதிகம் உள்ள ஸ்னாக்ஸ் வகை உணவுகளை தேர்ந்தெடுத்து சாப்பிடவும் அவ்வகை உணவுகள் எப்பொழுதும் கிடைக்க கூடிய ஒன்றாக இருக்குமாறு அமைத்துக் கொள்ளவும் தினசரி நீர் அருந்தி வருவதில், குறைந்தது 8 டம்ளருக்கு குறையாமல் இருப்பது நல்லது இதன் மூலம் நீர் வறட்சி உடலில் ஏற்படுவதை தவிர்க்கலாம். ஆர்வமற்ற உணவுக் கட்டுப்பாடுகளை நீக்கவும்.

உணவில் உப்பின் அளவைக் குறைப்பது அவசியம் உப்பு அதிகமுள்ள உணவுகள் உட்கொள்வதையும் குறைக்க வேண்டும். வீட்டை விட்டு வெளியே செல்லும் பொழுது, வெளி இடங்களில் அல்லது ஒட்டல்களில் சாப்பிடும் பழக்கத்தை குறையுங்கள் அல்லது தவிர்க்கவும்.

பதப்படுத்தப்பட்ட, டின்களில் அடைக்கப்பட்ட பழங்கள், காய்கறிகள் இறைச்சி வகை உணவுகளை தவிர்ப்பது மிகவும் முக்கியமானது உடனடியாக, உணவு தயாரிக்கும் வண்ணம் விற்பனை செய்யப்படும். திடீர் உணவுப் பொருள்களானது அதிக அமிலத்தை தோற்றுவிக்கும். இவற்றில் உள்ள சோடியம் உப்பு அதிக அளவு உடல் நலத்தைப் பாதிக்கும். பேக்கரிகளில், உணவுப் பண்டங்களில பயன்படும், பேக்கிங் சோடா, பேக்கிங் பவுடரில் உள்ள சோடியம் உப்பின் அளவு என்ன என்பதை அறிவிக்கும் லேபிளைப் பார்த்து தவிர்க்க வேண்டும். தேனீர், காபி, கோக், மது வகைகள் தவிர்க்கவும். காபினின் அளவு குறைவாக உள்ளதாக பார்த்து காபி, டீ அருந்தலாம் எப்பொழுதும் உடலைச் சுறுசுறுப்பாக வைத்துக் கொண்டால், நீரிழிவு கட்டுக்குள் கொண்டு வரலாம். தேகப்பயிற்சியுடன் கூடிய ஆரோக்கியம் தரும் உணவுகளை எடுத்துக் கொள்ள உடல் எடையைக் குறைக்க உதவும்.


Spread the love