தாழ் நிலை சர்க்கரை – ஹைபோ கிளைசிமியா

Spread the love

நீரிழிவு நோயின் ஒரு பக்கம் ஹைபர் கிளைசிமியா – ரத்தத்தில் அதிக அளவு சர்க்கரை. கடுமையான மறுபக்கம் – திடீரென ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைந்துவிடுவது. ஹைபோக்ஸைசீமியா (Hypoglycemia) – தாழ்நிலை சர்க்கரை)

தாழ்நிலை சர்க்கரை ஒரு எமர்ஜென்சி‘ – அபாயகரமானது – சாதரணமாக ரத்தத்தில் சர்க்கரையின் அளவு 70 லிருந்து 110 மில்லிகிராம் / டெஸி மீட்டர்) இருக்கலாம். இந்த நிலை குறையக் கூடாது. கூடவும் கூடாது. இந்த மாற்றம் நீரிழிவு நோயின் சிக்கல்களில் டாக்டர்களே பயப்படும் சிக்கல் தாழ்நிலை சர்க்கரை.

காரணங்கள்

  1. இன்சுலின் அளவு அதிகமானால், போட்டுக் கொள்ளும் இன்சுலீன் டோஸ்அதிகமானால்
  2. பட்டினியிருந்தால், அல்லது இருவேளை சாப்பாட்டுக்கு இடையே அதிக நேரம் இடைவெளி நேர்ந்தால்
  3. உடற்பயிற்சி அதிகமானால்
  4. சில மருந்துகள், நீரிழிவு வியாதிக்காக உட்கொள்ளும் மாத்திரைகளால் கூட ரத்தச் சர்க்கரை அளவு குறைந்து விடும். வேறு வியாதிகளுக்காக கொடுக்கப்படும் (நீயுமோனியா, க்வுனைன் (Quinine) மருந்துகளாலும் ஹைபோகிளைசிமீயா ஏற்படலாம்.
  5. கார்போ-ஹை-டிரேட்ஸ் குறைந்த உணவுகள். சில உணவுகளை (ப்ரூக்டோஸ், காலக்டோஸ், அமினோ அமிலங்கள்) சீரணிக்கமுடியாமல் போதல்
  6. வெறும் வயிற்றில் மது அருந்துவது, அதுவும் சர்க்கரை செறிந்த மதுபானங்கள்
  7. அபூர்வமாக கணையத்தில் கட்டி (இதனால் அதிக இன்சுலீன் சுரக்கும்) அட்ரீனலின், பிட்யூடரி குறைவாக சுரப்பது.
  8. ஹைபோ கிளைசீமியா கடும் உடற்பயிற்சியின் போதும், நடு இரவிலும் ஏற்படும். பகலில் 11 மணி – 12 மணி, மாலை 4.30 முதல் 6.30 மணி வரை ஏற்படலாம். அதிகாலை  நேரங்களிலும் ஏற்படலாம்.

அறிகுறிகள்

சர்க்கரை அளவு தீடீரென்று குறைந்தவுடனே, உடல் உடனே எபினெப்ரின்‘ (Epinephrine) என்ற ஹார்மோனை அட்ரீனல் சுரப்பி மூலம் சுரக்கும். இது உடனே சர்க்கரையை உடலிலிருந்து ரிலுஸ்செய்யும். கூடவே, அதிக வியர்வை, நரம்புத்தளர்ச்சி, நடுக்கம், மயக்கம், படபடப்பு, மனக்குழப்பம் இவற்றை உண்டாக்கும். பசி அதிகமாக ஏற்படும். தொடர்ந்து சர்க்கரை அளவு குறைய, குறைய, களைப்பு, தலைவலி, குழப்பம், கண்பார்வை மங்குதல், குடிகாரன் போல் இயல்பு மாறிய நடவடிக்கை, சுய நினைவை இழத்தல், மயங்கி விழுதல், கோமா போன்றவை ஏற்படும்.

ஹைபோகிளைசீமியா அறிகுறிகள் தெரிந்த உடனே இரண்டு ஸ்பூன் சர்க்கரை / குளூக்கோஸ், போன்றவற்றை நீரில் கரைத்து கொடுக்கவும். பழச்சாறு கூட கொடுக்கலாம். கற்கண்டு கட்டிகள் 2 அல்லது 3 கொடுக்கலாம். அறிகுறிகள் உடனே மறையும். நீடித்தால் இன்னும் சர்க்கரையை கொடுக்கவும்.

இதனால் தான் சர்க்கரை நோயாளிகள், எப்போதும் சர்க்கரை, சாக்லேட், கற்கண்டு போன்றவற்றை கைவசம் வைத்திருக்க வேண்டும் என்று அறிவிறுத்தப்படுகிறார்கள் ஹைபோகிளைசீமியா அறிகுறிகளை நன்கு தெரிந்து வைத்துக் கொண்டு, அவை தோன்றியவுடனே இவற்றை சாப்பிட வேண்டும். இல்லாவிடில் அதிக நேரம் தாழ்சர்க்கரை நிலை நீடித்தால் மூளை பாதிக்கப்படும்.

ஹைபோகிளைசீமியா டைப் – 1 (இன்சுலீன் ஊசி போட்டுக் கொள்ளும்) சர்க்கரை நோயாளிகளை அடிக்கடி பாதிக்கும். டைப் – 2 நோயாளிகளை மிகக் குறைவாகவே தாக்குகிறது.

ஃப்ரூக்டோஸ் (Furctose) மற்றும் காலக்டோஸ் (Galactose) இவை ஒத்துக் கொள்ள முடியாத, ஏற்றுக் கொள்ள முடியாதவை. நோயாளிகள் இவை இருக்கும் உணவுகளை ஒதுக்க வேண்டும். பாலில் இருக்கும் லியூசைன் (Leucine) சிலருக்கு ஒத்துக் கொள்ளாது. இவர்கள் பாலை தவிர்க்க வேண்டும். இல்லாவிடில் மூளை பாதிப்பு ஏற்படலாம். மருத்துவரை கலந்து ஆலோசித்து இந்த ஒத்துக்கொள்ளாத உணவுகளை கண்டறிந்து கொள்வது அவசியம்.

இந்த அபாயகரமான நிலை, ஒரு வாய்சர்க்கரையால் சரி செய்ய முடிவது ஒரு அதிசயம் தான். நாள்தோறும் குறித்த வேளையில் உணவு உட்கொள்ளவும்.

ஆயுர்வேதம்.காம்


Spread the love