சந்தோஷமாக பணிபுரிவது எப்படி?

Spread the love

தினசரி 10 முதல் 30 நிமிடங்கள் வரை நடை பயிற்சி செய்யவும். அவ்வாறு நடக்கும் பொழுது முடிந்த அளவு சிரித்த முகமாக இருங்கள். ஒவ்வொரு நாளும் ஒரு 10 நிமிடமாவது அமைதியாக அமர்ந்து இருங்கள்.

7 மணிநேரம் குறைந்த பட்சம் உறங்குதல் அவசியம்

அதிக விளையாட்டுகளில் ஈடுபாடு கொள்ளுங்கள்.

அதிக அளவு புத்தகங்கள் படிக்க ஆரம்பியுங்கள்.

தியானம், யோகா, பிராத்தனை செய்வதற்கு நேரம் ஒதுக்குங்கள் நமது தினசரி வாழ்க்கை சுறுசுறுப்பாக இயங்க தினசரி சக்தியை அவை நமக்கு தருகின்றன.

70 வயதுக்கு மேல் உள்ள மற்றும் 6 வயதிற்கு கீழ் உள்ள நபர்களுடன் அதிக நேரம் செலவிடுங்கள்.

எழுந்திருக்கும் பொழுது அதிகமாக கனவு காணுங்கள்.

மரத்திலும் தாவரங்களிலும் விளைந்த உணவுகளை அதிகம் சாப்பிடுங்கள்.

தினசரி அதிகம் தண்ணீர் குடியுங்கள்.

ஒவ்வொரு நாளும் குறைந்தது 3 நபர்களையாவது சிரிக்கவைக்க முயற்சியுங்கள்.

வதந்தி, முணுமுணுக்கும் நபர்களிடம் உங்கள் பொன்னான நேரத்தை வீணாக்காதீர்கள்.

பழைய பிரச்சனைகளை மறந்து விடுங்கள். உங்கள் பார்ட்னரிடம் அவரது கடந்தகால குறைகள்/தவறுகளை நினைவுப்படுத்தாதீர்கள். அது உங்களது தற்போதைய சந்தோஷங்களைக் கெடுத்து விடும்.

எதிர் மறை எண்ணங்கள் மனதில் இடம் பெறக்கூடாது. அதற்குப் பதிலாக, நிகழ்காலத்தில் உள்ள நேர் மறை எண்ணங்களில் உங்கள் சக்தியை செலவிடுங்கள்.

வாழ்க்கை என்பது பள்ளி இங்கு நாம் கற்றுக்கொள்ள வந்துள்ளோம். பிரச்சனைகளும் தீர்வுகளும் பாடத்திட்டத்தில் ஒரு பகுதி ஆனால் இதில் கற்றுக் கொண்ட பாடங்கள் வாழ்நாள் முழுவதும் நினைவிலிருத்தப்படும் ஒன்று என்று புரிந்து கொள்ள வேண்டும்.

காலை உணவை மன்னன் போல சாப்பிடுங்கள், மதிய உணவை இளவரசன் போன்று சாப்பிடுங்கள், இரவு உணவை பிச்சைக்காரன் போல சாப்பிடுங்கள் உன்பதை உணரவேண்டும்.

அதிக அளவு சந்தோஷமாக புன்னகை செய்யுங்கள்.

அதிக அளவு மனம் விட்டு சிரியுங்கள்

வாழ்க்கை மிகவும் குறுகிய காலம்தான் இறைவன் நமக்கு வழங்கியுள்ளான்.

எப்பொழுதும் சீரியஸ் தோற்றமாக எண்ணங்கள் உடையவராக இருக்காதீர்கள்.

ஒவ்வொரு முறையும் வாக்கு வாதங்களில் நாம் ஜெயிக்க இயலாது. அதனால் நமக்கு பிடிக்காத விஷயங்களையும். ஏற்றக் கொள்ளுங்கள்.

பழைய நிகழ்ச்சிகளில் மனம் திருப்தி கொள்ளுங்கள். அப்போது தான் இப்பொழுததுள்ள விஷயங்கள் உங்களை கவலை கொள்ளச் செய்யாது.

மற்றவர்கள் வாழ்க்கையுடன் உங்கள் வாழ்கையை ஒப்பிடாதீர்கள். மற்றவர்களின் வாழ்க்கை& பயண திட்டங்களைப் பற்றி உங்களுக்கு எதுவும் தெரிய வாய்ப்பில்லை. உங்கள் கணவர் மனைவியை மற்றவர்களுடன் ஒப்பிட்டு பேசாதீர்கள்.

உங்கள் சந்தோஷம் முதலில் உங்களிடமிருந்து தான் ஏற்படும்.

ஒவ்வொருவரையும் ஒவ்வொரு விஷயத்திலும் மன்னித்து விடுங்கள்.

உங்களைப் பற்றி மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது உங்களுக்கு தேவையில்லாத ஒன்று.

சூழ்நிலை மோசமாகவோ நல்லதாகவோ இருந்தாலும் கண்டிப்பாக மாற்றம் உருவாக சந்தர்ப்பங்கள் உண்டு.

நீங்கள் நோயுற்று படுக்கையில் படுத்து விட்டீர்கள் எனில் நீங்கள் பார்க்கும் வேலை உங்களை பராமரிக்காது! நண்பர்கள் தான் உதவ முடியும். எனவே எப்போதும் அவர்களுடன் தொடர்பில் இருங்கள்.

உங்களுக்கு உபயோகம் தராத அழகு அல்லது மகிழ்ச்சி தராத எந்த ஒரு விஷயமானாலும், அதனை ஒதுக்கி விடுங்கள்.

மிகச் சிறந்த ஒன்று என்பது இனிமேல் தான் வரவேண்டும்.

எழுந்திருங்கள் ஆடை அணிந்து கொள்ளுங்கள். உங்களை வெளி  உலகம் எவ்வாறு உணருகிறது என்பது ஒரு விஷயமே இல்லை.

சரியான செயலைச் செய்யுங்கள்.

உங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் அடிக்கடி பேசுங்கள்.

உங்கள் உள் மனசு எப்போதும் சந்தோஷமாக இருக்க வேண்டும். எனவே சந்தோஷ சூழ்நிலைக்கு மாறுங்கள்.

 தினசரி ஏதாவது ஒரு சிறப்பான விஷயங்கள்/ பொருட்கள் மற்றவர்களுக்கு வழங்குங்கள்.

அதிகம் எதனையும் செய்யவேண்டாம். ஒரு எல்லைக்குள் வைத்துக் கொள்ளுங்கள்.

                           முருகன்


Spread the love