பழங்களை நறுக்க, சாறாக்க அதனுடன் பால், சர்க்கரை, குளுகோஸ் போன்றவற்றைச் சேர்த்து அருந்துவது தவறு. அப்படிச் செய்யும் பொழுது, அதில் உள்ள சர்க்கரையும், பாலும், பழத்தில் இருக்கின்ற இயல்பான சத்துக்களின் குணத்தை, பண்பைக் கெடுத்துவிடும். செரிமானக் கோளாறு ஏற்படும். எனவே பழத்தை தோலோடு சேர்த்து சாப்பிடுவது தான் நல்லது.
நீங்கள் தேர்ந்தெடுக்கும் பழம் எதுவாக இருந்தாலும், முதலில் நன்றாக தண்ணீர் விட்டுக் கழுவி சுத்தம் செய்த பின்புதான் சாப்பிட வேண்டும். சமைக்க வேண்டும். பொதுவாக இப்போதெல்லாம், சந்தைக்கு வரும் பழங்கள் நீண்ட காலம் கெடாமல் இருப்பதற்காக, ஒரு சில பழங்கள் விரைவில் பழுத்துவிடாமல் இருக்க தோலின் மீது பலவித வேதிப் பொருட்களைப் பயன்படுத்துகிறார்கள். செயற்கை உரங்கள், பூச்சிக் கொல்லி மருந்துகள் பயன்படுத்தி அதிக அளவில் பழங்கள் விளைவிக்கப்படுகிறது. இதன் காரணமாக பழங்களில் வேதிப்பொருட்கள், நச்சுப் பொருட்கள் காணப்படுகிறது. இவற்றைப் பயன்படுத்தும் முறை தண்ணீர் மட்டும் விட்டு கழுவினாலும் வேதிப் பொருட்களை முற்றிலும் நீக்க முடிவது இல்லை. அதனால், இயற்கை முறை விவசாயத்தில், இயற்கையாக விளைவிக்கப்பட்ட பழங்களை, விளைகின்ற பருவத்திற்கு ஏற்றவாறு வாங்கி சாப்பிடுவதுதான் மிகவும் நல்லது.