குடியை நிறுத்த முயல்வோர்களுக்காக

Spread the love

                            சிலரது தவறான அபிப்பிராயங்கள்

1.    மதுபானம் குடிப்பதைத் திடீரென நிறுத்தினால் ஹார்ட் அட்டாக உண்டாகும்.

2.    குடி பழக்கத்தின் காரணத்தால் சிறிதளவு மது குடிக்கலாம், என்பது மருத்துவர்கள் கருத்து எனக கூறுவார்கள்.

3.    சிலநாள் குடிப்பதை நிறுத்தி விட்டுப்பின்னர் குடிக்கத் தொடங்கினால் கெடுதல் உண்டாகும்.

4.    குடிக்காமல் இருந்து நான் கஷ்டப்படுவதைப் பார்க்கும் என் குடும்பத்தினர் என்னை குடிக்க அனுமதிக்கிறார்கள்.

5.    அலுவலக பார்ட்டிகள், சில விழாக்கள் போன்றவற்றில் குடிக்க வேண்டிய அவசியம் ஏற்படலாம்.

6.    பவித்திரமான சடங்குகளோ, பிரார்த்தளைகளோ நடக்கும் போது நாமாகவே குடிக்கமாட்டோம்.

7.    குடியினால் வரும் கேடுகளை உணரும் போது நமக்கு நாமே குடிப்பதை நிறுத்தி விடுவோம்.

8.    திடமான மனது இல்லாதவர்கள் குடிப்பழக்கத்தை நிறுத்த முடியாது.

9.    குடிப்பதை நிறுத்தி விட்டுச் சில காலம் சென்று பின்னர் குடித்தால் அதிக அளவில் குடிக்க வேண்டி வரும்.

10.   மது குடித்துப் பழகிய பின்னர் அதை நிறுத்தி குடும்ப உறவு சுகமின்றிப் போகும் உண்மையில் பார்க்கப் போனால் மேற்கூறியுள்ள எதுவும் நிகழாது.  இவை எல்லாம்குடிப்பவர்கள் தமக்குத் தாமே கூறிக் கொள்ளும் நொண்டிச் சமாதானங்கள்.  இவைகளை நன்கு உணர்ந்து மதுவை நிறுத்த வேண்டும் என்று உறுதியுடன் முடிவு எடுத்தால் நிறுத்த முடியும் முடியாதவர்கள் மன நல மருத்துவர்களிடம் ஆலோசனை பெறலாம்.


Spread the love