மனம் தரும் உடல் உபாதைகள் -2

Spread the love

ஆயுர்வேத மூலிகைகள்

பிரம்மி (Bacopa monnieri)

வல்லாரை (Centella Asiatica)

சங்கு புஷ்பம் (Convolvulus pluricalis)

அமுக்கிரா கிழங்கு (Withania somnifera)

சர்ப்பகந்தா (Rauwolfia serpentina)

ஜடமான்சி (Nardostachys Jatamansi)

வசம்பு (Acorus calamus)

தவிர வாஜீ கர்ணத்திற்கு பயன்படும் மூலிகைகளும், (பூனைக்காலி) உன்மத்தத்திற்கு உபயோகப்படுகின்றன. மன பரபரப்புக்கு , பொதுவாக, கொட்டைக்கரந்தை (Sphaeranthes indicus), சதவாரி தகரா (Valeriana Wallichi), குடூச்சி (Tinospora cordifolia) மூலிகைகள் கொடுக்கப்படுகின்றன.

மன ஓய்வுக்கு

காஃபி, டீ, சாக்லேட், குளிர்பானங்கள் (கோலா போன்றவை) இவற்றை தவிர்க்கவும்.

கால் கப் இஞ்சி, கால் கப் பேகிங் சோடாவை, பாதி – டப்பின் நீரில் போட்டு 10 – 15 நிமிடம் அமிழ்ந்திருக்கவும்.

உடல் (தலை உட்பட) முழுவதும் நல்லெண்ணை தடவி குளிக்கவும். எண்ணை சிறிது சூடாக இருக்க வேண்டும்.

சிறிது குங்குமப் பூ, ஜாதிக்காய் விழுது சேர்த்த பாதாம் பால் குடித்தால் மனபரபரப்பு குறையும்.

ஆரஞ்சு ஜுஸ் + தேன் (ஒரு ஸ்பூன்) + ஜாதிக்காய் பொடி (ஒரு சிட்டிகை) கலந்து குடிக்கலாம்.

யோகா

மன நோயாளிகள் கட்டாயம் யோகா செய்ய வேண்டும். சூர்ய நமஸ்காரம், பின்னால் வளைந்து செய்யும் புஜங்காசனம் போன்றவைகளை செய்ய வேண்டும். தவறாமல் பிரணாயாமம் செய்வது அவசியம். தகுந்த யோகா குருவிடம் பயின்று, ஆசனங்களை மேற்கொள்ளவும்.


Spread the love
error: Content is protected !!