சில பெண்களுக்கு முகத்தில், ஆண்களை போல முடி வளரும். இதன் காரணமாக அவர்கள் அடிக்கடி உதட்டின் மேல் உள்ள முடியை வாரத்திற்கு ஒருமுறை அல்லது மாதத்திற்கு ஒருமுறை நீக்கி கொண்டே இருபார்கள். இது ஒரு பெரிய கவலையாக அவர்களுக்கு இருக்கும்.
சிலருக்கு வெளியில் தெரியாது. சிலருக்கு நன்றாக தெரியும். தலை முடியை போன்று மேல் உதட்டில் வளர்வதும் சாதாரண விஷயம் தான். இப்படி அதிகமாக மேல் உதட்டில் வளர்வதற்கு ஹார்மோன் சமச்சீர் இன்மை போன்றவையே காரணம் ஆகும். இந்த பிரச்னையை சரி செய்ய வீட்டிலேயே மருத்துவ முறைகள் உள்ளன. அவற்றை பார்ப்போம்…
இயற்கை மருத்துவ முறைகள்
உதட்டின் மேல் பகுதியில் உள்ள முடி உங்களின் அழகை கெடுக்கிறதா! அதற்காக எப்பொழுதும் அழகு நிலையத்தை தேடி போக வேண்டியது இல்லை. இனி இயற்கை பொருட்களை கொண்டே நிரந்தரமாக முடியை நீக்கி விடலாம்.
குப்பைமேனி இலை, வேப்பங்கொழுந்து, விரலி மஞ்சள் ஆகியவற்றை சேகரித்து கொள்ளவும். இவற்றை நன்றாக அரைத்து, படுக்கைக்கு செல்லும் முன் மேல் உதட்டில் பூசவும். இரண்டு வாரம் தொடர்ந்து பூசி வந்தால் உதட்டின் மேல் இருக்கும் முடி உதிர்ந்து விடும்.
கடலை மாவு, மஞ்சள் தூள் மற்றும் தயிர் ஆகியவற்றை கலந்து முகத்தில் பூசி சிறிது நேரம் கழித்து கழுவி வந்தால் முகத்தில் உள்ள முடி படிப்படியாக கொட்டிவிடும்.
உருளைக்கிழக்கு துருவி கொண்டு, அதனுடன் துவரம் பருப்பு சேர்த்து முகத்தில் பூசி 15 நிமிடம் கழித்து கழுவி வந்தால் முகத்தில் முடி வளர்வதை தடை செய்யும்.
சிறிதளவு எலுமிச்சை சாறு மற்றும் தண்ணீரை சேர்த்து ஒரு கலவையை தயார் செய்து கொள்ளலாம். இதனை உதட்டின் மேல் உள்ள முடியில் தேய்த்து 5 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவுவதினால், உதட்டின் மேல் முடி வளர்வதை தடை செய்கிறது. இதனை வாரத்திற்கு இரண்டு முறை செய்து வரவும்.
மஞ்சள் தூள், உப்பு, எலுமிச்சை சாறு மற்றும் பால் ஆகியவற்றை கலந்து மேல் உதடு மற்றும் முகத்திலும் பூசலாம். இவ்வாறு பூசி வந்தால் முகத்தின் பளபளப்பு கூடும். உதட்டின் மேல் உள்ள முடி உதிர்ந்து விடும்.
கஸ்தூரி மஞ்சள் தூளுடன், தேவையான பாலை சேர்த்து நன்றாக குழைத்து 10 நிமிடம் கழித்து முகத்தில் பூசி வந்ததால் முகத்தில் உள்ள முடி அனைத்தும் கொட்டி விடும். முகம் பார்ப்பதற்கு பொலிவுடன் இருக்கும்.
சிறிதளவு எலுமிச்சை சாறு மற்றும் தேவையான அளவு தேன் ஆகியவற்றை கலந்து முகத்தில் தடவி 10 நிமிடம் கழித்து கழுவி வருவதனால், முகத்தில் உள்ள தேவையில்லாத முடி அனைத்தும் படிப்படியாக உதிர்ந்து விடும்.
முட்டையின் வெள்ளைக்கரு உதட்டிற்கு மேல் உள்ள முடியை நீக்க பயன்படுகிறது, அதுமட்டுமல்லாமல் முகத்தில் உள்ள கரும்புள்ளிகளையும் அழுக்குகளையும் நீக்க உதவுகிறது. முதலில் ஒரு கிண்ணத்தில் முட்டை வெள்ளை கருவை எடுத்துக் கொண்டு அத்துடன் 1/2 டீஸ்பூன் சோள மாவு மற்றும் ஒரு டீஸ்பூன் சர்க்கரை ஆகியவற்றை நன்றாக கலந்து உதட்டின் மேல் பூசிக் கொள்ள வேண்டும். சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரால் கழுவி விட வேண்டும்.
இவ்வாறு வாரத்திற்கு ஒருமுறை செய்து வந்தால் முகம் பளபளவென இருக்கும். அதுமட்டும்மலாமல் முகத்தில் ஏற்படும் கரும் புள்ளிகளும் ஓடி விடும்.
மேல் கூறியவற்றை செய்துவந்தால் உதட்டின் மேல் உள்ள முடி உதிர்ந்து விடும். அதுமட்டும் அல்லாமல் முகம் பளபளவென ஜொலிக்க தொடங்கும்.