உடல் பிரச்சனைகள் தீர…

Spread the love

உங்கள் உடல் நல பிரச்சனைகள்  தீர.. எந்த மூலிகையை எவ்வாறு பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.

பொடுகு மறைய

வேப்பம்பூவை தேங்காய் எண்ணெயில் போட்டு நன்கு காய்ச்ச வேண்டும்.

இளம்சூடு பதத்துக்கு ஆறியதும், அதை தலையில் நன்கு தேய்த்து அரை மணிநேரம் ஊறவைத்துக் குளித்தால், பொடுகுப் பிரச்னை தீரும்.

பொடுகால் ஏற்படும் பருக்கள் தவிர்க்கப்படும்.

பருக்கள் போக

எண்ணெய் நிறைந்த உணவுகளை அதிகம் உண்பதாலும் கூட பருக்கள் ஏற்படுகின்றன. மேலும், உடலில் சேரும் கொழுப்பு, மன இறுக்கம், மலச்சிக்கல் போன்றவற்றாலும்கூட பருக்கள் உண்டாகின்றன. இவற்றைத் தவிர்க்க, துத்தநாகம், பி காம்ப்ளெக்ஸ் நிறைந்த ஊட்டச்சத்துள்ள உணவுகளை சாப்பிட வேண்டும்.

கண் கருவளையம் மாற

கண்  கருவளையத்தைப் போக்க, ஒரு மெல்லிய வெள்ளைத் துணியை மிதமான வெந்நீரில் நனைத்து, கண்களின் மீது வைத்து ஒத்தடம் கொடுக்கலாம்.

சுருக்கம் நீங்க

நல்லெண்ணெயை லேசாக சூடு செய்து, கழுத்துப் பகுதியில் தடவி மசாஜ் செய்தால், சுருக்கம், கருப்பு வளையங்கள் படிப்படியாக நீங்கும்.

முகம் ஃப்ரெஷாக இருக்க

வெளியே செல்வதற்கு முன்பு, சுத்தமான நீரால் தயாரிக்கப்பட்ட ஐஸ்கட்டியால் முகத்தில் மசாஜ் செய்வதால் நீண்ட நேரம் முகம் ஃப்ரெஷ்ஷாக இருக்கும்.

மேலும் தெரிந்து கொள்ள…


Spread the love