அழகைக் கெடுக்கும் இடுப்புச் சதை

Spread the love

அடிவயிற்று பருமன் அல்லது இடுப்புப் பகுதியில் சதை காணப்படுவது என்பது பெண்களை பொருத்தவரை மெனோபாஸ் காலங்கள், பரம்பரைத் தன்மை, மன உளைச்சலில் இருப்பது, அளவுக்கு மீறி உணவு உட்கொள்வது போன்ற காரணங்களால் ஏற்படுகிறது. அடிவயிற்றையும், வயிற்றைச் சுற்றியுள்ள பகுதிகளில் அளவுக்கு அதிகமான கொழுப்புகள் தேங்கி விடுவதைத் தான் இடுப்புச் சதைக் கொழுப்பு என்கிறோம். உலகம் முழுவதிலுமே பரவலாக காணப்படும் மிகப்பெரிய பிரச்சனை உடல் பருமன் என்பது தான். அளவுக்கு அதிகமாக சாப்பிடுவது, உடற்பயிற்சி மற்றும் வீட்டுவேலைகள்செய்யாமலிருப்பது, ஆரோக்கியமற்ற வாழ்க்கைச் சூழல் போன்றவையே உடல் பருமனுக்கு முக்கிய காரணமாகின்றன. இடுப்புச் சதை கொழுப்பு இத்தகைய உடல்பருமன் வகைகளில் ஒன்று. இத்தகைய சதை கொழுப்பைக் குறைப்பது மிகவும் கடினமானது தான். இது பார்ப்பதற்கு புதுமையாகவும், இறுக்கமான உடைகளில் இருக்கும் பொழுது மன உளைச்சல், தடுமாற்றம் ஏற்படுத்தும். இடுப்புச் சதையானது தொங்கும் அளவுக்கு காணப்படும் பொழுது, அதைக் கரைப்பது என்பது அவ்வளவு எளிதல்ல. பெரும்பலானவர்கள், தங்களின் அழகைக் குறைக்கும் இடுப்புச் சதையின் கொழுப்பைக் குறைக்க, குறைந்த அளவு உணவுகளைச் சாப்பிடுவது அல்லது சாப்பிடாமலேயே ஓரிரு வேளைசாப்பிடுவதை தவிர்த்து விடுவதுமாக உணவுக் கட்டுப்பாட்டை மேற்கொள்கின்றனர். இது மிகவும் தவறான செயலாகும். இயற்கை முறையில், எளிமையான வழிகளில் எளிதில் கிடைக்கும் மூலிகைப் பொருட்களைப் பயன்படுத்தி இடுப்புச் சதைக் கொழுப்பை குறைக்க முடியும்.

இடுப்புச் சதை ஏற்படுவதற்குரிய காரணங்கள் என்ன?

1.    ஃபாஸ்ட் ஃபுட் எனப்படும் துரித வகை உணவுகளை அதிகம் உண்பது.

2.    கார்போஹைட்ரேட் அதிக உள்ள உணவுகளை அதிகம் சாப்பிடுதல்.

3.    அதிக கலோரிகள் கொண்ட உணவுகளை உட்கொள்ளுதல்

4.    கடின வகை உணவுகள் அதிக அளவு சாப்பிட்டபின்உடனே உறங்கச் சென்று விடுதல்.

5.    மது அருந்துதல்: மது அருந்துவதால், வளர்சிதை மாற்றத்தின் இயக்கங்கள் குறைவாகவும், மெதுவாகவும்செயல்படுவதால் உடல் பருமன் ஏற்படும். கூடுதலாக மது அருந்துவதால் ஏற்படும் கலோரிகளானது கரைக்கப்படாமல் அடிவயிறு, இடுப்புப் பகுதியைச் சுற்றியுள்ள பகுதிகளில் தேங்கி விடும்.

6.    பெண்களின் மாதவிடாய் முழுவதும் நின்று விடும் மெனோபாஸ் காலங்களில் ஹார்மோனின் செயல்களில் ஏற்படும் மாற்றங்கள் இடுப்பு, அடிவயிறைச் சுற்றில் கொழுப்பைச் சேர்த்து விடும்.

7.    பரம்பரை தன்மை காரணமாக இடுப்புச் சதை கொழுப்பு உருவாக வாய்ப்புகள் உள்ளன.

8.    அன்றாட வாழ்க்கையில் உடலுக்கு வேலை தராமலிருத்தல் அல்லது உடற்பயிற்சி அறவே செய்யாமலிருத்தல்.

9.    வாழ்க்கைச் சூழலில் காணப்படும் மாற்றங்கள் முதலியவையும் முக்கிய காரணமாக இருக்கலாம்.

.இடுப்புச் சதையை குறைக்க வழிகள் என்ன?

இங்கு நாம் கொடுக்கப்பட்டுள்ள ஒரு சில வழிமுறைகளை நடைமுறைப்படுத்தி, இரண்டு மூன்று மாதங்கள் வரை பொறுமை காப்பது நல்லது. ஏனெனில், உடலில் எந்தப் பகுதியிலும் உடல் பருமனைக் குறைப்பதுஎனில் ஒரே நாளில் முடியக் கூடியது அல்ல என்பதை முதலில் நீங்கள் நன்றாகபுரிந்து கொள்ள வேண்டும்.

1.    தேன்:நடுத்தர அளவுள்ள ஒரு தம்ளரில் முழு அளவுக்கு நீர் எடுத்து, அதனுடன் ஒரு எலுமிச்சம் பழம் பிழிந்த சாறை சேர்த்துக்கொள்ளவும். பின்பு அக்கலவையில், ஒரு மேஜைக் கரண்டி தேன் சேர்த்து நன்றாகக் கலக்கிய பின்னர், தினசரி காலையில் எழுந்தவுடன் முதல் வேலையாக வெறும் வயிற்றில் பருகி வரவும்.

2.    சூடான நீர்: வெறும் வயிற்றில் சுமார் ஒரு லிட்டர் அளவிற்கு சூடான நீர் அருந்தி வர  உடலில் உள்ள அசுத்தங்கள்வெளியேறி விடும். தினசரி போதுமான அளவு நீர் அருந்தி வர வேண்டும். குறிப்பிட்ட கால அளவுகளில் நீர் அருந்துவது, வளர்சிதை மாற்றத்தின் இயக்கத்தை ஊக்குவிக்கச் செய்கிறது. உடலில் தேங்கியிருக்கும் நச்சுப் பொருட்களை நீக்கி, உள்ளுறுப்புகளைச் சுத்தம் செய்கிறது.

3.    தக்காளி:புத்தம் புதிதாக, பறித்த தக்காளிப் பழங்களை சமைக்காமல், அப்படியே பச்சையாக சாப்பிடுவது இடுப்புச் சதைக் கொழுப்பைக் குறைக்க உதவும்.

4.     இஞ்சி:ஒரு வாயகன்றசிறு பாத்திரத்தை எடுத்து  நீர் விட்டு அதில் இஞ்சி அல்லது சுக்குப் பொடியைச் சேர்த்து. அத்துடன் தேவையான அளவு தேன் மற்றும் மிளகுப் பொடி சேர்த்து குறைவான வெப்ப நிலையில் (அடுப்பில்) சுமார் ஐந்து நிமிடம் வரை வைத்திருந்து எடுத்து, வடிகட்டிய பின் அருந்தி வர வேண்டும். தினசரி காலை, இரவு என்று இருவேளையும் தொடர்ச்சியாக செய்துவர வேண்டும். ( இடுப்பில் உள்ள கொழுப்பைக் குறைக்க தேனும், வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க இஞ்சி மற்றும் மிளகும் உதவுகிறது.)

5.    புதினா: ஒரு மேஜை கரண்டி தேன், விரலிடுக்கு அளவு மிளகு மற்றும் நசுக்கப்பட்ட புதினா இலைகள் சிறிது எடுத்து ஒரு கோப்பை கூடான நீரில் வைக்கவும். 5 நிமிடங்கள் வரை ஊற வைத்த பின், வடிகட்டிய சாறை அருந்தி வரவும். இடுப்புச் சதையை இது குறைக்கும். (புதினா அடி வயிற்றைச் சுற்றி சரி செய்து தேன், மிளகு கொழுப்பைக் கரைக்க உதவுவதுடன் வளர்சிதை மாற்ற நிகழ்வை ஊக்குவிக்கும்.)

6.    ஆப்பிள் சிடர் வினிகர்:உங்களதுவழக்கமான உணவுடன், ஆப்பிள் சிடர் வினிகர் எடுத்துக் கொள்ளும் பொழுது, உங்கள் வயிறு நிரம்பிய உணர்வு ஏற்படும். இதன் மூலம் உங்கள் பசி உணர்வுகட்டுப்படுத்தப்பட்டு, அதிகம் சாப்பிடுவதைக் குறைக்கும். இடுப்புச் சதையைக் குறைப்பது மட்டுமல்ல, இரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தவும் செய்கிறது.

7.    கறிவேப்பிலை:கறிவேப்பிலையை அதிக அளவில் சேர்த்துக் கொள்வதால் உடலில் தங்கியிருக்கும் நச்சுப் பொருட்களை வெளியேற்றும். இதன் மூலம் வயிற்றில் உள்ள தேவையில்லாத கொழுப்பைக் குறைக்கலாம்.

8.    ஏலக்காய்: உடலில் ஏற்படும் வளர்சிதை மாற்றத்தினை அதிக அளவில் ஊக்குவித்து  உடலில் உள்ள நச்சுப் பொருட்களை அழித்து வெளியேற்றுகிறது. உடல் எடையைக் குறைக்க உதவுகிறது.

9.    இலவங்கம்: கொழுப்பை எரிக்கும் பொருள் இலவங்கம் ஆகும். இலவங்கப்பட்டை அல்லது இலவங்கப் பொடியை அரை மேஜைக்கரண்டி எடுத்து தண்ணீரில் ஒரு நிமிடம் சேர்த்து ஊறப் வைக்கவும், அதனுடன் ஒரு மேஜை கரண்டி தேன் கலந்து வடிகட்டிய பின்னர், அதனை தினசரி காலை உணவுக்குப் பின்பும், இரவு தூங்கச்செல்லும் முன்பும் அருந்தி வர வேண்டும்.

10.   எலுமிச்சை: தினசரி எலுமிச்சைச் சாறு அருந்திவர, வயிற்றுப் பகுதி சதையைக் குறையும். தினசரி காலையில் ஒரு கோப்பை நீரில், எலுமிச்சை சாறும் ஒரு விரலிடுக்கு அளவிற்கு உப்பு சேர்த்து நன்றாக கலந்து அருந்தி வாருங்கள். இடுப்பில் தங்கும் கொழுப்புகள் குறையும். ஒரு தம்ளர் வெதுவெதுப்பான நீரில் இரண்டு மேஜைக் கரண்டி எலுமிச்சை சாறு சேர்த்து. மை போல கரைக்கப்பட்ட கருமிளகை ஒரு மேஜைக் கரண்டி அளவிற்கு சேர்த்து அதனுடன் ஒரு மேஜை கரண்டி அளவு தேன் சேர்த்து, அனைத்தையும், ஒன்றாகக் கலந்து தினசரி காலை வெறும் வயிற்றில் அருந்தி வர வேண்டும். (எலுமிச்சைச் சாறும் கருமிளகும் உடலில் வளர்சிதை மாற்ற இயக்கத்தை மேம்படுத்தும். எலுமிச்சைச் சாறில் உள்ள பாலிபெனால் என்ற வேதிப் பொருள் உடல் எடை கூடுவதை தடுக்கிறது. உடலில் இன்சுலின் சுரப்பைத் தூண்டி கொழுப்பை எரிக்கும் செயலுக்கு உதவி புரிகிறது.)


Spread the love